புனித அந்தோனியார் இளையோர் மன்ற முகநூல் பக்கம்

✝️ புனித செபஸ்தியார் திருநாள் நல்வாழ்த்துகள் ✝️(ஜனவரி 20)அஞ்சாத விசுவாசமும் தளராத தைரியமும் கொண்ட தூய செபஸ்தியார், கிறிஸ்துவுக்காக உயிர்நீத்த வீர சாட்சியாக திகழ்கின்றார். துன்பங்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் நடுவிலும், ஆண்டவர் ஒருவருக்கே அடிபணிந்து வாழ்ந்த அவரது வாழ்வு, இன்று நமக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது.இந்த புனித திருநாளில்,நாம் விசுவாசத்தில் உறுதியாக நிலைக்கவும்,தளர்ந்தவர்களை நம்பிக்கையில் தேற்றவும்,எந்நிலையிலும் இறைவன் மீது முழு நம்பிக்கை வைக்கவும்தூய செபஸ்தியாரின் பரிந்துரையை நாடி நிற்போம்.தூய செபஸ்தியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். 🤍🙏அனைவருக்கும் திருநாள் வாழ்த்துகள். ✨புனித அந்தோனியார் இளையோர் மன்றம், சுன்னாகம். ... See MoreSee Less
View on Facebook
புனிதர்களின் பாதையில்…இலங்கையின் திருத்தூதராகிய தூய ஜோசப் வாஸ் (ஜனவரி 18) அவர்களின் திருநாளை இன்று மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறோம்.ஜெபத்தில் வலிமை, விசுவாசத்தில் துணிவு, மக்கள் சேவையில் தியாகம் ஆகியவற்றால் அவர் கிறிஸ்துவின் அன்பை அனைவருக்கும் வெளிப்படுத்தினார். துன்பங்களிலும் persecution-இலும் தளராமல் நற்செய்தியை அறிவித்து, ஆயிரக்கணக்கான மக்களை நம்பிக்கையில் உறுதிப்படுத்தினார்.இந்த புனித திருநாளில்,நாமும் ஜெப வாழ்வில் உறுதியாய் நிலைத்து,ஏழை எளியவர்களுக்கு சேவை செய்யும் மனப்பாங்குடன்,நற்செய்தியின் ஒளியாக வாழ அருள் பெறுவோம்.தூய ஜோசப் வாஸ் அவர்களின் திருநாள்அனைவருக்கும் ஆசீர்வாதமும் அருளும் நிறைந்ததாக அமைய வாழ்த்துகள். 🤍புனித அந்தோனியார் இளையோர் மன்றம், சுன்னாகம். ... See MoreSee Less
View on Facebook
Photos from Holy Mary's post ... See MoreSee Less
View on Facebook

2 weeks ago

புனித அந்தோனியார் இளையோர் மன்றம், சுன்னாகம்.
பெருகட்டும்!ஏர் பிடிக்கும் கைகளுக்கு மட்டும் அல்ல;உயிர் காக்கும் மண்ணுக்கும்,உடல் நலம் காக்கும் இறைவனுக்கும் கதிரவனை தந்த இறைவனுக்கும்நாம் தலைவணங்கும் இந்நன்னாளில்,இயற்கையை ஆராதிக்கும் அனைவருக்கும்இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!தமிழன் என்ற பெருமிதம்ஒவ்வொரு முகத்திலும் என்றும் மிளிரட்டும்!இன்பம் பெருக,நலம் நிலைத்திட,உழைப்பின் பயன் இனிமையாய் கிடைக்க,இந்தத் திருநாள் அனைவருக்கும்மகிழ்ச்சியும் அமைதியும் அளிக்கட்டும்.புனித அந்தோனியார் இளையோர் மன்றம், சுன்னாகம். அந்தோனியாரின் இளையோர்கள் ... See MoreSee Less
View on Facebook
