சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா நாளை 04.06.2025 புதன்கிழமை 5:30 மணிக்கு கொடி ஏற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

தொடர்ந்து நவநாள் வழிபாடுகள் தினமும் 5:30 மணிக்கு திருச்செபமாலையுடன் ஆரம்பமாகி நடடைபெறவுள்ளது.
நவநாளின் இறுதிநாளான 12.06.2025 வியாழக்கிழமை மாலை 5:00 மணிக்கு நற்கருணை பெருவிழா நடைபெறவுள்ளது.


தொடர்ந்து 13.06.2025 வெள்ளிக்கிழமை காலை 6:15 மணிக்கு திருச்செபமாலையை தொடர்ந்து திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.
புனித அந்தோனியார் 1231 ஆம் ஆண்டு யூன் 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மரணமடைந்தார். அந்த திகதியை புனிதரின் திருநாளாக கத்தோலிக்க திருஅவை கொண்டாடி வருகிறது. இவ்வருடம் புனிதர் மரணமடைந்த கிழமை நாளிலேயே திருநாள் நடைபெற இருப்பது சிறப்பம்சமாகும்.