நீண்டகால இடைவெளிக்குப் பின் கட்டுவன் புனித பத்தாம் பத்திநாதர் ஆலய திருவிழா நடைபெற்றுள்ளது.


சுன்னாகம் பங்கின் பொதுப்பணித்தளமான கட்டுவன் புனித பத்தாம் பத்திநாதர் ஆலய திருவிழா, யுத்த இடப்பெயர்வின் பின்னர் பல ஆண்டுகளுக்குப் பின் கடந்த செப்டம்பர் 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
திருவிழா திருப்பலியை இளவாலை புனித கென்றியரசர் கல்லூரி அதிபர் அருட்தந்தை மக்மயூரன் அடிகள் தலைமையேற்று ஒப்புக்கொடுத்தார்.





திருவிழா திருப்பலியை தொடர்ந்து ஆலய வளாகத்தில் புதிதாக கட்டியமைக்கப்பட்ட வரவேற்பு திருச்சொருபம் ஆசீர்வதிக்கப்பட்டு, விசுவாசிகளின் வணக்கத்திற்காக திறந்து வைக்கப்பட்டது.
இப் பொதுப்பணித்தளத்தின் பரிபாலகர் சுன்னாகம் பங்குத்தந்தை எம்.நிக்சன் கொலின் அடிகளாரின் வழிகாட்டுதலுடன் ஆலய திருப்பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

