புனித அந்தோனியார் இளையோர் மன்ற முகநூல் பக்கம்
802
புனித அந்தோனியார் இளையோர் மன்றம், சுன்னாகம்.
"ஒன்றுபடுவோம் உயர்வடைவோம்"
புனித அந்தோனியார் இளையோர் மன்றம், சுன்னாகம்.
is in வட மாகாணம்.
1 week ago
✝️ புனித செபஸ்தியார் திருநாள் நல்வாழ்த்துகள் ✝️
(ஜனவரி 20)![]()
அஞ்சாத விசுவாசமும் தளராத தைரியமும் கொண்ட தூய செபஸ்தியார், கிறிஸ்துவுக்காக உயிர்நீத்த வீர சாட்சியாக திகழ்கின்றார். துன்பங்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் நடுவிலும், ஆண்டவர் ஒருவருக்கே அடிபணிந்து வாழ்ந்த அவரது வாழ்வு, இன்று நமக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது.![]()
இந்த புனித திருநாளில்,
நாம் விசுவாசத்தில் உறுதியாக நிலைக்கவும்,
தளர்ந்தவர்களை நம்பிக்கையில் தேற்றவும்,
எந்நிலையிலும் இறைவன் மீது முழு நம்பிக்கை வைக்கவும்
தூய செபஸ்தியாரின் பரிந்துரையை நாடி நிற்போம்.![]()
தூய செபஸ்தியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். 🤍🙏
அனைவருக்கும் திருநாள் வாழ்த்துகள். ✨![]()
புனித அந்தோனியார் இளையோர் மன்றம், சுன்னாகம்.
... See MoreSee Less
1 week ago
புனிதர்களின் பாதையில்…![]()
இலங்கையின் திருத்தூதராகிய தூய ஜோசப் வாஸ் (ஜனவரி 18) அவர்களின் திருநாளை இன்று மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறோம்.
ஜெபத்தில் வலிமை, விசுவாசத்தில் துணிவு, மக்கள் சேவையில் தியாகம் ஆகியவற்றால் அவர் கிறிஸ்துவின் அன்பை அனைவருக்கும் வெளிப்படுத்தினார். துன்பங்களிலும் persecution-இலும் தளராமல் நற்செய்தியை அறிவித்து, ஆயிரக்கணக்கான மக்களை நம்பிக்கையில் உறுதிப்படுத்தினார்.![]()
இந்த புனித திருநாளில்,
நாமும் ஜெப வாழ்வில் உறுதியாய் நிலைத்து,
ஏழை எளியவர்களுக்கு சேவை செய்யும் மனப்பாங்குடன்,
நற்செய்தியின் ஒளியாக வாழ அருள் பெறுவோம்.![]()
தூய ஜோசப் வாஸ் அவர்களின் திருநாள்
அனைவருக்கும் ஆசீர்வாதமும் அருளும் நிறைந்ததாக அமைய வாழ்த்துகள். 🤍![]()
புனித அந்தோனியார் இளையோர் மன்றம், சுன்னாகம்.
... See MoreSee Less
2 weeks ago
Photos from Holy Mary's post
... See MoreSee Less
புனித அந்தோனியார் இளையோர் மன்றம், சுன்னாகம்.
is with புனித சூசையப்பர் தந்தையர் மன்றம் - சுன்னாகம் in வட மாகாணம்.
2 weeks ago
பெருகட்டும்!![]()
ஏர் பிடிக்கும் கைகளுக்கு மட்டும் அல்ல;
உயிர் காக்கும் மண்ணுக்கும்,
உடல் நலம் காக்கும் இறைவனுக்கும் கதிரவனை தந்த இறைவனுக்கும்
நாம் தலைவணங்கும் இந்நன்னாளில்,
இயற்கையை ஆராதிக்கும் அனைவருக்கும்
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!![]()
தமிழன் என்ற பெருமிதம்
ஒவ்வொரு முகத்திலும் என்றும் மிளிரட்டும்!![]()
இன்பம் பெருக,
நலம் நிலைத்திட,
உழைப்பின் பயன் இனிமையாய் கிடைக்க,
இந்தத் திருநாள் அனைவருக்கும்
மகிழ்ச்சியும் அமைதியும் அளிக்கட்டும்.![]()
புனித அந்தோனியார் இளையோர் மன்றம், சுன்னாகம்.
