அருட்சகோதார் சவியேல் சின்னப்பர் C.R பங்கின் முதல் துறவற சகோதரர்
அருட்சகோதரர் சவியேல் சின்னப்பர் C.R 1915ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நான்காம் நாள் யாழ்.குடாநாட்டில் புகழ் பெற்ற நகராம் சுன்னாகத்தில் மிகவும் பக்தியும். ஆன்மீக வாஞ்சையும் இறைவளமும் நிறைந்த குடும்பத்தில் பிறந்தார். பேதுறு ஆனாசி தம்பதியினரின் ஏழு மக்களுள் மூன்று ஆண் சகோதரர்களையும் மூன்று பெண் சகோதரிகளையும் கொண்டு ஐந்தாவதாக இவர் விளங்கினார். தன்னுடைய சிறுபிராயத்தில் அவர் தம் சமூகத்தில் இயல்பாகவே காணப்பட்ட ஆழ்ந்த பக்தியும் இறைபயமும் இறை அறிவும் கொண்ட விசுவாச பாரம்பரியத்தில் வளர்த்தெடுக்கப்பட்டார்.
தன்னுடைய ஆரம்பக்கல்வியை சுன்னாகம் றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் ஆரம்பப் பாடசாலையிலும் இரண்டாம் நிலைக் கல்வியை அக்காலத்தில் இப்பாடசாலையோடு சேர்ந்து இயங்கிய ஆங்கிலமொழி மூலப் பாடசாலையான புனித அல்பிரட் பாடசாலையிலும் (St.Alfred’s School, Chunnakam), பின்னர் தெல்லிப்பளை யூனியன் கல்லூரியிலும் பெற்றுக்கொண்ட இவர் தன்னுடைய வாலிப காலத்தில் சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலயத்துடன் உள்ள ஆலய மண்டபத்தில் இரவுப் பாடசாலை இயங்கிய காலத்தில் அங்கு ஆங்கிலம் கற்றுக்கொடுத்தார் என்றும் பின் தனது மைத்துனருடன் இணைந்து வியாபாரத்தில் ஈடுபட்டு சுன்னாகத்திலும், திருகோண மலையிலும் அமைந்திருந்த அவரது கடைகளில் அவருக்குப் பக்கபலமாக இருந்திருந்தார் என்றும் அவர் உறவினர் குறிப்பிடுகின்றனர். தனது வாலிப காலத்தில் ஆலய வளாகத்தில் வருடாவருடம் நடைபெற்று வந்த விளையாட்டுப் போட்டி நிகழ்வுகளையும் முன்நின்று நடாத்தி வந்தார் எனவும் குறிப்பிடுகின்றனர்.
இவ்வாறு தனது இளமைக்காலத்தில் சிறப்பாக விளங்கியபோது இறை அழைத்தலின் குரலுக்கு செவிமடுத்தார். இத்துறைகளில் சிறப்புற்று ஒரு சிறந்த எதிர்காலம் அவர் முன் விளங்கிய போதும் அவர் இறைவன் வகுத்த திட்டத்தின்படியே வழிநடந்து தோலக்கட்டியில் அமைந்துள்ள செபமாலைதாசர் துறவற சபையின் ஆச்சிரமத்தில் 1943இல் தன்னை இணைத்துக்கொண்டார்.
