அருட்பணி டொம் ஜஸ்ரஸ் சின்னப்பு, O.S.B பங்கின் முதல் துறவற குரு
அருட்பணி டொம் ஜஸ்ரஸ் சின்னப்பு, O.S.B பங்கின் முதல் துறவற குரு
அருட்பணி டொம்ஸ் சினைப்பு: O.S.. 1920ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22ஆம் திகதி யாழ். சூடர் நாட்டின் மையப்பகுதியில் அமைந்து செழிப்புமிக்க நகரமாக ஒளிரும் கண்ணகத்தில் பக்தியும் ஆன்மீக வாஞ்சையம்மிக்க சுவானி சந்தியா கிரகோரியாள் தம்பதியினருக்கு நாளை ஆண்பிள்ளைகளில் கடைசி மகளாக பிறந்தார். 1920ஆம் ஆண்டு ஆகஸ்டமாதம் 14ஆம் திகதி திருமுழுக்குப் பெற்றுக்கொண்இ சமூகத்தில் இயல்பாகவே காணப்பட்ட விகலளச் ஆன்மீக பாரம்பரியத்தில் ஊறியவராக நல்லொழுக்க விழுமியங்களில் பயிற்றப்பட்டவராக அவரது பெற்றோரினால் வளர்த்தெடுக்கப்பட்டார்
இவரி தனினுடைய ஆரம்பசுயை சுன்னாகம் றோமன் சுத்தோலிக்க தமிழ்க்கலவன் ஆரம்பப் பாடசாலை யிலும் இரணடாம் நிலைககலவியை அக்காலத்தில இப்பாடசாலையோடு சேர்ந்தியாங்கிய ஆங்கிலமொழி மூலப் பாட்சாலையான புனித அலபிற பாட்சாலையிலும் (S Alfreds School Chunnakam) மேற்கொண்டார். மேதகு ஆயர் ஜெ.ஏ.கியோமர் OMT ஆண்டகையினால் உறுதிப்பூசுதல் திருவருட்சாதனத்தின் மூலம் தூய ஆவியின் அபிசேகம் பெற்றார். இவரது மூத்த சகோதரன் வியாபாரத் தொழில் நிமித்தம் திருகோணமலையில் தற்காலிகமாக குடியேறிய வேளையில் இவரும் அவருடன் திருகோணமலையில் தற்காலிகமாக குடியேறியிருந்தார் இக்காலத்தில் நன்னுடைய கல்வியை திருகோணமலை புனித் கசையப்பர் கல்லூரியில் மேற்கொண்டு ஈற்றில் தமிழ், ஆங்கிலம், ஆங்கில இலக்கியம்.
அடிப்படைக்கணிதம், தாவரவியல் முதலான பாடங்களைத் தேர்ந்தெடுத்து 1941ஆம் ஆண்டு ஜனவரி மாதம் லண்டன் மெற்றிக்குலேசன் (London Matriculation) பரீட்சையில் சித்தியடைந்தார். இப்பாடசாலையில் மாணவனாக இருந்த காலத்தில் பாட்சாலை உதைபந்தாட்டக்குழுவில் இடம்பெற்று சிறந்ததொரு விளையாட்டு வீரனாகவும் திகழ்ந்தார். திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூ ரியில் தன்னுடைய சிறப்பான கல்வி சாதுரி யத்தின் நிமித்தம் அதே கல்லூரியிலேயே ஆசிரியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு சில மாதங்கள் கடமையாற்றினார்.