பதுவையாம் புனித அந்தோனியாரின் அற்புதங்கள் ஊனமுற்ற சிறுமியைக்குணப்படுத்தினார்.தினம் ஒரு அற்புதம்கோடி அற்புதர் அந்தோனியார் அருளின் முகம், கருணையின் மொழி,புனித அந்தோனியார்பதுவையின் பாதைகளில் நடந்தபோது,வானம் பூமியோடு மௌனமாய் பேசினது.பீட்டர் பதுவை நகர் வாசி,நெஞ்சம் நிறைந்த துயரம், கண்களில் மழை.நான்கு வயது மலர் மதுவானா,கை கால்கள் உறங்கிய நிலை,சிரிப்பு மட்டும் துடிக்கும் உயிர்.அந்தோனியார் முன்னால்தந்தையின் மன்றாடு விழுந்தது,தாயின் கண்ணீர் தரையில் துளித்தது.அருள் பார்வை குழந்தையைத் தழுவியதுகண்ணில் இரக்கம், உள்ளத்தில் ஒளி.மென்மையாய் தொட்டார்,சிலுவை அடையாளம் வரைந்தார்;“என் ஆண்டவரே !” எனும் செபம்காற்றைத் தாண்டி விண்ணைத் தொட்டது.நேரமே சாட்சியாய் நின்றது.அந்நேரமேஉறங்கிய கை விரல்கள் விழித்தன,மௌன கால்கள் நடையின் பாடம் கற்றன.மதுவானா எழுந்தாள்மலர் மலர்ந்தது போல,ஒளி நடந்தது போல.அதிர்ந்தது கூட்டம்,அதிராதது விசுவாசம்.நன்றியின் கீதம்வீதி முழுதும் பொங்கியது.தந்தையும் தாயும்இறைவனுக்கு புகழ் பாடி மகிழ்ந்தனர்.இன்று கூடஅந்த அருள் நடை தொடர்கிறது;துயரமென்ற இருளில்அந்தோனியாரின் பெயர்ஒளியாகிறது,நம்பிக்கையாகிறது.கோடி அற்புதர், கருணையின் காவலர்! ... See MoreSee Less
View on Facebook
பதுவையாம் புனித அந்தோனியாரின் அற்புதங்கள் நம்பிக்கையுடன் கேட்போருக்கு தூரம் தடையல்லதினம் ஒரு அற்புதம்பல மைல் அப்பால்ஒலித்தது மறையுரைகாதுகள் மட்டுமல்ல,இதயங்களையும் தேடியஅருளின் குரல்.அந்தக் குரலைக் கேட்கஏங்கினாள் ஒரு பெண்;ஆனால் அவள் இல்லம்அன்பற்ற தடைகளால்பூட்டப்பட்ட சிறை.முரடனாய் இருந்தான் கணவன்,வெளியே செல்லத் தடை;அவள் கால்கள் கட்டுண்டாலும்நம்பிக்கை மட்டும்அடிமையாக்கப்படவில்லை.“அந்தோனியாரின் மறையுரைஇன்று மூன்று கிலோ மீட்டர் அப்பால்”என்ற செய்திஅவள் நெஞ்சில்ஒளிப் பொறி ஏற்றியது.வீட்டின் மாடிக்கு ஏறினாள்பூமியிலிருந்து உயர்ந்துவிண்ணைத் தொடநம்பிக்கையின் படிகள்.கண்கள் மூடி மன்றாடினாள்:“புனித அந்தோனியார்!உமது மறையுரைநான் கேட்கஅருள் தாரும்...”அதிசயம்!காற்று தூதனானது,தூரம் கரைந்தது;ஒரு வார்த்தையும் தவறாதுஅந்தோனியாரின் குரல்மாடியில் முழங்கியது.அவள் கேட்டாள்மறையுரை மட்டும் அல்ல,அருளின் அமிர்தம்.கண்களில் வியப்பு,இதயத்தில் ஆனந்தம்.அந்நேரம்மனைவியைத் தேடி வந்தகணவன் மாடிக்கு ஏறினான்;அங்கே அவனும் கேட்டான்அதே மறையுரைஉள்ளத்தை ஊடுருவும் ஒளி.அறிவுரைகள்அகந்தையை உருக்கின,இறை அனுபவங்கள்கல்லான நெஞ்சைகரைத்தன.அன்றுஒரு பெண்ணின் ஜெபம்ஒரு குடும்பத்தின்விதியையே மாற்றியது.முரடன் மாறினான்,பக்தன் ஆனான்.இன்றும் அந்த குரல்காற்றில் மறையவில்லைநம்பிக்கையுடன் கேட்போருக்குதூரமும் தடையும்அருளுக்கு எதிரியல்லஎன்று சொல்லிக்கொண்டே.புனித அந்தோனியார்பல மைல் தாண்டியும்இதயத்தில் பேசும்அருளின் மறையுரையாளர். ... See MoreSee Less
View on Facebook
பதுவையாம் புனித அந்தோனியாரின் அற்புதங்கள் அன்னை மரியாளின்விண்ணேற்றத்தை அறிந்த அந்தோனியார்தினம் ஒரு அற்புதம்அந்தோனியாரின் கேடயம்,சிந்தையின் மூச்சு,செயலின் தொடக்கம்.தனி செபம், குழு செபம்நேரத்தைப் புனிதமாகப் பங்கிட்டஒரு வாழ்வு.எந்தச் செயலுக்கும் முன்மண்டியிட்ட மௌனம்;மறையுரை தொடங்கும் முன்தமக்கென வைத்தபிரத்தியேகச் செபம்அருளின் வாசல் திறக்கும் சாவி.சோதனையில் தளர்வோர் வந்தால்அறிவுரை அல்லமுதலில் செபம்.“செபவாழ்வு இல்லாதவர்அருள்வாழ்வில்இருளைச் சுமப்பார்”என்று உரைக்கும்ஒளியின் குரல்.