ஏழைகள்மேல் பரிவும் பாசமும் கொண்ட புனித அந்தோனியார்
ஆனிமாதம் பிறந்துவிட்டலேபோதும் கோடி அற்புதராம் புனித அந்தோனியாரின் திருநாள் திருவிழாக்கள் எம் நாட்டில் அவர் பெயர்;; கொண்ட ஆலயங்களில் ஆலயங்களில் ஆரம்பமாகிவிடும்.
கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட ஆலயங்களில் இத்திருவிழாக்கள் நடைபெறும் இனம்இமதம்இமொழி கடந்து கோடனகோடி பக்தர்கள் அவர் பாதம் நாடிவந்து பணிவார்கள். கேட்கும்வரங்களெல்லாம் இல்லையென்னாது வழங்குவார். அதனால்தான் அவரைக்கோடிஅற்புதர் என்று அழைக்கின்றோம்.
லிஸ்பன் நகரத்தின் புனிதர் இன்று உலகெங்கிலும் வியாபித்து இருக்கின்றார். அவரின் அழியாத நா இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. இந்த உலகத்தை முதல்முதலாக சுற்றிவர முதல்பயணம் செய்த வஸ்கொடகாமா என்பவர் தன் பயணத்தை ஆரம்பித்த இடமும் லிஸ்பன் நகரத்துறைமுகத்திலிருந்துதான் ஆரம்பித்தார். இந்தியாவில் கோவையில் இன்றும் உடல் அழியாமல் பாதுகாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் புனித சவேரியாரின் திருத்தூதுப்பயணமும் இந்த லிஸ்பன் நகரத்திலிருந்துதான் ஆரம்பமானது. இன்று லிஸ்பன் நகரில் அவருடைய கல்லறையில் கோடான கோடி அற்புதங்கள் நடந்த வண்ணமாக இருக்கின்றது.
சிறுவயதிலிருந்தே புனித அந்தோனியார் ஏழைகள் மேல் பரிவம் பாசமும் கொண்டவராக விழங்கினார். ஏழைகளுக்கு உதவிபுரியும் மனப்பக்குவம் அவருடைய பெற்றோரால் அவருக்கு கொடுக்கப்பட்ட நல்ல பண்பாகும். தேவதாய்மேல் அளவிற்கு அதிகமாக பற்றும் பாசமும் கொண்டவராக விழங்கிய அந்தோனியார் செபம் செய்வது அவருடைய கடமைகளில் ஒன்றாக இருந்தது. தினமும் திருப்பலிக்கு செல்வதும் திவ்விய நற்கருணை பெறுவதும் அவருடைய கடமையாக இருந்தது.
அவருடைய வாழ்வில் நடந்த ஒரு சம்பவம் யாதெனில் அவர் காணாமல் போனவற்றைக் கண்டுபிடித்துக்கொடுக்கின்ற ஒரு புனிதராக அழைக்கின்றோம். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு அவரின் துறவற மடத்திலேயே அவருடைய மாணவர்களுக்கு போதிப்பதற்காக அவர் கைப்பட எழுதி வைத்திருந்த 150 திருப்பாடல் புத்தகத்தை அங்கிருந்த ஒரு மாணவன் திருடிக்கொண்டு போய்விட்டான்.
புனித அந்தோனியார் மிகவும் கவலை கொண்டவராக ஆண்டவரிடம் மன்றாடினார். ஆண்டவரே! உம்முடைய வல்லமையுள்ள வார்த்தைகளை எங்களுடைய மாணவர்களுக்கு நான் எடுத்து சொல்வதற்காக நீர் எனக்கு கொடுத்த இந்த பொக்கிசத்தை நான் இழந்துவிட்டேன். அதைத்திருப்பிப்பெற்றுத்தரவேண்டமென்று மன்றாடினார்.
அந்த வல்லமையுள்ள வார்த்தைகளின்படி அந்தப்புத்தகம் அவரக்கு திரும்பக்கிடைக்கின்றது.பல வேளைகளில் நாங்கள் இந்த உலகச்செல்வங்களை இழந்துவிட்ட நிலையில் நாம் அதைப்பெற்றுத்தரும்படியாகக் கேட்கின்றோம். தூய அந்தோனியாரிடம் வேண்டுதல்கள் செய்கின்றோம். ஆனால் அதைவிட மேலானது யார்? யார் ஆண்டவருடைய இறைபிரசன்னத்தைத் தொலைத்து விட்டார்களோ? ஆண்மீகத்தை தொலைத்து விட்டார்களோஇ அவர்களுக்கெல்லாம் ஆண்டவருடைய வார்த்தைகளைப்போதித்து அவர்களை மீண்டும் ஆண்டவரிடம் சேர்க்கும் அந்த வாரத்தை வல்லமையை இன்றும் எங்களுக்கு செய்து கொண்டிருக்கிறார்.
இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள் என்ற கருத்திற்கேற்ப அவர்களை நல்ல வழிகளில் உருவாக்கவேண்டும். இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் பல சவால்கள் நிறைந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றர்கள். நவீன தொலைத்தொடர்புசாதனங்கள் அவர்களுடைய வாழ்க்கையில் மிக ஆழமாக ஊடுருவி இருக்கின்றன. இந்த தொலைத்தொடர்புசாதனங்கள் வழியாக அவாரகள் தங்கள் வாழ்வின் உண்மைகளைஇ நன்மைத்தனங்களையும்;; கண்டுகொள்ள வேண்டும். அது பெரும் சவாலாக இருக்கின்றது. இந்த தொலைத்தொடர்புசாதனங்களுடாக நாம் இறையரசை கண்டுகொள்ள கோடி அற்புதராம் புனித அந்தோனியார் நம் ஆண்டவரிடம் பரிந்து பேச வேண்டும் என்று மன்றாடுவோம்.
மரியாம்பிள்ளை யோண்பற்றிக்