செபமாலைத்தாசர் சபையானது 1928 மாசி 2 அன்று தவத்திருத்தந்தை BA தோமஸ் OMI அடிகளாரால் (1886-1964) நிறுவப்பட்டது. தந்தை அவர்கள் பரிசுத்தத் திருத்தந்தை பத்திநாதர் XI அவர்களின் “றேறும் எக்ளேசியே” (Rerum Ecclesiae – 1926) என்னும் திருச்சுற்று மடலினால் தூ ண்டப்பட்டு மேதகு ஆயர் கியோமர் O.M. I ஆண்டகையின் வழிநடத்தலுடன் ஆசியாவிலேயே முதலாவதான காட்சி தியான யோக சபையை ஆரம்பித்து அதன் முதல் ஆச்சிரமத்தை வசாவிளான் தோலகட்டியில் நிறுவினார். செபத்துடனும் தவத்துடனும் கூடிய தாழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு நற்கருணையுள் உறைந்து மரியாளின் காட்சி தியான அன்பு வாழ்வை பரிகார வாழ்வாக வாழ்வதையே அதன் அருளாகக் கொண்டதே இந்த செபமாலைதாசர் சடைய
இச்சபையில் தவத்திரு தந்தை B A தோமஸ் O M | அடிகளாரின் வழிநடத்தலில் தன்னுடைய இறை அழைத்தலை உயத்துணர்ந்து உறுதிப்படுத்தியதன் வழியாக 1944ல் தன்னுடைய நவசன்னியாச வாழ்வை ஆரம்பித்தார் தாழ்ச்சி எனும் புண்ணியத்தை அடிப்படையாகக் கொண்டு பரிகார வாழ்வை வாழ்வது எனும் செபமாலைத்தாசர் சபையின் நோக்கைத் தெளிவுற அறிந்துகொண்டு செபமாலை அன்னையுடன் ஒன்றித்து நற்கருணை ஆண்டவரோடு சங்கமமாகின்ற வாழ்க்கை முறையை அறிந்து அச்சபைக்கு தன்னை அர்ப்பணித்து 1945ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 6ஆம் நாள் தன்னுடைய முதல் அர்ப்பண வாக்குறுதிகளை மேற்கொண்டார். சனியேல் என்ற தனது இயற்பெயருடன் சின்னப்பர் எனும் துறவறசபை வழங்கிய பெயருடன் சேர்த்து அருட்சகோதார் சவியேல் சின்னப்பர் C.R என அழைக்கப்பட்டார். தொடர்ந்து அச்சபையில் காட்சித்தியான யோகவாழ்வில் தன்னை நன்கு பயிற்றியவராக 1951ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 6ஆம் திகதி தன்னுடைய நித்தியத்திற்குமான பகிரங்க வாக்குறுதிகளை அர்ப்பணம் செய்தார்.
அக்காலத்தில் ஆசியாவிலேயே தனியொரு கத்தோலிக்க காட்சித் தியான யோக ஆச்சிரமமாக விளங்கிய செபமாலைத்தாசர் துறவற சபையின் தோலகட்டி ஆச்சிரமத்தில் பல இந்திய இலங்கை சகோதரர்கள் இணைந்து ஒரு குழுமமாக வாழ்ந்தார்கள். அக்குழுமத்தில் அருட்சகோதரர் சவியேல் சின்னப்பர் C.R மிகவும் முன்னுதாரணமான வகையில் வாழ்ந்தார் என்று அவருடன் வாழ்ந்த ஏனைய சகோதரர்கள் சாட்சியம் பகர்கின்றனர். அச்சபையின் ஒழுங்குக்கு அமைய பகல் இரவு நேரங்களில் ஒவ்வோர் மணித்தியாலம் திவ்விய நற்கருைைண சந்திப்பை மிகவும் பக்தி உருக்கத்துடன் நற்கருணை ஆண்டவரோடு ஒன்றிக்கும் மன நோக்கோடு அனுசரிப்பார் எனவும், அவர் நோய்வாய்ப்பட்டு ஓய்விலிருந்த காலத்திலும் தான் “செபத்திற்கு போகவேண்டும், செபத்திற்கு போகவேண்டும்” என அடிக்கடி கூறி தன் மேலாளரிடம் அனுமதி கேட்டுக்கொள்வாராம் என அச்சகோதரர்கள் குறிப்பிடுகின்றனர்.
அக்காலத்தில் ஆச்சிரம திருவழிபாட்டிலும் மாலை இறைபுகழ் பாடலிலும், கிரகோரியன் இசை (Gregorian Chant) பாடப்படும் வேளைகளில் அவ் இசையைப் பாடுவதற்கு இவரே நீண்ட காலம் தலைமை வகிப்பவராக இருந்தார்.