பதுவைப் பதியில்புதுமைகள் பலதவறுகளைச் சுட்டி,சுடர்விளக்காய் நின்றுஞான மறுமலர்ச்சியைவிதைத்தவர்புனித அந்தோனியார்.அன்னை மரியாளின்விண்ணேற்ற இரகசியத்தில்அவர் நம்பிக்கைஆத்துமமும் சரீரமும்பரலோகத்தில்ஒளி பெறும் உண்மை.ஆனால் ஒருநாள்தியான நூலின்சில வரிகள்சிந்தையின் நிழலாய்சந்தேகமாய்த் தங்கின.அந்த நாளில்தனிமையின் அரங்கில்மண்டியிட்ட செபம்;சந்தேகத்தோடுநம்பிக்கை போராட,வானம் நெகிழ்ந்தது.மேகம் புடை சூழவெள்ளத்தின் மத்தியில்ஒளி மலர்ந்தது;அங்கே தோன்றினார்அன்னை மரியாள்.“மகனே! அஞ்சாதே,”என்ற அருள் மொழி“இறைமகன் மனிதனாகஎன்னிடம் அவதரிக்கபேழையாகப் பயன்பட்டஎன் உடல்கல்லறை அழிவைக் காணவில்லை.இன்றும் இறைமகனின்வலது பக்கத்தில்விண்ணரசியாய்வீற்றிருக்கிறேன்.”ஒளி மறைந்தது;சந்தேகம் கரைந்தது;நம்பிக்கைநதியாய் ஓடியது.அந்நாளில்விண்ணேற்றம் பற்றியசர்ச்சைகள் நடுவே,அந்தோனியார் கூறினார்:“இது உண்மைநான் கண்டு கொண்டேன்.அன்னை மரியாள்விண்ணகம் எடுத்துச் செல்லப்பட்டார்;இப்போதுவிண்ணரசியாய்வீற்றிருக்கிறார்.”கேட்டவர்கள்எண்ணம் மாற்றினர்;சந்தேகம் விட்டனர்;நம்பிக்கை அணிந்தனர்.இன்றும் அந்தச் செபம்காலம் கடந்து ஒலிக்கிறதுசந்தேகத்தில்ஒளி ஏற்றும்அருளின் சாட்சி,கோடி அற்புதர். ... See MoreSee Less
View on Facebook
பதுவையாம் புனித அந்தோனியாரின் அற்புதங்கள் வெட்டிய முடி அற்புதமாய் வளர்த்ததுதினம் ஒரு அற்புதம்மௌனமாய் சென்றுஅருளுரை கேட்டாள்அச்சத்தின் நிழலில்நம்பிக்கையைச் சுமந்து.அறிந்தான் கணவன்;சினம் பொங்கினான்அன்பின் கூந்தல்அடியோடு அறுந்தது.கண்ணாடியில் தெரிந்ததுவலி மட்டும் அல்ல;அவமானத்தின் முத்திரை.கண்ணீர் கதறிகருணையின் வாசலுக்குஓடினாள்கோடி அற்புதர் அந்தோனியரைகண்டு அவமானத்தில் நாணி குறுகி நின்றாள்வார்த்தை அல்லமுதலில் செபம்.கைகள் மடங்கிவானம் தழுவ,ஆசீர்வாதம்அமைதியாய் இறங்கியது.அதிர்ந்தது நேரம்வெட்டப்பட்ட கூந்தல்முன்போலவேமலரத் தொடங்கியது!அற்புதம்!நாணம் நன்றியாய் மாறி,துதிப்பாடல்இதயத்தில் பொங்க,அவள் வீடு திரும்பினாள்ஒளி சுமந்த தலைமுடியுடன்.கண்ணுற்றான் கணவன்உடைந்தது அகந்தை.“நான் செய்தது பாவம்”என்று உணர்ந்து,மனம் நொந்துமனமாற்றம் பெற்றான்.அன்று முதல்அன்பு ஆட்சியாய்,மரியாதைமொழியாய்;ஒற்றுமைவீட்டின் விளக்காய்.அந்தோனியாரின் நாமம்அவர்கள் இல்லத்தின்நம்பிக்கையாய்.இன்றும் சொல்லுகிறதுஅந்த அற்புதம்வன்முறை அல்ல,கருணையே வெற்றி;அருள் மறுமலர்ச்சி. ... See MoreSee Less
View on Facebook
பதுவையாம் புனித அந்தோனியாரின் அற்புதங்கள் தினம் ஒரு அற்புதம் (53)வெற்றி தரும் சிலுவைஅல்லும் பகலும் உழைத்தார் அந்தோனியார்,அயலான்மா ஈடேற்றமே அவர்தம் உயிரார்.நன்மை செய்தார், செபம் விதைத்தார்,துன்புறும் உள்ளங்களுக்கு நம்பிக்கை கொடுத்தார்.உடல் சோர்ந்தது, இளைப்பு வந்தது,களைப்பின் நிழல் அவர் மேல் விழுந்தது.ஆனால் அந்த இளைப்பின் மறுபக்கமாய்பசாசின் சோதனைகள் எழுந்தன தீயாய்.இரவு ஓய்விலும் கூட சாத்தான் விடவில்லை தன் சூழ்ச்சியை,மாயத் தந்திரம் கொண்டு வந்துதுன்புறுத்த நினைத்தான்.