அந்தோனியாரின் இளையோர்கள்
... See MoreSee Less
2 weeks ago
பதுவையாம் புனித அந்தோனியாரின் அற்புதங்கள்
ஊனமுற்ற சிறுமியைக்குணப்படுத்தினார்.
தினம் ஒரு அற்புதம்![]()
கோடி அற்புதர் அந்தோனியார்
அருளின் முகம், கருணையின் மொழி,
புனித அந்தோனியார்
பதுவையின் பாதைகளில் நடந்தபோது,
வானம் பூமியோடு மௌனமாய் பேசினது.![]()
பீட்டர் பதுவை நகர் வாசி,
நெஞ்சம் நிறைந்த துயரம், கண்களில் மழை.
நான்கு வயது மலர் மதுவானா,
கை கால்கள் உறங்கிய நிலை,
சிரிப்பு மட்டும் துடிக்கும் உயிர்.![]()
அந்தோனியார் முன்னால்
தந்தையின் மன்றாடு விழுந்தது,
தாயின் கண்ணீர் தரையில் துளித்தது.
அருள் பார்வை குழந்தையைத் தழுவியது
கண்ணில் இரக்கம், உள்ளத்தில் ஒளி.![]()
மென்மையாய் தொட்டார்,
சிலுவை அடையாளம் வரைந்தார்;
“என் ஆண்டவரே !” எனும் செபம்
காற்றைத் தாண்டி விண்ணைத் தொட்டது.
நேரமே சாட்சியாய் நின்றது.![]()
அந்நேரமே
உறங்கிய கை விரல்கள் விழித்தன,
மௌன கால்கள் நடையின் பாடம் கற்றன.
மதுவானா எழுந்தாள்
மலர் மலர்ந்தது போல,
ஒளி நடந்தது போல.![]()
அதிர்ந்தது கூட்டம்,
அதிராதது விசுவாசம்.
நன்றியின் கீதம்
வீதி முழுதும் பொங்கியது.
தந்தையும் தாயும்
இறைவனுக்கு புகழ் பாடி மகிழ்ந்தனர்.![]()
இன்று கூட
அந்த அருள் நடை தொடர்கிறது;
துயரமென்ற இருளில்
அந்தோனியாரின் பெயர்
ஒளியாகிறது,
நம்பிக்கையாகிறது.![]()
கோடி அற்புதர், கருணையின் காவலர்!
... See MoreSee Less
2 weeks ago
பதுவையாம் புனித அந்தோனியாரின் அற்புதங்கள்
நம்பிக்கையுடன் கேட்போருக்கு தூரம் தடையல்ல
தினம் ஒரு அற்புதம்![]()
பல மைல் அப்பால்
ஒலித்தது மறையுரை
காதுகள் மட்டுமல்ல,
இதயங்களையும் தேடிய
அருளின் குரல்.![]()
அந்தக் குரலைக் கேட்க
ஏங்கினாள் ஒரு பெண்;
ஆனால் அவள் இல்லம்
அன்பற்ற தடைகளால்
பூட்டப்பட்ட சிறை.![]()
முரடனாய் இருந்தான் கணவன்,
வெளியே செல்லத் தடை;
அவள் கால்கள் கட்டுண்டாலும்
நம்பிக்கை மட்டும்
அடிமையாக்கப்படவில்லை.![]()
“அந்தோனியாரின் மறையுரை
இன்று மூன்று கிலோ மீட்டர் அப்பால்”
என்ற செய்தி
அவள் நெஞ்சில்
ஒளிப் பொறி ஏற்றியது.![]()
வீட்டின் மாடிக்கு ஏறினாள்
பூமியிலிருந்து உயர்ந்து
விண்ணைத் தொட
நம்பிக்கையின் படிகள்.
கண்கள் மூடி மன்றாடினாள்:![]()
“புனித அந்தோனியார்!
உமது மறையுரை
நான் கேட்க
அருள் தாரும்...”![]()
அதிசயம்!
காற்று தூதனானது,
தூரம் கரைந்தது;
ஒரு வார்த்தையும் தவறாது
அந்தோனியாரின் குரல்
மாடியில் முழங்கியது.![]()
அவள் கேட்டாள்
மறையுரை மட்டும் அல்ல,
அருளின் அமிர்தம்.
