
சிலுவையின் மகிமையின் விழா திருப்பலி நேற்று 14.09.2025 ஞாயிறு சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன் அன்றையதினம் இளையோர் தினமாகவும் அனுஷ்டிக்கப்பட்டது.
பங்குத்தந்தை எம். நிக்சன் கொலின் அடிகளாரின் தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன் திருப்பலியின் வருகைப்பாடலுடன் சிலுவையில் தொங்கும் கிறீஸ்துவின் திருவுருவம் பவனியாக கொண்டுவரப்பட்டு நிறுவப்பட்டது.

திருப்பலியை இளையோர்கள் சிறப்பித்திருந்தனர்.
திருப்பலியை தொடர்ந்து சர்வதேச கத்தோலிக்க இளையோர் தினத்தை முன்னிட்டு சுன்னாகம் புனித அந்தோனியார் இளையோர் மன்றத்தின் ஒன்றுகூடலும் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது.

கடந்த 07.09.2025 மாதத்தின் முதல் ஞாயிறு தினம் சர்வதேச கத்தோலிக்க இளையோர் தினமாக கத்தோலிக்க திருஅவையால் அனுஷ்டிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