ஒரு தபசுகால நாளில்,நெடுநேர மறையுரை, போதனை செய்து,ஓய்வின்றி பாவப் பொறுத்தில்அருட்சாதனம் பலர்க்கு வழங்கி,நித்திரைக்கு அவர் சென்ற வேளையில்அச்சமின்றி சாத்தானவன்அருகே வந்து தொண்டை நெரித்தான்,கொல்ல நினைத்த இருள் நொடிஅந்த அறையை சூழ்ந்தது.அந்த வேளையிலும் அஞ்சாதவர்,கன்னிமரியாவின் திருநாமம் உச்சரித்து,திருச்சிலுவை அடையாளம் வரைந்தார்.இளமை முதல் பாடி வந்த“ஓ! மகிமை பொருந்திய ஆண்டவளே!”என்ற இனிய கீதம்அவர் உதடுகளில் எழுந்தது.அந்த நொடியிலேபிடி தளர்ந்தது,பசாசு பஞ்சாய் பறந்து ஓடியது.கண்ணைத் திறந்து அவர் பார்த்தபோதுஅப்படுக்கையறை முழுவதும்மகிழ்ச்சிகரமான பிரகாசம்,விண்ணுலக ஒளி நிறைந்தது.அது பசாசைத் துரத்தி,தம் தாசனுக்கு ஆறுதல் அளிக்கநேரடியாகப் பிரசன்னமானமோட்ச இராக்கினியின் பேரொளி.இந்த அற்புத நிகழ்வைஒரு குருவானவரிடம் அந்தோனியார் தாமேபின்நாளில் எடுத்துரைத்தார்.தபசுகாலம் முடிந்தபின்,உயிர்த்த ஞாயிறு தினத்தில்,பதுவை நகரின்குருக்கள், கலாசாலை அதிகாரிகள்,மற்றும் பொது மக்கள் பலரும்பிரான்சிஸ்குச் சபை மடத்தில்தங்கியிருந்த அந்தோனியாரிடம் வந்துதாம் பெற்ற ஞான வாழ்வுக்கானஅறிவுரைகளுக்கு நன்றி கூறினர்.“எங்கள் மத்தியில் தங்கியிரும்,”“தொடர்ந்து எங்களை வழிநடத்தும்,”என்று அவர்கள் பணிவுடன் வேண்டினர்.ஆனால் அவர் மென்மையாகச் சொன்னார்“என் பணி இன்னும் பல இடங்களில் உண்டு,அருள் எல்லோருக்கும் செல்ல வேண்டும்.”இறைவனின் நற்செய்திமுடிந்தளவும் எல்லோருக்கும்அதுவே அந்தோனியாரின்வாழ்வின் ஒரே குறிக்கோள்.சிலுவை அவரது வலிமை,மரியா அவரது அடைக்கலம்,நம்பிக்கை அவரது ஆயுதம்,அருள் அவரது வெற்றி. ... See MoreSee Less
View on Facebook
பதுவையாம் புனித அந்தோனியாரின் அற்புதங்கள் தினம் ஒரு அற்புதம்காய்ச்சலைக் குணப்படுத்தும் அருள் நீர்புளோரன்ஸ் நகரின் பாதையிலிருந்துபுறப்பட்டார் அந்தோனியார்,அருளின் விளக்காய்,அன்பின் தூதராக.தன் எல்லைக்குள் சேர்ந்தகிராமங்கள் பல,மடங்கள் பல,ஒவ்வொன்றையும் தரிசித்துஜெப வாழ்வில் ஒன்றிணைத்தார்.பசியுடன் காத்திருந்தோர்க்குவார்த்தை ஆனார்,வியாதியில் வாடியோர்க்குநம்பிக்கையாய் ஆனார்.பரீஸ் என்னும் ஊரில்ஒரு மடம் எழுந்தது,அருள் நிறைந்த அமைதிஅங்கு குடிகொண்டது.பிரெஸ்ஸியா ஊரில்மற்றொரு மடம் மலர்ந்தது,செபத்தின் வாசம்காற்றில் பரவியது.அந்த இடங்களில்பொங்கி எழுந்த ஊற்று நீர்,சாதாரண நீர் அல்ல செபம் தொட்ட புனித நீர்.அந்தோனியாரின் கரங்களில்அருள் மலர்ந்தது,அவர் சொன்ன செபத்தில்வியாதி விலகியது.காய்ச்சலில் நடுங்கிய உடல்கள்,அந்நீரால் அமைதி பெற்றன,வேதனையில் துடித்த உள்ளங்கள்,நம்பிக்கையால் வலிமை பெற்றன.இன்றும் அந்த நீரைமக்கள் தேடி வருகிறார்கள்,நோயோடு அல்ல நம்பிக்கையோடு செல்கிறார்கள்.காய்ச்சல் போன்ற துயர்கள்மெதுவாக விலகுகின்றன,செபமும் நம்பிக்கையும்மனதில் ஒளியாக எழுகின்றன.அருள் நீர் பேசும் கதை இது,அன்பு செய்த அதிசயம் இது,மருந்தல்ல நம்பிக்கையின் மொழி இது. ... See MoreSee Less
View on Facebook