கண்களில் வியப்பு,
இதயத்தில் ஆனந்தம்.![]()
அந்நேரம்
மனைவியைத் தேடி வந்த
கணவன் மாடிக்கு ஏறினான்;
அங்கே அவனும் கேட்டான்
அதே மறையுரை
உள்ளத்தை ஊடுருவும் ஒளி.![]()
அறிவுரைகள்
அகந்தையை உருக்கின,
இறை அனுபவங்கள்
கல்லான நெஞ்சை
கரைத்தன.![]()
அன்று
ஒரு பெண்ணின் ஜெபம்
ஒரு குடும்பத்தின்
விதியையே மாற்றியது.
முரடன் மாறினான்,
பக்தன் ஆனான்.![]()
இன்றும் அந்த குரல்
காற்றில் மறையவில்லை
நம்பிக்கையுடன் கேட்போருக்கு
தூரமும் தடையும்
அருளுக்கு எதிரியல்ல
என்று சொல்லிக்கொண்டே.![]()
புனித அந்தோனியார்
பல மைல் தாண்டியும்
இதயத்தில் பேசும்
அருளின் மறையுரையாளர்.
... See MoreSee Less
2 weeks ago
பதுவையாம் புனித அந்தோனியாரின் அற்புதங்கள் ![]()
அன்னை மரியாளின்
விண்ணேற்றத்தை அறிந்த அந்தோனியார்![]()
தினம் ஒரு அற்புதம்![]()
அந்தோனியாரின் கேடயம்,
சிந்தையின் மூச்சு,
செயலின் தொடக்கம்.
தனி செபம், குழு செபம்
நேரத்தைப் புனிதமாகப் பங்கிட்ட
ஒரு வாழ்வு.![]()
எந்தச் செயலுக்கும் முன்
மண்டியிட்ட மௌனம்;
மறையுரை தொடங்கும் முன்
தமக்கென வைத்த
பிரத்தியேகச் செபம்
அருளின் வாசல் திறக்கும் சாவி.![]()
சோதனையில் தளர்வோர் வந்தால்
அறிவுரை அல்ல
முதலில் செபம்.
“செபவாழ்வு இல்லாதவர்
அருள்வாழ்வில்
இருளைச் சுமப்பார்”
என்று உரைக்கும்
ஒளியின் குரல்.![]()
பதுவைப் பதியில்
புதுமைகள் பல
தவறுகளைச் சுட்டி,
சுடர்விளக்காய் நின்று
ஞான மறுமலர்ச்சியை
விதைத்தவர்
புனித அந்தோனியார்.![]()
அன்னை மரியாளின்
விண்ணேற்ற இரகசியத்தில்
அவர் நம்பிக்கை
ஆத்துமமும் சரீரமும்
பரலோகத்தில்
ஒளி பெறும் உண்மை.
ஆனால் ஒருநாள்
தியான நூலின்
சில வரிகள்
சிந்தையின் நிழலாய்
சந்தேகமாய்த் தங்கின.![]()
அந்த நாளில்
தனிமையின் அரங்கில்
மண்டியிட்ட செபம்;
சந்தேகத்தோடு
நம்பிக்கை போராட,
வானம் நெகிழ்ந்தது.![]()
மேகம் புடை சூழ
வெள்ளத்தின் மத்தியில்
ஒளி மலர்ந்தது;
அங்கே தோன்றினார்
அன்னை மரியாள்.![]()
“மகனே! அஞ்சாதே,”
என்ற அருள் மொழி
“இறைமகன் மனிதனாக
என்னிடம் அவதரிக்க
பேழையாகப் பயன்பட்ட
என் உடல்
கல்லறை அழிவைக் காணவில்லை.
இன்றும் இறைமகனின்
வலது பக்கத்தில்
விண்ணரசியாய்
வீற்றிருக்கிறேன்.”![]()
ஒளி மறைந்தது;
சந்தேகம் கரைந்தது;
நம்பிக்கை
நதியாய் ஓடியது.![]()
அந்நாளில்
விண்ணேற்றம் பற்றிய
சர்ச்சைகள் நடுவே,
அந்தோனியார் கூறினார்:
“இது உண்மை
நான் கண்டு கொண்டேன்.
அன்னை மரியாள்
விண்ணகம் எடுத்துச் செல்லப்பட்டார்;
இப்போது
விண்ணரசியாய்
வீற்றிருக்கிறார்.”![]()
கேட்டவர்கள்
எண்ணம் மாற்றினர்;
சந்தேகம் விட்டனர்;
நம்பிக்கை அணிந்தனர்.![]()
இன்றும் அந்தச் செபம்
காலம் கடந்து ஒலிக்கிறது
சந்தேகத்தில்
ஒளி ஏற்றும்
அருளின் சாட்சி,
கோடி அற்புதர்.
