சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலய திருநாளை முன்னிட்டு கொடிமரம் நிறுவும் நிகழ்வு நேற்று மாலை 5:00 மணிக்கு செபமாலையுடன் ஆரம்பமானது.
பங்குத்தந்தை M. நிக்ஸன் கொலின் அடிகளாரின் வழிகாட்டலின் கீழ் சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலய திருஅவை மக்களால் இக் கொடிமரம் நிறுவும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.




திருச்செபமாலையைத் தொடர்ந்து பங்குத்தந்தையினால் ஆசீர்வதிக்கப்பட்டு கொடிமரம் நிறுவப்பட்டது.
சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலய நவநாள் வழிபாடுகள் எதிர்வரும் 04.05.2025 ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி திருநாள் திருப்பலி எதிர்வரும் 13.06.2025 வெள்ளிக்கிழமை ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது. இதனை முன்னிட்டே மாதத்தின் முதல் நாளாகிய இன்று கொடிமரம் நிறுவப்பட்டுள்ளது.
புகைப்பட உதவி
எட்மன் குருசாந்
டேவிட் றோய் அன்ரனி