பதுவையாம் புனித அந்தோனியாரின் அற்புதங்கள் தினம் ஒரு அற்புதம்பக்தி நடந்த பாதையில்மழையும் நனைக்கவில்லைபிரைவ் ஊர் மடத்தின் வாசலில்பசியின் நிழல் விழுந்த நாள்கள்,உணவு இல்லா நேரங்களில்குருக்களின் நெஞ்சம் சோர்ந்த நாள்கள்.அந்தோனியார்மேல் அன்பு கொண்டஒரு தாய் இருந்தாள் ஊரில்,அப்பமும், பழமும், காய்கறியும்அருளாய் அனுப்பும் வழக்கம்.ஒருநாள் பெருமழை பொழிந்தது,வானம் கருமை போர்த்தியது,“மழையில் நனைந்து நோய்வருமே”என்று பணிப்பெண் அஞ்சியது.ஆயினும் அந்த தாயாரின் சொல்கேட்டுகூடையைத் தலைமேல் சுமந்தாள்,நீரால் நிரம்பிய தெருக்களைக் கடந்துமடம் நோக்கி நடந்தாள்.மழை கொட்டியது இடியோடு,வழியெல்லாம் வெள்ளமாய்,ஆனால் அவள் ஆடை நுனியில்கூடஒருத் துளி நீரும் இல்லை வியப்பாய்!இதைக் கண்ட மக்கள் நின்றனர்,இதயம் அதிசயத்தில் நனைந்தது,பணிவோடு செய்த சேவைக்கேபாதுகாப்பாய் அருள் பொழிந்தது.அந்த தாயின் மகனான குருவும்குறிப்பு ஏட்டில் எழுதினார்,“பக்தி நடந்த பாதையில்மழையும் நனைக்கவில்லை” என்று.குருக்களுக்கு சேவை செய்வதைஅந்தோனியார் மிக விரும்புவார்என்பதை இந்நிகழ்வேநமக்குணர்த்தி நிற்கிறது.பணிவோடு செய்த பணிஅற்புதமாய் மலர்ந்தது,அன்பால் நடந்த சேவைஅருளாய் பாதுகாக்கப்பட்டது.கோடி அற்புதர் அந்தோனியாரின்கருணை நிழலில் நாம் வாழ,சேவையும் பக்தியும்நம் வாழ்வின் வழியாவதாக.கோடி அற்புதர் அருள் பெறுக ... See MoreSee Less
View on Facebook
பதுவையாம் புனித அந்தோனியாரின் அற்புதங்கள் தினம் ஒரு அற்புதம் குகையில் தோன்றிய அற்புத நீரூற்றுமறையுரை சொல்லச் செல்லும் வழியில்பிரைவ் எனும் கிராமம் வந்தார்,அமைதி நிறைந்த அந்த ஊரில்ஒரு மடம் அமைத்தார் அந்தோனியார்.மடத்தின் அருகேஒரு சிறு குகை,செபமும் தவமும்நிறைந்த இடம் அது.ஒரு நாள்தனிமையில் செபித்துக் கொண்டிருக்க,உடல் தளர,தண்ணீர் தேவைப்பட்டது.எவரையும் அழைக்கவில்லை,எதையும் நாடவில்லைஇறைவனை மட்டும்மனமார வேண்டினார்.அந்த நொடியிலேகுகைச் பாறையிலிருந்துநீரூற்று புறப்பட்டது,அருள் பொங்கியது.உலர்ந்த பாறைஉயிர் பெற்றது,நீராய் மாறிகருணை சொரிந்தது.இன்றும் அந்த நீரால்நோய்கள் குணமடைகின்றன,வரலாறு சொல்லும்அற்புத சாட்சி அது.மனிதன் தாகம் கொள்ள,இறைவன் கருணை பொழியும்அந்தோனியாரின் செபத்தில்பாறையும் பேசும். ... See MoreSee Less
View on Facebook
பதுவையாம் புனித அந்தோனியாரின் அற்புதங்கள் தினம் ஒரு அற்புதம் இளைய அருட்சகோதரரின் மன மாற்றம்ஏர்ள்ஸ் நகர மடத்தில்ஒரு இளம் அருட்சகோதரர்,துறவறப் பாதையில் நடந்தாலும்மனம் கலங்கித் துடித்தார்.இல்லற வாழ்வு இனிமை எனசாத்தான் விதைத்த எண்ணம்,அவரது உள்ளத்தில் நாள்தோறும்அலைபாய்ந்து வலுத்தது.மடம் விட்டு ஓடிவிடஇரகசியமாக எண்ணினார்,அந்த எண்ணம்இருளின் குரல்.அந்தோனியார் அறிந்தார்,கருணை கொண்டு தேடிச் சென்றார்,கலங்கிய சகோதரனைஅணுகி அமர்ந்தார்.துறவறத்தின் மகிமை,புனித வாழ்வின் உயர்வு,இறைவன் தரும் ஆனந்தம்எல்லாம் மென்மையாய் சொன்னார்.பின் ஊதி செபித்தார்“திடமும் ஞானமும் ஆனதூய ஆவியாரைப் பெறுவாயாக.”அந்த நொடிஅவர் மயங்கி,தரையில் விழுந்தார்,இறந்தவர்போல் நிசப்தமாய்.ஆனால் அந்த அமைதியில்வானம் திறந்தது,மோட்ச இராச்சியம்அவர்க்கு வெளிப்பட்டது.