
சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலய நற்கருணைப் பெருவிழா மற்றும் பாதுகாவலரான புனித அந்தோனியாரின் திருவிழா திருப்பலிகள் இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது.
இதன்படி இன்றைய நற்கருணைப் பெருவிழா மாலை 5:00 மணிக்கு திருச்செபமாலையுடன் ஆரம்பமாகவுள்ளது. திருப்பலியை தொடர்ந்து நற்கருணை வழிபாடும் தொடர்ந்து நற்கருணைப் பவனியும் இடம்பெறவுள்ளது. நற்கருணைத் திருவிழாவில் “ஆன்மீக உணவு நற்கருணை” என்ற கருப்பொருளில் சிந்திக்கவுள்ளனர். நற்கருணை திருவிழாவை புனித அந்தோனியார் இளையோர் மன்றத்தினர் சிறப்பிக்கவுள்ளனர்.

புனிதரின் திருவிழா திருப்பலி நாளை 13.06.2025 வெள்ளிக்கிழமை காலை 6:15 மணிக்கு திருச்செமாலையுடன் ஆரம்பமாகி ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.
“புதுமைகள் புரிந்திடும் புனித அந்தோனியார்” என்ற கருப்பொருளில் அமையவுள்ள திருநாள் திருப்பலியை தொடர்ந்து திருச்சொரூப பவனியும் திருச்சொரூப ஆசீர்வாதமும் இடம்பெறவுள்ளது.