... See MoreSee Less
2 weeks ago
பதுவையாம் புனித அந்தோனியாரின் அற்புதங்கள் ![]()
வெட்டிய முடி அற்புதமாய் வளர்த்தது![]()
தினம் ஒரு அற்புதம்![]()
மௌனமாய் சென்று
அருளுரை கேட்டாள்
அச்சத்தின் நிழலில்
நம்பிக்கையைச் சுமந்து.![]()
அறிந்தான் கணவன்;
சினம் பொங்கினான்
அன்பின் கூந்தல்
அடியோடு அறுந்தது.![]()
கண்ணாடியில் தெரிந்தது
வலி மட்டும் அல்ல;
அவமானத்தின் முத்திரை.
கண்ணீர் கதறி
கருணையின் வாசலுக்கு
ஓடினாள்![]()
கோடி அற்புதர் அந்தோனியரை
கண்டு அவமானத்தில்
நாணி குறுகி நின்றாள்![]()
வார்த்தை அல்ல
முதலில் செபம்.
கைகள் மடங்கி
வானம் தழுவ,
ஆசீர்வாதம்
அமைதியாய் இறங்கியது.![]()
அதிர்ந்தது நேரம்
வெட்டப்பட்ட கூந்தல்
முன்போலவே
மலரத் தொடங்கியது!![]()
அற்புதம்!
நாணம் நன்றியாய் மாறி,
துதிப்பாடல்
இதயத்தில் பொங்க,
அவள் வீடு திரும்பினாள்
ஒளி சுமந்த தலைமுடியுடன்.![]()
கண்ணுற்றான் கணவன்
உடைந்தது அகந்தை.
“நான் செய்தது பாவம்”
என்று உணர்ந்து,
மனம் நொந்து
மனமாற்றம் பெற்றான்.![]()
அன்று முதல்
அன்பு ஆட்சியாய்,
மரியாதை
மொழியாய்;
ஒற்றுமை
வீட்டின் விளக்காய்.
அந்தோனியாரின் நாமம்
அவர்கள் இல்லத்தின்
நம்பிக்கையாய்.![]()
இன்றும் சொல்லுகிறது
அந்த அற்புதம்
வன்முறை அல்ல,
கருணையே வெற்றி;
அருள் மறுமலர்ச்சி.
... See MoreSee Less
2 weeks ago
2 weeks ago
பதுவையாம் புனித அந்தோனியாரின் அற்புதங்கள்
தினம் ஒரு அற்புதம் (53)![]()
வெற்றி தரும் சிலுவை![]()
அல்லும் பகலும் உழைத்தார் அந்தோனியார்,
அயலான்மா ஈடேற்றமே அவர்தம் உயிரார்.
நன்மை செய்தார், செபம் விதைத்தார்,
துன்புறும் உள்ளங்களுக்கு நம்பிக்கை கொடுத்தார்.![]()
உடல் சோர்ந்தது, இளைப்பு வந்தது,
களைப்பின் நிழல் அவர் மேல் விழுந்தது.
ஆனால் அந்த இளைப்பின் மறுபக்கமாய்
பசாசின் சோதனைகள் எழுந்தன தீயாய்.![]()
இரவு ஓய்விலும் கூட சாத்தான்
விடவில்லை தன் சூழ்ச்சியை,
மாயத் தந்திரம் கொண்டு வந்து
துன்புறுத்த நினைத்தான்.![]()
ஒரு தபசுகால நாளில்,
நெடுநேர மறையுரை, போதனை செய்து,
ஓய்வின்றி பாவப் பொறுத்தில்
அருட்சாதனம் பலர்க்கு வழங்கி,
நித்திரைக்கு அவர் சென்ற வேளையில்![]()
அச்சமின்றி சாத்தானவன்
அருகே வந்து தொண்டை நெரித்தான்,
கொல்ல நினைத்த இருள் நொடி
அந்த அறையை சூழ்ந்தது.![]()
அந்த வேளையிலும் அஞ்சாதவர்,
கன்னிமரியாவின் திருநாமம் உச்சரித்து,
திருச்சிலுவை அடையாளம் வரைந்தார்.![]()
இளமை முதல் பாடி வந்த
“ஓ! மகிமை பொருந்திய ஆண்டவளே!”