சொல்லற்கரிய ஒளி,அலங்காரமிக்க மகிமைமனம் நிறைக்கும் காட்சி.சிறிது நேரம் கழித்துமயக்கம் நீங்கி எழுந்தார்,கண்டதைச் சொல்ல முயன்றபோதுஅந்தோனியார் தடுத்தார்.மௌனத்தில் மறைந்ததுவானக ரகசியம்,ஆனால் மனத்தில்உறுதியாய் பதிந்தது.அன்றிலிருந்துசோதனை அகன்றது,வாழ்வு தெளிந்தது,அருட்சகோதரரின் உத்தம வாழ்வு.மனமாறுதல்வாள் கொண்டு அல்ல,கருணை,செபம்,அன்பு கொண்டு என்பதை மீண்டும் நமக்கு காண்பித்தார்கோடி அற்புதர் அந்தனியார் ... See MoreSee Less
View on Facebook
பதுவையாம் புனித அந்தோனியாரின் அற்புதங்கள் தினம் ஒரு அற்புதம்மோகப் பாவச் சோதனையில் நின்றும் மீட்டார் புனித அந்தோனியார்சோலின் யாக் எனும் ஊரில்ஆசீர்வாதப்பர் மடம் ஒன்று இருந்தது,அன்புடன் அந்தோனியாரைவிருந்துக்கு அழைத்தது.பரிசுத்த வாழ்க்கைஅவரில் கண்டனர்,அது இறைவனில் அருள்,இறைவனின் ஒளி.அந்த ஒளியை நோக்கிஒரு அருட்தந்தை வந்தார்,மனச் சுமையுடன்அந்தரங்கமாய் சொன்னார்.“அல்லும் பகலும்மோகச் சோதனை,என்னைக் கலங்கச் செய்கிறது,தப்ப முயன்றும்வீழும் பயம் தொடர்கிறது.”“இந்தக் கொடிய பாவத்திலிருந்துஎன்னை மீட்கும் வழிஎனக்குச் சொல்லுங்கள்”என்று கண்ணீருடன் வேண்டினார்.கருணையால் உருகியபுனித அந்தோனியார்,ஞான வார்த்தைகளால்அவரை ஆற்றினார்.பின் தம் அங்கியைஅவருக்குக் கொடுத்து,“இதை அணிந்துஇறைவனை நம்புங்கள்” என்றார்.அந்த அங்கியை அணிந்த நாள் முதல்நீண்ட காலச் சோதனைஅவரை விட்டு அகன்றது,வேதனை மறைந்தது.அமைதி வந்தது,ஒழுக்கம் மலர்ந்தது,பரிசுத்த வாழ்வுஒளிர்ந்தது.மோகத்தை வெல்லும்வாள் அல்லகருணை,ஆசீர்வாதம்,நம்பிக்கை.அந்தோனியாரின்அன்பு வழியேபலவீனம்பலமாகியது. ... See MoreSee Less
View on Facebook
பதுவையாம் புனித அந்தோனியாரின் அற்புதங்கள் தினம் ஒரு அற்புதம் விருந்து உணவில் சொட்டிய இரத்தம்ஒரு செல்வந்தன் அழைத்தான்அந்தோனியாரை விருந்துக்குபலமுறை இயலாதது,ஒருநாள் கருணை இசைந்தது.மதிய நேரம்,செல்வந்தன் வீடு நிறைந்தது,விருந்தினர்கள் கூடிபெருமை பொங்கியது.பக்தியுடனும் மரியாதையுடனும்அந்தோனியார் வரவேற்கப்பட்டார்,அடக்கத்தின் உருவாய்அமைதியுடன் அமர்ந்தார்.விருந்து மேசைபிரமாதமாய் மின்னியது,அந்தோனியார் இறைபுகழ் பாடிஉணவை ஆசீர்வதித்தார்.பின்னர் சொன்னார்சிறு உரையாய்“செல்வம் சேர்க்கும் வழிகள்எல்லாம் நேர்மையா?ஏழைகளின் உழைப்பும்,அநாதைகளின் கண்ணீரும்,அநியாய வட்டியும்இச்செல்வத்தில் கலந்ததல்லவா?இவ்வாறு வந்த செல்வம்நிலைக்காது,இறைவனின் இராச்சியத்துள்புகுவது எத்துணை கடினம்.”அமைதி நிறைந்த மேசையில்உணவை நோக்கினார்,கையில் எடுத்தார்,இறைவனை வேண்டினார்.அச்சமயம்அவர்பிழிந்த உணவிலிருந்துசொட்டுச் சொட்டெனஇரத்தம் வடிந்தது.அதிர்ச்சி!அமைதி!நிசப்தம்!அப்போது அந்தோனியார் சொன்னார்“இதோ!ஏழைகளின் இரத்தம்சொட்டுச் சொட்டென வடிகிறது.இந்த உணவைநான் உண்ணமாட்டேன்.”அவ்விடம் விட்டுஅமைதியாய் நடந்தார்,விருந்து நிறைந்த மேசையில்மனச்சாட்சியை விட்டுச் சென்றார்.செல்வம் அல்லநீதியே உணவு,கருணை இல்லாத விருந்துஇரத்தம் தான். ... See MoreSee Less
View on Facebook