இவ்வாறு திருகோணமலையில் தொடர்ச்சியாக ஏழு வருடங்கள் தற்காலிகமாக வாழ்ந்கதன் பின் இறைவனுடைய அழைத்தலின் தானுக்கு செவிமடுத்து அவர் துறவற குருத்துவ வாழ்வை மேற்கொள்ளத் தீர்மானித்தார். இவரது பெற்றோர், சகோதரரின் ஆசியையும் பூரண சம்மதத்தையும் பெற்றுக்கொண்டார். இதற்கு 13 ஆகஸ்ட் 1941 என திகதியிடப்பட்ட இவரது தந்தையாரின் கடிதம் சான்றாகக் காணப்படுகின்றது. அக்காலத்தில் திருகோணமலை வியாகுல அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தையாக இருந்த அருட்பணி ஜெ.பி. பற்றிக் அடிகளாரின் வழிகாட்டலோடு துறவற குருத்துவத்தை நோக்கிய தேடலில் ஈடுபட்டார். திருகோணமலை வியாகுல அன்னை ஆலயமானது தற்போதைய திருகோணமலை குவாடலுப்பே அன்னை ஆலயம் தோன்றும் முன்னர் அதற்கு அண்மையில் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அருட்பணி ஜெ.பி.பற்றிக அடிகளார் 21 ஆகஸ்ட் 1941 திகதியிடப்பட்ட தன்னுடைய சிபாரிசு கடிதத்தில் இளைஞன் ஜஸ்ரஸ் சின்னப்பு மிகுந்த பக்தியும், இறை ஞானமும் நிரம்பியவராகவும், தன் சக வாலிபர்களுக்கு முன் உதாரணமாகவும், சமூக ஈடுபாடுகளிலே மிகுந்த ஆர்வம் கொண்ட வராகவும் விளங்குகின்றார்’ என அவரைக் குறித்துக் குறிப்பிடுகின்றார். ‘இவருக்கு இறையழைத்தல் இருக்கக்கூடுமென நான் ஏற்கனவே எண்ணியிருந்தேன். ஆனால் இவர் தற்பொழுது கிறிஸ்துவை முழுமையாகப் பின்பற்றும் தன்னுடைய விருப்பத்தை வெளிப்படையாக வெளிப்படுத்துவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கின்றது எனவும் அதில் குறிப்பிடுகின்றார்.
இறை அழைத்தலுக்கான வித்தை பெற்றுக்கொண்டு 1941ஆம் ஆண்டு மார்கழி எட்டாம் நாள் அமலமரியாளின் திருவிழா அன்று கண்டி அம்பிட்டிய ‘மொனதே பானோ’ (Monte Fano) எனப்படும் சில்வெஸ்ரிரோ ஆசீர்வாதப்பர் துறவற சபை (Selvestro – Benedictine Congregation) தலைமை இல்லத்தில் காலடி எடுத்து வைத்தார். 1941ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22ஆம் திகதி அச்சபையின் மேலாளர் அருட்பணி அன்ஸ்லம் வீரசிங்க O.S B அவர்களிடமிருந்து தன்னுடைய துறவற அங்கியைப் பெற்றுக்கொண்டு தன்னுடைய நவசந்நியாச வாழ்வை ஆரம்பித்தார்.
சில்வெஸ்ரிரோ ஆசீர்வாதப்பர் துறவற சபையானது இத்தாலி நாட்டில் ‘மொன்தேபானோ’ என்னும் இடத்தில் புனித சில்வெஸ்ரரால் 1231இல், புனித ஆசீர்வாதப்பர் ஆறாம் நூற்றாண்டில் ஆரம்பித்த தவ வாழ்வுக்குரிய ஒழுங்கு முறைக்கொப்ப நிறுவப்பட்டு 1448இல் திருத்தந்தை இனசென்ற IV உடைய அனுமதி பெற்றது. பல மேலான வகைகளில் திருச்சபையின் மேய்ப்புப் பணியில் இணைந்து, குழுவாழ்வு சாட்சியத்தினூடும் செப வாழ்வினூடும் ஒருமைப்பாட்டை வளர்த்து தவாழ்வினூடு இறைவனை தேடுவதை அருளாகக் கொண்டதே சில்வெஸ்ரிரோ ஆசீர்வாதப்பர் துறவற சபை.
இச்சபையில் தன்னுடைய துறவற வாழ்வுக்கான உறுதியான தீர்மானத்துடன். 1942 டிசம்பர் மாதம் 23ஆம் திகதி தன்னுடைய துறவற வாக்குறுதிகளை சபை மேலாளர் அருட்பணி அன்ஸ்லம் வீரசிங்க O.S.B அவர்களிடம் கையளித்து சில்வெஸ்ரிரோ ஆசீர்வாதப்பர் துறவற சபைத் துறவியாக தன்னுடைய வாழ்வுப்பயணத்தை ஆரம்பித்தார். அவருடைய சின்னப்பு எனும் இயற்பெயருடன் டொம் ஜஸ்ரஸ் எனும் துறவறசபை வழங்கிய பெயருடன் சேர்த்து டொம் ஜஸ்ரஸ் சின்னப்பு. O.S.B என அழைக்கப்பட்டார். தன்னுடைய குருத்துவத்தை நோக்கிய மெய்யியல் இறையியல் கல்வியை அம்பிட்டிய தேசிய குருத்துவக் கல்லூரியில் மேற்கொண்டார்.