என்ற இனிய கீதம்
அவர் உதடுகளில் எழுந்தது.![]()
அந்த நொடியிலே
பிடி தளர்ந்தது,
பசாசு பஞ்சாய் பறந்து ஓடியது.![]()
கண்ணைத் திறந்து அவர் பார்த்தபோது
அப்படுக்கையறை முழுவதும்
மகிழ்ச்சிகரமான பிரகாசம்,
விண்ணுலக ஒளி நிறைந்தது.![]()
அது பசாசைத் துரத்தி,
தம் தாசனுக்கு ஆறுதல் அளிக்க
நேரடியாகப் பிரசன்னமான
மோட்ச இராக்கினியின் பேரொளி.![]()
இந்த அற்புத நிகழ்வை
ஒரு குருவானவரிடம்
அந்தோனியார் தாமே
பின்நாளில் எடுத்துரைத்தார்.![]()
தபசுகாலம் முடிந்தபின்,
உயிர்த்த ஞாயிறு தினத்தில்,
பதுவை நகரின்
குருக்கள், கலாசாலை அதிகாரிகள்,
மற்றும் பொது மக்கள் பலரும்![]()
பிரான்சிஸ்குச் சபை மடத்தில்
தங்கியிருந்த அந்தோனியாரிடம் வந்து
தாம் பெற்ற ஞான வாழ்வுக்கான
அறிவுரைகளுக்கு நன்றி கூறினர்.![]()
“எங்கள் மத்தியில் தங்கியிரும்,”
“தொடர்ந்து எங்களை வழிநடத்தும்,”
என்று அவர்கள் பணிவுடன் வேண்டினர்.![]()
ஆனால் அவர் மென்மையாகச் சொன்னார்
“என் பணி இன்னும் பல இடங்களில் உண்டு,
அருள் எல்லோருக்கும் செல்ல வேண்டும்.”![]()
இறைவனின் நற்செய்தி
முடிந்தளவும் எல்லோருக்கும்
அதுவே அந்தோனியாரின்
வாழ்வின் ஒரே குறிக்கோள்.![]()
சிலுவை அவரது வலிமை,
மரியா அவரது அடைக்கலம்,
நம்பிக்கை அவரது ஆயுதம்,
அருள் அவரது வெற்றி.
... See MoreSee Less
2 weeks ago
பதுவையாம் புனித அந்தோனியாரின் அற்புதங்கள்
தினம் ஒரு அற்புதம்![]()
காய்ச்சலைக் குணப்படுத்தும் அருள் நீர்![]()
புளோரன்ஸ் நகரின் பாதையிலிருந்து
புறப்பட்டார் அந்தோனியார்,
அருளின் விளக்காய்,
அன்பின் தூதராக.![]()
தன் எல்லைக்குள் சேர்ந்த
கிராமங்கள் பல,
மடங்கள் பல,
ஒவ்வொன்றையும் தரிசித்து
ஜெப வாழ்வில் ஒன்றிணைத்தார்.![]()
பசியுடன் காத்திருந்தோர்க்கு
வார்த்தை ஆனார்,
வியாதியில் வாடியோர்க்கு
நம்பிக்கையாய் ஆனார்.![]()
பரீஸ் என்னும் ஊரில்
ஒரு மடம் எழுந்தது,
அருள் நிறைந்த அமைதி
அங்கு குடிகொண்டது.![]()
பிரெஸ்ஸியா ஊரில்
மற்றொரு மடம் மலர்ந்தது,
செபத்தின் வாசம்
காற்றில் பரவியது.![]()
அந்த இடங்களில்
பொங்கி எழுந்த ஊற்று நீர்,
சாதாரண நீர் அல்ல
செபம் தொட்ட புனித நீர்.![]()
அந்தோனியாரின் கரங்களில்
அருள் மலர்ந்தது,
அவர் சொன்ன செபத்தில்
வியாதி விலகியது.![]()
காய்ச்சலில் நடுங்கிய உடல்கள்,
அந்நீரால் அமைதி பெற்றன,
வேதனையில் துடித்த உள்ளங்கள்,
நம்பிக்கையால் வலிமை பெற்றன.![]()
இன்றும் அந்த நீரை
மக்கள் தேடி வருகிறார்கள்,
நோயோடு அல்ல
நம்பிக்கையோடு செல்கிறார்கள்.![]()
காய்ச்சல் போன்ற துயர்கள்
மெதுவாக விலகுகின்றன,
செபமும் நம்பிக்கையும்
மனதில் ஒளியாக எழுகின்றன.![]()
அருள் நீர் பேசும் கதை இது,
அன்பு செய்த அதிசயம் இது,
மருந்தல்ல
நம்பிக்கையின் மொழி இது.