பதுவையாம் புனித அந்தோனியாரின் அற்புதங்கள் தினம் ஒரு அற்புதம் மரித்த வாலிபனுக்கு உயிர் தந்த கோடி அற்புதர் அந்தோனியார் அரிய அற்புதங்கள்எப்போது நிகழும் எனமனிதன் அறியான்இறைவன் திட்டம்அன்பின் மொழி.கருணையின் கருவியாய்அந்தோனியார் நின்றார்,குருமடத்தில் கற்பித்தும்,ஊர்களில் உரையாற்றியும்.வெர்செல்லி நகரம்விசுவாசம் சோதிக்கப்பட்ட காலம்,வேத விரோதத்தின் நிழலில்கிறிஸ்தவர் கலங்கிய நாட்கள்.அந்நேரம் தைரியம் ஊட்டஇறைவன் அனுப்பினார்அற்புதரான அந்தோனியாரைஒளியாய், நம்பிக்கையாய்.ஒரு நாள் பிரசங்கம் நடந்து கொண்டிருக்க,மரித்த வாலிபனின் உடலைஅடக்கத்திற்குக் கொண்டு சென்றனர்அழுகையால் சூழ்ந்த பெற்றோர்.அந்தோனியார் கண்டார்தாங்க முடியாத துயரத்தை,உரை நிறுத்திகருணை பேசினார்.மௌனமாகச் செபித்து,பிரேதத்தின் அருகில் நின்று,இரு கைகளும் விரித்து,அவர் சொன்னார்“கிறிஸ்து நாதரின் நாமத்தால்,இளைஞனே, எழுந்திரு!”அதிர்ச்சியாய் அந்த நொடிமரணம் ஒதுங்கியது,உயிர் திரும்பியது,வாலிபன் எழுந்து நின்றான்.கூடிய மக்கள்அமைதி இழந்தனர்,ஆச்சரியத்தில் உறைந்தனர்,பின்னர் ஆனந்தமடைந்தனர்.“இவ்வளவு வல்லமையுள்ளஅர்ச்சியசிஷ்டரைத் தந்தஉன்னத இறைவனுக்குபுகழும் நன்றியும்!”என்று பாடினர்.மரணம் கூடகேட்கும் இடத்தில்,கருணை பேசினால்உயிர் மீளும்கோடி அற்புதர் அந்தோனியார் அன்பின் வழியாக.கருணை பேசும் இடத்தில்மரணமும் பின்வாங்கும்.புனித அந்தோனியாரின்இறை நம்பிக்கையும்கிறிஸ்து நாதரின் நாமமும்உயிரை மீட்ட அற்புதம்.இவ்வாறே இன்று நம்மிடமும்நம்பிக்கை உயிர்ப்படையட்டும். ... See MoreSee Less
View on Facebook
பதுவையாம் புனித அந்தோனியாரின் அற்புதங்கள் தினம் ஒரு அற்புதம்“இயேசு நசரேன் – யூதர்களின் அரசர்”பிரான்ஸ் தேசம், ஏர்ள்ஸ் நகரம்,மடத்தின் மண்டபம் நிறைந்த நாள்;சபையின் மாநாடு கூடிய வேளைஅந்தோனியார் உரை தொடங்கினார்.“இயேசு நசரேன்,யூதர்களின் அரசர்”என்று மையம் கொண்டுவார்த்தைகள் ஒளியாகப் பொழிந்தன.சிலுவைப் பாதை,கிறிஸ்துவின் பாடுகள்,வேதனைக்குள் ஒளியும்மீட்பின் மகிமையும்இதயம் உருக,கண்கள் நனைய,உள்ளங்கள் அனைத்தும்இறைவனை நோக்கின.அந்நேரம்மொனால்டோ எனும் துறவி,மேல்நோக்கி கண் உயர்த்தினார்.வானத்தில்கைகள் சிலுவையாய் விரிந்து,ஒளி முகம் தாங்கி,மிதந்து வந்தார் பிரான்சிஸ் அசிசியார்.சபையார்மீதுசிலுவை அடையாளம் வரைந்து,ஆசீர்வதித்தார் அமைதியாய்பின்னர் ஒளியாய் மறைந்தார்.அங்கிருந்த யாவரும்புத்துணர்வு பெற்றனர்,மனமகிழ்ச்சிஅவர்களை நிறைத்தது.பின்னாளில்மொனால்டோ கூறிய சாட்சி,பொனவென்சர் உறுதி செய்த உண்மை,நிகழ்வை முத்திரையிட்டது.சிலுவையில் அறைந்தஆண்டவர்மீது கொண்டஅதிக அன்பின் சின்னமேபுனித பிரான்சிஸ் அசிசியார்.இறுதிக் காலம் அண்மித்ததால்இறுதி ஆசீர்வாதமாய்,சபையாருக்கு அருளியவானக காட்சி அது.மேலும்அந்தோனியாரின் உயர்ந்த உரைமேல்பிரான்சிஸ் அசிசியார் கொண்டஅங்கீகாரத்தின் ஒளிச்சின்னம்.சிலுவை பேசினால்வானமும் பதில் தரும்புனிதரின் அந்தோனியாரின் அன்பில்இறைமாட்சி வெளிப்படும். என்பதே உறுதி. ... See MoreSee Less
View on Facebook