இன்று செபமாலைத்தாசர் சபையில் அங்கத்தவர்களாக, இவ் அருட்சகோதரரோடு அன்று வாழ்ந்தவர்களும் சரி, அவரிடம் பயிற்சி பெற்றவர்களும் சரி. இவரைப்பற்றி குறிப்பிடும் போது அருட்சகோதரர் சவியேல் சின்னப்பர் C.R உண்மையிலேயே நல்ல நாகரிகமான நடை, உடை, பாவனை பேச்சு. அழகான உறுப்பெழுத்து கொண்டவராக, மிகுந்த பொறுமையும், சாந்தமும். அன்போடு பழகும் பக்குவமும் எதிலும் கோபம் கொள்ளாமல் பொறுமையோடு விடயங்களை கையாளும் திறனும், பணிவும், ஏழ்மையும் கொண்டவராகவும் உண்மையிலேயே ஒரு நடமாடும் புனிதராக அவர்தம் சபை நிறுவுனராம் தவத்திரு தந்தை B.A தோமஸ் O.M.I அடிகளாரின் அருளை (Charism) தன்னகத்தே கொண்டு அவர் மேற்கொண்ட அர்ப்பணத்தை நேர்மையோடு வாழ்ந்தார் என்றும் குறிப்பிடுகின்றனர்.
இவர் காலத்தில் அவ் ஆச்சிரமத்தில் முழுநாளும் மெளனமே கடைப்பிடிக்கப்படும். ஒரு சில முக்கியமான திருநாட்களில் அச்சகோதரர்களுக்கு பொதுவாக பொழுதுபோக்கும் நேரங்கள் வழங்கப்படும். அருநேரங்களில் தனது நகைச்சுவைமிக்க கதைகளாலும் பங்களாலும் சக் சகோதார்களை மகிழ்விப்பதிலும் முன்நின்றார் எனவும் குறிப்பிடுகின்றனர். இவருடைய முன் உதாரணம் மிக்க மிகவும் எடுத்துக்காட்டான வாழ்வு முறையினால் இவருடைய சபை மேல் அதிகாரிகள் இவரை புதிதாக துறவற வாழவை மேற்கொள்ளும் பொருட்டு இச்சபையில் இணைந்து கொள்ளும் மாணவர்களுக்கு பொறுப்பானவராக (Postulant Mister) நியமித்தனர். அவ்வப்போது புதிதாக மாணவர்கள் இணையும் வருடங்களில் ஏறத்தாழ 1970, 1977 காலப்பகுதியில் இப்பணியை இவர் மேற்கொண்டதாக அச்சபை ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.
தவத்திருதந்தை B.Aதோமஸ் O.M.I அடிகளாரைப் பற்றியும் அவர்தம் சபை பற்றியும் ஆழமான அறிவு கொண்டிருந்தார். அதனால் ஏனைய சக சகோதரர்களுக்கு அவை பற்றிய போதனை வழங்குபவர்களில் இவரும் முதன்மை வகித்தார். இவரின் கீழ் பயிற்சி பெற்ற துறவியொருவர் குறிப்பிடும்போது “கடவுள் வகுத்த இடத்தில் தான் ஒரு மனிதனால் இருக்க முடியும். அஃதில் வேறு எங்கும் நிலைக்க முடியாது” என அடிக்கடி அவர் போதனை செய்வாராம். அத்தோடு இவ் ஆச்சிரமத்தில் நீண்ட காலமாக ஏறத்தாழ இருபது ஆண்டுகளாக “மூப்பர்” என அழைக்கப்படும் பதவியை வகித்தார் எனவும் அவ்வாவணங்கள் சான்று பகர்கின்றன. மூப்பர் என்பது அவ் ஆச்சிரமத்தில் ஓர் முக்கியமான பதவி. இப்பதவி வகித்த காலத்தில் ஏனைய சக சகோதரர்களுக்கு அவர்களுக்குரிய பல்வேறு பொறுப்புக்களை பகிர்ந்தளிப்பதும் அவர்களுக்குரிய நாளாந்த பணிகளுக்கான பட்டியலைத் தயார் செய்து அப்பணியில் அவர்களை ஈடுபட வைப்பதும் அச்சபைக்கு உரித்தான முக்கிய கடமைகளுள் ஒன்றான தொடர்ச்சியான நற்கருணை சந்திப்பிற்கு சகோதரர்களை பணிப் பதும் இவருடைய முக்கிய பணியாக இருந்தது. இப்பணி நிலையானது சபையின் மேலாளருக்கு அடுத்த பதவி நிலையாகும்.