... See MoreSee Less
2 weeks ago
பதுவையாம் புனித அந்தோனியாரின் அற்புதங்கள்
தினம் ஒரு அற்புதம்![]()
பக்தி நடந்த பாதையில்
மழையும் நனைக்கவில்லை![]()
பிரைவ் ஊர் மடத்தின் வாசலில்
பசியின் நிழல் விழுந்த நாள்கள்,
உணவு இல்லா நேரங்களில்
குருக்களின் நெஞ்சம் சோர்ந்த நாள்கள்.![]()
அந்தோனியார்மேல் அன்பு கொண்ட
ஒரு தாய் இருந்தாள் ஊரில்,
அப்பமும், பழமும், காய்கறியும்
அருளாய் அனுப்பும் வழக்கம்.![]()
ஒருநாள் பெருமழை பொழிந்தது,
வானம் கருமை போர்த்தியது,
“மழையில் நனைந்து நோய்வருமே”
என்று பணிப்பெண் அஞ்சியது.![]()
ஆயினும் அந்த தாயாரின் சொல்கேட்டு
கூடையைத் தலைமேல் சுமந்தாள்,
நீரால் நிரம்பிய தெருக்களைக் கடந்து
மடம் நோக்கி நடந்தாள்.![]()
மழை கொட்டியது இடியோடு,
வழியெல்லாம் வெள்ளமாய்,
ஆனால் அவள் ஆடை நுனியில்கூட
ஒருத் துளி நீரும் இல்லை வியப்பாய்!![]()
இதைக் கண்ட மக்கள் நின்றனர்,
இதயம் அதிசயத்தில் நனைந்தது,
பணிவோடு செய்த சேவைக்கே
பாதுகாப்பாய் அருள் பொழிந்தது.![]()
அந்த தாயின் மகனான குருவும்
குறிப்பு ஏட்டில் எழுதினார்,
“பக்தி நடந்த பாதையில்
மழையும் நனைக்கவில்லை” என்று.![]()
குருக்களுக்கு சேவை செய்வதை
அந்தோனியார் மிக விரும்புவார்
என்பதை இந்நிகழ்வே
நமக்குணர்த்தி நிற்கிறது.![]()
பணிவோடு செய்த பணி
அற்புதமாய் மலர்ந்தது,
அன்பால் நடந்த சேவை
அருளாய் பாதுகாக்கப்பட்டது.![]()
கோடி அற்புதர் அந்தோனியாரின்
கருணை நிழலில் நாம் வாழ,
சேவையும் பக்தியும்
நம் வாழ்வின் வழியாவதாக.![]()
கோடி அற்புதர் அருள் பெறுக
... See MoreSee Less
2 weeks ago
பதுவையாம் புனித அந்தோனியாரின் அற்புதங்கள்
தினம் ஒரு அற்புதம் ![]()
குகையில் தோன்றிய அற்புத நீரூற்று![]()
மறையுரை சொல்லச் செல்லும் வழியில்
பிரைவ் எனும் கிராமம் வந்தார்,
அமைதி நிறைந்த அந்த ஊரில்
ஒரு மடம் அமைத்தார் அந்தோனியார்.![]()
மடத்தின் அருகே
ஒரு சிறு குகை,
செபமும் தவமும்
நிறைந்த இடம் அது.![]()
ஒரு நாள்
தனிமையில் செபித்துக் கொண்டிருக்க,
உடல் தளர,
தண்ணீர் தேவைப்பட்டது.![]()
எவரையும் அழைக்கவில்லை,
எதையும் நாடவில்லை
இறைவனை மட்டும்
மனமார வேண்டினார்.![]()
அந்த நொடியிலே
குகைச் பாறையிலிருந்து
நீரூற்று புறப்பட்டது,
அருள் பொங்கியது.![]()
உலர்ந்த பாறை
உயிர் பெற்றது,
நீராய் மாறி
கருணை சொரிந்தது.![]()
இன்றும் அந்த நீரால்
நோய்கள் குணமடைகின்றன,
வரலாறு சொல்லும்
அற்புத சாட்சி அது.![]()
மனிதன் தாகம் கொள்ள,
இறைவன் கருணை பொழியும்
அந்தோனியாரின் செபத்தில்
பாறையும் பேசும்.