இக்காலப்பகுதியில் இவருடைய தந்தையார் 1945 யூலை 16இல் இறந்த போது தன்னுடைய கடமைகள் நிமித்தம் தந்தையாரின் இறுதி நிகழ்வுக்கு இவர் சமூகம் கொடுக்க முடியவில்லை எனவும் இவருடைய தாயார் 1946 மே 26இல் இறந்த போது இவ்விறுதி நிகழ்விற்கு இவர் சமூகம் தந்தார் எனவும் உறவினர் குறிப்பிடுகின்றனர்.
தன்னுடைய நிரந்தர அர்ப்பண பகிரங்க வாக்குறுதிகளை மேதகு ஆயர் டி பேனர்ட் றெக்னோ O.S.B ஆண்டகையிடம் 1948ஆம் ஆண்டு யூலை 27ஆம் திகதி மேற்கொண்டார். 1949ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 08ஆம் திகதி அதே ஆயரினாலேயே துணை தியாக்கோனாகவும் 1949ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 21ஆம் திகதி தியாக்கோனாகவும் திருநிலைப்படுத்தப்பட்டு தனது குருத்துவக்கல்வியின் இறுதியில் 1950ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.
அருட்பணி டொம் ஜஸ்ரஸ் சின்னப்பு OSB சுண்டி மறைமாவட்ட ஆயராகவும் பதுளை மறை மாவட்ட முதல் ஆயராகவும் இருந்த ‘சமூக நீதியின் இலங்கை ஆயர்’ எனப் பெயர்பெற்ற மேதகு லியோ நாணயக்கார O.S.B ஆண்டகை சில்வெஸ்ரிரோ ஆசீர்வாதப்பர் துறவற சபையில் பல முதன்ன நிலைகளை வகித்த அருட்பணி றொபின்சன் இல்டெதொனஸ் O.S.B போன்றோர் ஒன்றாகவே குருத்துவக் கல்வியை மேற்கொண்டு அதே ஆண்டிலேயே குருக்களாக திருநிலைப் படுத்தப்பட்டவர்கள் மட்டுமல்லாது பிற்காலத்தில் அவர்கள் பணிவாழ்வின் மூலம் அத்துறவற சபையின் தூண்கள் என வர்ணிக்கப்பட்டு இருந்தனர்.
புதிய அருட்தந்தையரது முதல் திருப்பலி விழா அவர் ஊராம் சுன்னாகத்தில் பங்குத்தந்தை அருட்பணி ஆபிரகாம் தலைமையில் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டது. புகையிரதத்தில் வந்திறங்கிய புதிய அருட் தந்தையரை அந்நிலையத்திலிருந்து ஊர்வலமாக அவர் பங்கு ஆலயமான புனித அந்தோனியார் ஆலயத்திற்கு அழைத்துவரப்பட்டார் எனவும் புகையிரத் நிலையத்தில் இடம்பெற்ற வரவேற்பு வைபவத்தில் அந்நாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெ. வி செல்வநாயகம் பிரசன்னமாய் இருந்தார் எனவும் முதல் திருப்பலியில் தவத்திருத் தந்தை வி.ஏ.தோமஸ் அடிகளாரும் பங்கின் முதல் துறவற சகோதரர் அருட்சகோதரர் சவியேல் சின்னப்பர் C.R அவர்களும் பங்குபற்றியிருந்தார் எனவும் இவர் உறவினர் குறிப்பிடுகின்றனர்.
