சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலயத்தின் திருப்பாடுகளின் காட்சி

சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலயத்தின் 175ஆவது யூபிலி ஆண்டின் நிறைவில் நம் முன்னோர்கள் கொண்டிருந்த ஆழ்ந்த விசுவாசம். ஆன்மீகத்தேடலின் வாஞ்சை. தமது ஆலயத்தின் பால் அவர்கள் கொண்டிருந்த பற்று உறுதி ஆகியனவற்றிற்கு எடுத்துக்காட்டாக சில சின்னங்கள் விளங்குகின்றன. ஆலயப்பீடத்தில் வைக்கப்பட்டுள்ள பழமை வாய்ந்த சிங்காசனம். அதில் ஏற்றி வைக்கப்பட்டுள்ள சுரூபங்கள். அச்சிங்காசனமானது முன்னைநாள் பங்குத் தந்தை அருட்பணி பெஞ்சமின் அவர்களின் காலத்தில் 1936ஆம் ஆண்டு முல்லைத்தீவில் இருந்து மாட்டு வண்டிலில் மூன்றுதடவைகள் இங்கு எடுத்து வரப்பட்டதாக கூறப்படுகின்றது. சிங்காசனத்தில் ஏற்றி வைக்கப்பட்டுள்ள பெரிய அந்தோனியார் சுரூபமானது யாழ். குருநகரிலிருந்து 1936ஆம் அண்டு தேரில் வைத்து இங்கு இழுத்துவரப்பட்டதாக கூறப்படுகின்றது.

சிங்காசனத்தில் கொலு கொண்டு வீற்றிருக்கும் ஏனைய சுரூபங்களும் வேறு எந்த ஆலயத்திலும் இல்லாதவாறு அமைந்துள்ளது. கல்லறை ஆண்டவர் திருச்சுரூபமும், கல்லறையும், காணிக்கை மாதா திருச்சுரூபமும் கூடும். புனித அந்தோனியார் திருச்சுரூபமும். கூடும் திருஇருதயஆண்டவர் சுரூபமும், கூடும். இச்சுரூபமும் கூடும் ஏற்றி வைக்கப்பட்டிருந்த சிங்காசனமானது விஷமிகளால் நாசமாக்கப்பட்டமையினால் கூடானது புதிதாக அமைக்கப்பட்ட மேசையில் வைக்கப்பட்டுள்ளது. கொடிமரம், முன்பிருந்த சிலுவை மரம், ஆசந்திக்கட்டில், ஆசிநீர்த் தொட்டி, பித்தளையினாலான திவ்விய நற்கருணை விளக்கு. ஆலய மணி, பிரேத வண்டில் இவை தவிர முடக்குப்பாஸ் காண்பிக்கப்படும் உருவங் களின் தலைகள், கைகள் இல்லாத உருவங்களின் தலைகள், கைகள் அனைத்தும் மரத்தினால் செதுக்கப்பட்டவை போன்றவை அனைத்தும் அவர்களின் விசுவாசத்தின் சின்னங்களாக, ஆன்மீகத்தேடலுக்கு உந்துசக்தியாக அமைந்தன.

தபசு காலங்களில் எமது ஆலயத்தில் ஜெத்சமனித்தியானம், யேசுநாதர் சிலுவை சுமக்கும போது தேவமாதா மகனைத் தேடிச் செல்லும் காட்சி, கல்லறை ஆண்டவர் திருச்சுரூபத்திற்கு சில்லுகள் பூட்டி வீதிகளில் இழுத்து தத்ரூபமாக காண்பிக்கப்பட்டன. பெரிய வெள்ளியன்று திருப்பாடுகளின் காட்சிகள், நாதர் சிலுவையில் மரணிக்கும் போது மொழிந்த 7 வசனங்களும் 7 வாள்கள் மாதாவின் இருதயத்தை ஊடுருவுவது போன்று வாள்கள் விழுத்திக் காண்பிக்கப்பட்டதுடன் திருவருகைக காலங்களில் பெத்லெகேம் காட்சிகள் போன்றனவும் காண்பிக்கப்பட்டன.

இவைகள் அனைத்தும் நாட்டு நிலைமை. இடப்பெயர்வு காரணமாக ஸ்தம்பித்துப் போயிருந் ததுடன் வரலாறு காணாத இடப்பெயர்வின் பிற்பாடு 2000ஆம் ஆண்டில் எமது முன்னைநாள் பங்குத்தந்தை அருட்பணி ஞானப்பிரகாசம் காலத்தில் மீண்டும் தபசு காலத்தில் ஜெத்சமனிக் காட்சிகளும் திருவருகைக்காலத்தில் பெத்லெகேம் காட்சிகளும் காண்பிக்கப்பட்டன. ஆலயத்தில் காலாகாலமாக பழைய சினுவை மரமானது இடப்பெயர்வின் போது நாசமாக்கப்பட்ட நிலையில் முன்னைநாள் பங்குத்தந்தை அருட்பணி கான்ஸ்போவர் காலத்தில் 2007ஆம் ஆண்டு அப்போதைய ஆலய அருட்பணிச் சபையினரால் மீண்டும் புதிதாக சிலுவை மரமானது செய்யப்பட்டு பெரிய வெள்ளியன்று திருப்பாடுகளின் காட்சிகள் முன்பு போல் காண்பிக்கப்பட்டு வருகின்றது. 2007ஆம் ஆண்டு முதல் அல்லேலூயாச் சனி அன்று இரவு நடைபெறும் பாஸ்கா திருப்பலியின் போது உயிர்த்த யேசு கல்லறையில் நின்று எழுந்து முன்னோக்கி நடந்து வருவது போன்ற காட்சிகள் காண்பிக்கப்படுவதும் எமது இளம் சந்ததியினரின் ஆன்மீக வாழ்விற்கு ஓர் எடுத்துக்காட்டாக அமைவதுடன் அவர்களின் திறமைகளையும் எடுத்தியம்புகின்றன.

இவ்வாறாக பலபெரியவர்களினால் வழிநடாத்தப்பட்ட இக்காட்சிகள் இடப்பெயர்வின் பின்னரும் முன்னைநாள் பங்குத்தந்தை அருட்பணி ஞானப்பிரகாசம் (அவுஸ்திஒரேலியர்) அவர்களின் காலத்தில் மீண்டும் புதிதாக அமைக்கப்பட்டு காட்சிகள் காண்பிக்கப்படுகின்றன.

திரு. யேசுரட்ணம் றட்ணபோஸ்

Scroll to Top