
சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலய வின்சென்ற் டீ போல் சபையினர் மருதனார்மடத்திலுள்ள CANE புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்திற்கு இன்று 14.09.2025 ஞாயிறு விஜயம் மேற்கொண்டு உலருணவு மற்றும் தூய்மையாக்கல் பொருட்களை வழங்கிவைத்துள்ளனர்.
குறித்த மன்றத்தின் தலைவர் கி. அன்ரன்ராஜன், செயலாளர் சிறில் மத்தியூஸ் மற்றும் மன்ற உறுப்பினர்கள் இதில் கலந்துகொண்டு பொருட்களை கையளித்தோடு CAN புற்றுநோயாளர் பராமரிப்பு மற்றும் சிகிச்சை நிலையத்தின் செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடினர்.


பங்குத்தந்தை எம். நிக்சன் கொலின் அடிகளாரின் வழிகாட்டுதலின் கீழ் மேற்படி விடயம் மேற்கொள்ளப்பட்டது.
