இறைஇரக்க பக்தி மூலம்ஆண்டவரின் அபரிமித அருளை காண்கிறோம் – சுன்னாகம் பங்குத்தந்தை

இறைஇரக்க பக்தியை ஏறெடுக்கின்றபோது ஆண்டவரின் அபரிமிதமான அருளை கண்டடைகிறோம் என சுன்னாகம் பங்குத் தந்தை நிக்சன் கொலின் அடிகளார் தெரிவித்துள்ளார்.

சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலயத்தில் நேற்று 12.04.2026 ஞாயிறு இறைஇரக்க திருவிழா திப்பலியை ஒப்புக்கொடுத்து மறையுரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் கடவுளுடைய இரக்கம் எமது அறிவிற்கு அப்பாற்பட்டது. ஆண்டவரின் அன்பு ஆழம் அகலமில்லாத அன்பு எனவும் குறிப்பிட்டார்.

இறை இரக்க பெருவிழாவை சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலய இறைஇரக்க பக்திச் சபையினர் சிறப்பித்திருந்ததுடன், திருப்பலி நிறைவில் இறைஇரக்க அர்பணச்செபத்திலும் பங்கெடுத்திருந்தனர்.

புகைப்பட உதவி- அ.பிரட்றிக் ஜோய்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top