இவர் இவ்வாச்சிரமத்தில் ஓர் குறிப்பிட்ட நீண்டகாலம் நிதிமுகாமையாளராக (Bursar) பணியாற்றியிருக்கிறார். ஆச்சிரமத்திற்குரிய அனைத்து பண விடயங்களையும் கவனித்து ஆச்சிரமத்தின் உடமைகளை சொத்துக்களை மேற்பார்வை செய்வதும் இவர் பணியாக இருந்தது. அவ்வாச்சிரமத்திற்கு சொந்தமான ஆச்சிரம உற்பத்திகளை விற்பனை செய்யும் நிலையத்திற்கும் பொறுப்பாக இருந்தார்.
அக்காலத்தில் அவ்வாச்சிரமத்தில் அமைந்திருந்த தையல் நிலையத்திற்கும் இவரே பொறுப்பாக இருந்தார். இத்தையல் நிலையத்தில் பல அருட்சகோதரர்களை தையல் கலையில் ஈடுபடுத்துவதும், அவர்களுடைய துறவற அங்கிகளை தயார் செய்வதும், மேலும் திருவழிபாட்டிற்கு தேவையான பரிசுத்த அங்கிகள் மற்றும் திருவழிபாட்டு துணி வகைகளை தயார் செய்து பல ஆலயங்களிற்கு வழங்குவதும் இந்நிலையத்தின் பணியாக இருந்தது.
இவர் அவ்வாச்சிரமத்திலேயே ஏனைய இலங்கை, இந்திய சக சகோதரர்கள் மத்தியில் அறிவு சார்ந்தவராகத் திகழ்ந்தார். இக்காலத்திலே புதிதாக ஆச்சிரமத்தில் நுழைகின்ற துறவற மாணவர் களுக்கு இவர் ஆங்கிலம், ஆன்மீகம் போன்ற பாடங்களை கற்றுக்கொடுத்தார். இவர் இலத்தீன் மொழியிலும் பரீட்சயம் மிக்கவராக விளங்கினார்.
இக்காலப்பகுதியில் இவ் ஆச்சிரமத்தில் ஏற்கனவே துறவற சகோதர வாழ்வை தேர்ந் தெடுத்துக்கொண்டு வாழ்ந்து வந்திருந்தோருள், சிலரை குருத்துவ நிலைக்கு உயர்த்தும் கருத் தெண்ணம் தோன்றிய போது அந்நோக்குடன் அதற்கான கல்வியில் பயிற்றுவிப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருள் அருட்சகோதரர் சவியேல் சின்னப்பர் C.R அவர்களும் அடங்குவர்.ஆனால் துறவற வாழ்வில் சகோதர நிலையிலிருந்தவாறே சாட்சியம் பகர்தலின் முக்கியத்துவம் கருதி அவ் எண்ணக்கருவை பின்னர் சபையில் நிறைவேற்றப்படவில்லை.
1976ஆம் ஆண்டில் இந்திய நாட்டில் இடம்பெற்ற செபமாலைத்தாசர் காட்சித்தியான யோக சபையினுடைய மகா கூடலில் இலங்கை நாட்டில் வாழ்ந்த சகோதரர்களுடைய பிரதிநிதியாக இவர் சென்று பங்குபற்றினார்.
அருட்சகோதரர் சவியேல் சின்னப்பர் C.R தன்னுடைய வாழ்வின இறுதிக் கட்டத்தில் சில காலம் நோய்வாய்ப்பட்டிருந்த வேளையில் தோலகட்டி ஆச்சிரமத்திலேயே ஓய்வு எடுத்துக் கொண்டார். நோய் கடுமையுற்றிருந்த வேளையில் யாழ். பாசையூர் திருச்சிலுவைக் கன்னியார் மட வைத்தியாசாலையில் சில நாட்கள் அனுமதிக்கப்பட்டிருந்து, இறுதியில் 1983ஆம் ஆண்டு மே மாதம் 23ஆம் நாள் இறைவனடி எய்தினார். உற்றார், உறவினர் குருக்கள், துறவியர் பங்கு கொள்ள ஆயர் தலைமையில் நடைபெற்ற இறுதி திருப்பலின் பின், அவரது உடல் தோலகட்டி ஆச்சிர மத்திலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.
அருட்தந்தை வெ.ஆ.ஜெறோம். O.M.I (விரிவுரையாளர்.
தேசிய குருத்துவ கல்லூரி, அம்பிட்டியா.)