பதுவையாம் புனித அந்தோனியாரின் அற்புதங்கள் தினம் ஒரு அற்புதம்செடிகளுக்கு உயிர் தந்த அந்தோனியார்இயேசுவின் பாதம் பின்தொடர்ந்து,ஏழ்மையின் அரணில் வாழ்ந்தார் அந்தோனியார்;கல்லே தலையணை,தரையே படுக்கைதவமே வாழ்க்கை ஆனது.சலிப்பறியாத சேவை,இடையறாத கடுந்தவம்;உடல் குன்றினாலும்உள்ளம் குன்றவில்லை.“என்னைப் பலப்படுத்துகிறவரைக் கொண்டுஎன்னால் எல்லாம் செய்ய முடியும்”என்ற நம்பிக்கைஅவரின் மூச்சாயிற்று.பதுவை நகரில்மரியன்னை மடத்தின் நிழலில்எழுத்தும், செபமும்,மறையுரையும் தொடர்ந்தன.குறித்த நேரத்தில்மக்கள் கூடினர்அருள் சொற்கள் கேட்கஇதயங்கள் திறந்தன.ஆனால் அந்தக் கூட்டத்தின் காலடியில்பாசத்துடன் வளர்த்தபச்சைச் செடிகள்பாழாய் விழுந்தன.பட்டுப்போன இலைகளைப் பார்த்துதுறவியர் பதறினர்;அவர்களின் துயரம்அந்தோனியாரின் நெஞ்சைத் தொட்டது.அருள் கையால்செடிகளைத் தொட்டார்;வறண்ட மண்ணில்உயிர் விழுந்தது.அற்புதம்!உலர்ந்த தண்டு துளிர்த்தது;மரணத்திலிருந்துவாழ்வு மீண்டது.செடிகள் மட்டுமல்லஅந்த இடத்தில்வாழ்வும் துளிர்த்தது;தவ வாழ்வு விரும்புவோர்க்கெனதவமடம் எழுந்தது.இலைகளுக்குக் கூடஉயிர் கொடுத்தவர்உள்ளங்களுக்குஒளி தந்தார் அந்தோனியார். ... See MoreSee Less
View on Facebook
பதுவையாம் புனித அந்தோனியாரின் அற்புதங்கள் தினம் ஒரு அற்புதம் திருந்திய திருடர்கள்அந்தோனியார் மறையுரை ஒலிக்க,வணிகச் சாலை மௌனமானது;கடைகள் மூடப்பட்டன,இதயங்கள் திறந்தன.வர்த்தகர், சிறு வியாபாரிவிற்பனையை விட்டு விலகி,அருள் சொற்கள் கேட்கஅவர்கள் கூடினார்கள்.முன்பு இருளில் நடந்தவர்கள்,களவின் பாதை தேர்ந்தவர்கள்,அவருடைய ஒரு வார்த்தையிலேஒளியை கண்டவர்கள் ஆனார்கள்.ஒருநாள்திறந்த வெளி அரங்கம்;மக்கள் வெள்ளமாய் திரண்டனர்,அவர்கள் நடுவேதிருடர் கும்பலும் கலந்து நின்றது.அந்தோனியார் உணர்ந்தார்,அறிந்தார்,அன்றைய உரைஉள்ளங்களை அறுக்கும் வாளாக வேண்டும் என்று.“களவு செய்யாதிருப்பாயாகஇது பத்துக் கட்டளைகளுள் ஒன்று”என்று தொடங்கி,பிறர் பொருள் பறிப்பின்வலி, கண்ணீர்,இழப்புகளை உரைத்தார்.“களவுஒரு கை நீட்டல் அல்ல;பல நேரங்களில்கொடூரத்துக்கும்கொலைக்கும் வழிவகுக்கும்”என்று எச்சரித்தார்.இறுதியில் அவர் குரல் மென்மையாயிற்று“இயேசுவின் வலப்புறம் சிலுவையில் அறையப்பட்டகள்வன் தீமாஸ்,இயேசுவிடம் மன்றாடினான்;மன்னிப்பைப் பெற்றான்.அவனைப் போலஉள்ளம் மாறி மன்றாடுவோர்யாவரும்நிச்சயம் மன்னிக்கப்படுவர்”என்றார்.அந்த வார்த்தைகள்திருடர்களின்நெஞ்சை உடைத்தன;களவின் சங்கிலிஅங்கே அறுந்தது.பலர் முன் வந்து,கண்ணீருடன்அந்தோனியாரின் பாதம் பணிந்து,மன்னிப்பு கேட்டனர்அன்றே, அவ்விடத்திலே.ஆண்டுகள் கழித்துபிரான்சிஸ்கன் சபைத் துறவியிடம் ஒரு திருடன் சாட்சி சொன்னான்:“அன்றே நான் திருந்தினேன்” என்று.“ரோம்நகர் புனித யோவான்,புனித பவுலின் கல்லறைகளைபன்னிரண்டு முறை தரிசிக்கஅந்தோனியார் எனக்கு தண்டனை அளித்தார்.அதை நிறைவேற்றியபின்இன்று நான்மன அமைதியுடன் வாழ்கிறேன்”என்று அவன் கூறினான்.அந்தோனியார்தண்டிப்பவர் அல்ல;திருத்துபவர்.களவையும்அருளால் கரைத்தகோடி அற்புதர் அந்தோனியார் ... See MoreSee Less
View on Facebook
Scroll to Top