அவர் தனது குருத்துவப் பணி வாழ்வை கண்டி, கட்டுகஸ்தோட்டை புனித அந்தோனியார் கல்லூரியின் மாணவர் விடுதியின் உதவி மேற்பார்வையாளராக ஆரம்பித்தார். அக்காலப் பகுதியில் அக்கல்லூரியில் ஆசிரியராகவும் பணியாற்றினார். அங்கு மாணவர்களை மிகுந்த அன்போடும் கரிசனையோடும் பராமரித்து சிறப்பாகப் பணியாற்றியமையால் வஹக்கோட்டை புனித அந்தோனியார் திருத்தலத்தில் உதவிக்குருவாக அமர்த்தப்பட்டு பிறாவி சிறுவர் இல்லத்தினதும் (Bravi Orphanage) அதனோடு இணைந்த தொழிற்பயிற்சி பாடசாலையினதும் இயக்குநராக நியமிக்கப்பட்டார். பின்னர் பதுளை, நாவலப்பிட்டி, அம்பிட்டியா போன்ற பங்குகளின் உதவிப் பங்குக்குருவாக பணியாற்றினார். நாவலப்பிட்டி பங்கில் உதவிக் குருவாகப் பணியாற்றிய காலத்தில் நாவலப்பிட்டி புனித மரியாள் கல்லூரியில் விளையாட்டுத்துறைப் பொறுப்பாசிரியராகவும் கடமையாற்றினார். அம்பிட்டிய பங்கில் உதவிக்குருவாகப் பங்காற்றிய காலத்தில் அம்பிட்டியா புனித மரியாள் கல்லூரியில் உதைப்பந்தாட்ட பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் கண்டி புனித அந்தோனியார் பேராலய துணை பங்குத்தந்தையாக பணியாற்றிய காலத்தில் மாத்தளை புனித தோமஸ் கல்லூரியில் உதை பந்தாட்ட பயிற்றுவிப்பாளராகவும் கிறிஸ்தவ இளைய தொழிலாளரின் (YCW) ஆன்ம இயக்குநராகவும் பணியாற்றினார். பின்னர் கண்டி மறைமாவட்ட பிரதம நிதி முகாமையாளராக (Diocesan Procurator) ஆக நியமனம் பெற்று கண்டி ஆயர் இல்லத்தில் அமர்த்தப்பட்டார். இக்காலப்பகுதியில் கண்டி புனித சில்வெஸ்ரர் கல்லூரியில் உதை பந்தாட்ட பயிற்றுவிப்பாளராகக் கடமையாற்றினார்.
அதன் பின்னர் பொஹவந்தலாவ, றாகலை பங்குகளில் பங்குத்தந்தையாக பல காலம் பணியாற்றிய பின் இந்தியா சென்று மறைக்கல்வித் துறையில் ஆரம்ப மேற்படிப்பை முடித்ததன் பின்பு கண்டி மறைமாவட்டத்தில் முதன்முதலாக மறைமாவட்ட மறைக்கல்வி நடுநிலையத்தை 1965இல் ஆரம்பித்து அதன் முதல் இயக்குநராகப் பணியாற்றினார். இக்காலப் பகுதியில் சுண்டி மறை மாவட்ட தமிழ், சிங்கள மறைக்கல்வித்துறை வளர்ச்சிக்கு அரும்பணியாற்றினார். பல மறை சார்ந்த வானொலி நிகழ்ச்சிகளைத் தயாரித்து அதை ஒளிபரப்பச் செய்தார். ‘வழிபாட்டு-இசையிலும் ஆர்வம் கொண்டவராக சில ஆலய பாடல்களை கர்நாடக இசைமெட்டுக்களில் கலந்து அறிமுகம் செய்து ஒரு பாடகனாகவும் திகழ்ந்தார்.
அருட்தந்தை அவர்கள் ஒரு பிரபல்யமான கேட்போர் சுவாரஸ்யமாக செவிமடுக்கக்கூடிய ஒரு பிரசங்கியாக விளங்கினார் எனவும் இளைஞர், சிறுவர் ஒன்றுகூடலில் பயன்படுத்தக்கூடிய கிராமியப் பாடல்கள் சிலவற்றை இயற்றி அவர்களுக்கு பழக்கியிருந்தார் எனவும் மறையறிவுடன் கூடிய வில்லுப்பாடல்களை இயற்றி அவற்றை பல பங்குகளிலே பயிற்றுவித்ததன் காரணமாக சில இடங்களில் அவர் வில்லுப்பாட்டு சுவாமி’ எனவும் அழைக்கப்பட்டார் என்றும், மிகவும் தகப்பனுக்குரிய பாசத்துடன் மக்களுடன் பழகி வந்தார் என்றும் அவருடன் பணியாற்றிய, மற்றும் அவரை அறிந்தோர் குறிப்பிடுகின்றனர். அக்காலத்தில் இலங்கையின் மத்தியில் மலை நாடு முழுவதும் கண்டி மறைமாவட்டத்துள் உள்ளடக்கப்பட்டு இருந்தது. தற்போதைய பதுளை மறைமாவட்டம் 1972இலேயே தோற்றம் பெற்றது. அவரது மறைக்கல்விப்பணி மத்திய மலை நாட்டு மக்களினால் இன்றும் பெருமையோடு நினைவுகூரப்படுகின்றது. மறைமாவட்டத்திற்கு வெளியேயும் காலி. இரத்தினபுரி, சிலாபம், புத்தளம் போன்ற இடங்களிலும் அவ்வப்போது அவர் பணியாற்றியிருக்கின்றார்.
