தெரிவாகியது புதிய நிர்வாகம்

ஆலய நிர்வாக சபையின் பிரதானிகள் தெரிவாகினர்.

நிர்வாக சபையின் செயலாளராக யா.பிலிப் பிரேமதாஸன் தெரிவாகினார்.


சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலய நிர்வாகசபை செயலாளராக யா. பிலிப் பிரேமதாஸன் தெரிவுசெய்யப்பட்டுளார். இதேவேளை நிர்வாகசபையின் பொருளாளராக தே. பேடினன்ட் சைலோ மற்றும் வழிபாட்டுக்குழு தலைவியாக அ. ஆன் அலன்ரீனா ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.

பங்குத்தந்தை எம்.நிக்சன் கொலின் அடிகளார் தலைமையில் நிர்வாக தெரிவுகள் இடம்பெற்றன.

நேற்று 31.05.2026 ஞாயிற்றுக்கிழமை  பங்குத்தந்தை எம். நிக்சன் கொலின் அடிகளார் தலைமையில் இடம்பெற்ற நிர்வாக தெரிவு கூட்டத்தின்போதே மேற்படி அருட்பணிச் சபையின் பிரதானிகள் தெரிவுசெய்யப்பட்டனர்.

அன்பியங்களுக்கிடையிலான ஒன்றுகூடல்கள் நேற்றையதினம் ஞாயிறு திருப்பலியை தொடர்ந்து இடம்பெற்றிருந்தது. இதன்போது ஒவ்வொரு அன்பியத்திலிருந்தும் 4 பொறுப்பாளர்கள் தெரிவுசெய்யப்பட்டிருந்தனர். இதன்படி 5அன்பியங்களிலுமிருந்து தெரிவுசெய்யப்பட்ட 20 அன்பியப்பொறுப்பாளர்கள் மற்றும் பங்குத்தந்தையால் அன்பியவாரியாக தெரிவுசெய்யப்பட்ட 5 பிரதிநிதிகள் ஆகியோர் மேற்படி நிர்வாக தெரிவில் பங்குபற்றியிருந்தனர்.

புதிய நிர்வாகசபையின் பொறுப்பேற்கும் நிகழ்வு எதிர்வரும் 02.06.2026 செவ்வாய்க்கிழமை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலையில் அன்பியங்களின் பொறுப்பாளர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top