புனித அந்தோனியார் முன்பள்ளியின் புதிய கட்டடத்தை திறந்துவைத்தார் யாழ். ஆயர்



சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்ட புனித அந்தோனியார் முன்பள்ளியின் புதிய கட்டட திறப்புவிழா கடந்த 22.02.2026 ஞாயிறு அன்று சுன்னாகம் பங்குத்தந்தையும் முன்பள்ளி காப்பாளருமான அருட்தந்தை எம். நிக்சன் கொலின் அடிகளாரின் தலைமையில் இடம்பெற்றது.


இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி வண ஜஸ்ரின் பேர்னாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை புதிய கட்டடத்தை திறந்துவைத்து ஆசீர் வதித்தார்.



சிறப்பு விருந்தினர்களாக வலிகாமம் வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி ஜமுனா ராஜசீலன் மற்றும் இளவாலை மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை ஜே. ஏ. யேசுதாசன் அடிகளார் ஆகியோர் கலந்துகொண்டனர்.



சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலயத்தில் ஞாயிறு திருப்பலியை ஒப்புக்கொடுத்து தவக்கால சுற்றுமடலை வழங்கிய யாழ். ஆயர் திருப்பலியை தொடர்ந்து மேற்படி புதிய கட்டடத் திறப்பு விழா நிகழ்வில் கலந்துகொண்டார்.

அன்றைய தினம் ஞாயிறு திருப்பலியை தலைமை தாங்கி ஒப்புக்கொடுத்தார் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி வண ஜஸ்ரின் பெனாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top