... See MoreSee Less
2 weeks ago
பதுவையாம் புனித அந்தோனியாரின் அற்புதங்கள்
தினம் ஒரு அற்புதம் ![]()
இளைய அருட்சகோதரரின் மன மாற்றம்![]()
ஏர்ள்ஸ் நகர மடத்தில்
ஒரு இளம் அருட்சகோதரர்,
துறவறப் பாதையில் நடந்தாலும்
மனம் கலங்கித் துடித்தார்.![]()
இல்லற வாழ்வு இனிமை என
சாத்தான் விதைத்த எண்ணம்,
அவரது உள்ளத்தில் நாள்தோறும்
அலைபாய்ந்து வலுத்தது.![]()
மடம் விட்டு ஓடிவிட
இரகசியமாக எண்ணினார்,
அந்த எண்ணம்
இருளின் குரல்.![]()
அந்தோனியார் அறிந்தார்,
கருணை கொண்டு தேடிச் சென்றார்,
கலங்கிய சகோதரனை
அணுகி அமர்ந்தார்.![]()
துறவறத்தின் மகிமை,
புனித வாழ்வின் உயர்வு,
இறைவன் தரும் ஆனந்தம்
எல்லாம் மென்மையாய் சொன்னார்.![]()
பின் ஊதி செபித்தார்
“திடமும் ஞானமும் ஆன
தூய ஆவியாரைப் பெறுவாயாக.”![]()
அந்த நொடி
அவர் மயங்கி,
தரையில் விழுந்தார்,
இறந்தவர்போல் நிசப்தமாய்.![]()
ஆனால் அந்த அமைதியில்
வானம் திறந்தது,
மோட்ச இராச்சியம்
அவர்க்கு வெளிப்பட்டது.![]()
சொல்லற்கரிய ஒளி,
அலங்காரமிக்க மகிமை
மனம் நிறைக்கும் காட்சி.![]()
சிறிது நேரம் கழித்து
மயக்கம் நீங்கி எழுந்தார்,
கண்டதைச் சொல்ல முயன்றபோது
அந்தோனியார் தடுத்தார்.![]()
மௌனத்தில் மறைந்தது
வானக ரகசியம்,
ஆனால் மனத்தில்
உறுதியாய் பதிந்தது.![]()
அன்றிலிருந்து
சோதனை அகன்றது,
வாழ்வு தெளிந்தது,
அருட்சகோதரரின் உத்தம வாழ்வு.![]()
மனமாறுதல்
வாள் கொண்டு அல்ல,
கருணை,
செபம்,
அன்பு கொண்டு என்பதை
மீண்டும் நமக்கு காண்பித்தார்
கோடி அற்புதர் அந்தனியார்
... See MoreSee Less
2 weeks ago
பதுவையாம் புனித அந்தோனியாரின் அற்புதங்கள்
தினம் ஒரு அற்புதம்![]()
மோகப் பாவச் சோதனையில் நின்றும் மீட்டார் புனித அந்தோனியார்![]()
சோலின் யாக் எனும் ஊரில்
ஆசீர்வாதப்பர் மடம் ஒன்று இருந்தது,
அன்புடன் அந்தோனியாரை
விருந்துக்கு அழைத்தது.![]()
பரிசுத்த வாழ்க்கை
அவரில் கண்டனர்,
அது இறைவனில் அருள்,
இறைவனின் ஒளி.![]()
அந்த ஒளியை நோக்கி
ஒரு அருட்தந்தை வந்தார்,
மனச் சுமையுடன்
அந்தரங்கமாய் சொன்னார்.![]()
“அல்லும் பகலும்
மோகச் சோதனை,
என்னைக் கலங்கச் செய்கிறது,
தப்ப முயன்றும்
வீழும் பயம் தொடர்கிறது.”![]()
“இந்தக் கொடிய பாவத்திலிருந்து
என்னை மீட்கும் வழி
எனக்குச் சொல்லுங்கள்”
என்று கண்ணீருடன் வேண்டினார்.![]()
கருணையால் உருகிய
புனித அந்தோனியார்,
ஞான வார்த்தைகளால்
அவரை ஆற்றினார்.![]()
பின் தம் அங்கியை
அவருக்குக் கொடுத்து,
“இதை அணிந்து
இறைவனை நம்புங்கள்” என்றார்.![]()
அந்த அங்கியை அணிந்த நாள் முதல்
நீண்ட காலச் சோதனை
அவரை விட்டு அகன்றது,
வேதனை மறைந்தது.![]()
அமைதி வந்தது,
ஒழுக்கம் மலர்ந்தது,
பரிசுத்த வாழ்வு
ஒளிர்ந்தது.![]()
மோகத்தை வெல்லும்
வாள் அல்ல
கருணை,
ஆசீர்வாதம்,
நம்பிக்கை.![]()
அந்தோனியாரின்
அன்பு வழியே
பலவீனம்
பலமாகியது.