ஆயர் மேதகு லியோநாணயக்கார O.S.B ஆண்டகையவர்கள் 1959இல் ஆயராக திருநிலைப் படுத்தப்பட்டு கண்டி மறைமாவட்டத்தை பொறுப்பெடுத்து நிர்வகிக்கையில் அவருக்கு வலது கரமாகச் செயல்பட்டவர்களுள் முக்கியமானவர் அருட்பணி டொம் ஜஸ்ரஸ் சின்னப்பு O.S.B ஆயருடன் இணைந்து மலையக சமூக வளர்ச்சியில் அதிக ஈடுபாடும் அக்கறையும் கொண்டவராகத் திகழ்ந்தார். இவரது குருத்துவ வாழ்வின் காலத்தில் மாத்தளை பிரான்சிஸ்கன் சகோதரர்கள் சபையில் ஆன்மீக ஆலோசகராக நீண்ட காலம் பணியாற்றினார்.
1974ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் தனது குருத்துவ வெள்ளி விழாவையொட்டி ஓய்வுடன் கூடிய ஐரோப்பிய சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். அவ்வேளை சுகயீனமுற்று இடையில் நாடு திரும்பினார்.
1975 பெப்பிரவரி 10ஆம் நாள் தனது குருத்துவ வெள்ளி விழாவை கட்டுகஸ்தோட்டை புனித அந்தோனியார் கல்லூரியில் தனது சபை சகோதரர்கள் நண்பர்கள் சகிதம் கொண்டாடியதன் பின் 1975 மே 27ஆம் நாள் தனதூராம் சுன்னாகத்தில் விமரிசையாகக் கொண்டாடினார்.
நோய் ஒன்று திடீரென அவரை வாழ்வின் இறுதி அத்தியாயத்திற்கு இழுத்துச் சென்றது. நோய் கடுமையுற்ற போது கண்டி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 1975ஆம் ஆண்டு ஆடி மாதம் 16ஆம் திகதி இரவு தனது 55ஆவது வயதில் இறையில்லம் நாடினார். இறக்கும் போதும் கண்டி மறைக்கல்வி நடுநிலையத்தின் இயக்குநராகவே இருந்தார்.
அவரது உடல் கண்டி பேராலயத்தில் இறுதி மரியாதைக்காக வைக்கப்பட்டு அப்போதைய கண்டி ஆயர் மேதகு போல் பெரேரா ஆண்டகை அவர்கள் தலைமையில் பதுளை மறைமாவட்ட ஆயர் மேதகு லியோநாணயக்கார O.S.B ஆண்டகை மற்றும் பல குருக்கள் துறவியர் குறிப்பாக அப்போதைய சுன்னாகம் பங்குத்தந்தை அருட்பணி ஜெயசேகரம் அடிகள். அருட்பணி மைக்கல் சவரிமுத்து O.M.I அடிகள் பங்குபற்ற இறுதிச்சடங்கு திருப்பலி வழிபாடுகள் நடைபெற்றன. திருப்பலி வழிபாட்டில் மறையுரை ஆற்றிய அருட்பணி ஸ்ரீபன் ஏபிரகாம் O.S.B அடிகள் ‘கண்டி மறை மாவட்டத்தில் மும்மொழிகளிலும் ஒலித்துக்கொண்டிருந்த சிங்கநாதம் இனிமேல் கேட்க முடியாது. மலையக மக்களின் நண்பன், கிறிஸ்தவ மக்களின் ஒளி மறைந்து விட்டது. இம்மறைவு சுன்னாகம் மக்களுக்கல்ல மலையக மக்களுக்கே பேரிழப்பானது’ எனக் குறிப்பிட்டிருந்தார்.
திருப்பலியின் இறுதியில் அவரது உடல் கண்டி மகய்யாவ என்னுமிடத்தில் உள்ள கத்தோலிக்க சேமக்காலையில் உள்ள குருக்கள் பிரிவிற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பதுளை மறைமாவட்ட ஆயர் மேதகு லியோ நாணயக்கார O.S.B ஆண்டகை அவர்களின் மன்றாட்டுடனும் ஆசீருடனும் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அருட்தந்தை வெ.ஆ.ஜெறோம் OMI
(விரிவுரையாளர்,
தேசிய குருத்துவ கல்லூரி, அம்பிட்டியா)