சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலய இணையத்தள அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று 10.06.2025 செவ்வாய்க்கிழமை நவநாளின் ஏழாம்நாள் திருப்பலியை தொடர்ந்து நடைபெற்றது.
ஆலய ஊடக தொழில்நுட்ப குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் இணையத்தளத்தினை சுன்னாகம் பங்குத்தந்தை எம். நிக்ஸன் கொலின் அடிகளார் அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.
இந்நிகழ்வில் சில்லாலை பங்குத்தந்தை லியோ ஆம்ஸ்ரோங் அடிகளார், மண்ணின் மைந்தன் அருட்தந்தை யூட் குயின்ரஸ் அடிகளார், அருட்சகோதரி அருளினி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
புகைப்பட உதவி
சைமன் மரியாம்பிள்ளை






