உதிரம் கொடுத்து மனிதம் காப்போம்
இரத்ததான முகாமுக்கு
இளையோர் மன்றம் அழைப்பு.
சுன்னாகம் புனித அந்தோனியார் இளையோர் மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இரத்ததான நிகழ்வு நாளை 25.05.2025 ஞாயிறு காலை 9:30 மணிமுதல் சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலய முன்றலில் நடைபெறவுள்ளது.
உதிரம் கொடுத்து மனிதம் காப்போம் என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ் இரத்ததான நிகழ்வில் 18 வயது முதல் 50 வயது வரையான தகுதியுள்ள குருதிக்கொடையாளர்கள் அனைவரையும் இவ் இரத்ததான நிகழ்வில் கலந்துகொண்டு, ஏற்பட்டுள்ள குருதி தட்டுப்பாட்டை நிவர்த்திசெய்ய முன்வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை இரத்தவங்கியால் மேற்படி இரத்ததான முகாம் முன்னெடுக்கப்படவுள்ளது. தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் புற்றுநோய் சிகிச்சைகளின்போது அதிகமாக குருதி தேவைப்படுவதாக தெரியவருகிறது.