... See MoreSee Less
2 weeks ago
பதுவையாம் புனித அந்தோனியாரின் அற்புதங்கள்
தினம் ஒரு அற்புதம் ![]()
விருந்து உணவில் சொட்டிய இரத்தம்![]()
ஒரு செல்வந்தன் அழைத்தான்
அந்தோனியாரை விருந்துக்கு
பலமுறை இயலாதது,
ஒருநாள் கருணை இசைந்தது.![]()
மதிய நேரம்,
செல்வந்தன் வீடு நிறைந்தது,
விருந்தினர்கள் கூடி
பெருமை பொங்கியது.![]()
பக்தியுடனும் மரியாதையுடனும்
அந்தோனியார் வரவேற்கப்பட்டார்,
அடக்கத்தின் உருவாய்
அமைதியுடன் அமர்ந்தார்.![]()
விருந்து மேசை
பிரமாதமாய் மின்னியது,
அந்தோனியார் இறைபுகழ் பாடி
உணவை ஆசீர்வதித்தார்.![]()
பின்னர் சொன்னார்
சிறு உரையாய்
“செல்வம் சேர்க்கும் வழிகள்
எல்லாம் நேர்மையா?![]()
ஏழைகளின் உழைப்பும்,
அநாதைகளின் கண்ணீரும்,
அநியாய வட்டியும்
இச்செல்வத்தில் கலந்ததல்லவா?![]()
இவ்வாறு வந்த செல்வம்
நிலைக்காது,
இறைவனின் இராச்சியத்துள்
புகுவது எத்துணை கடினம்.”![]()
அமைதி நிறைந்த மேசையில்
உணவை நோக்கினார்,
கையில் எடுத்தார்,
இறைவனை வேண்டினார்.![]()
அச்சமயம்
அவர்பிழிந்த உணவிலிருந்து
சொட்டுச் சொட்டென
இரத்தம் வடிந்தது.![]()
அதிர்ச்சி!
அமைதி!
நிசப்தம்!![]()
அப்போது அந்தோனியார் சொன்னார்
“இதோ!
ஏழைகளின் இரத்தம்
சொட்டுச் சொட்டென வடிகிறது.
இந்த உணவை
நான் உண்ணமாட்டேன்.”![]()
அவ்விடம் விட்டு
அமைதியாய் நடந்தார்,
விருந்து நிறைந்த மேசையில்
மனச்சாட்சியை விட்டுச் சென்றார்.![]()
செல்வம் அல்ல
நீதியே உணவு,
கருணை இல்லாத விருந்து
இரத்தம் தான்.
... See MoreSee Less
2 weeks ago
பதுவையாம் புனித அந்தோனியாரின் அற்புதங்கள் ![]()
தினம் ஒரு அற்புதம் ![]()
மரித்த வாலிபனுக்கு உயிர் தந்த
கோடி அற்புதர் அந்தோனியார் ![]()
அரிய அற்புதங்கள்
எப்போது நிகழும் என
மனிதன் அறியான்
இறைவன் திட்டம்
அன்பின் மொழி.![]()
கருணையின் கருவியாய்
அந்தோனியார் நின்றார்,
குருமடத்தில் கற்பித்தும்,
ஊர்களில் உரையாற்றியும்.![]()
வெர்செல்லி நகரம்
விசுவாசம் சோதிக்கப்பட்ட காலம்,
வேத விரோதத்தின் நிழலில்
கிறிஸ்தவர் கலங்கிய நாட்கள்.![]()
அந்நேரம் தைரியம் ஊட்ட
இறைவன் அனுப்பினார்
அற்புதரான அந்தோனியாரை
ஒளியாய், நம்பிக்கையாய்.![]()
ஒரு நாள் பிரசங்கம் நடந்து கொண்டிருக்க,
மரித்த வாலிபனின் உடலை
அடக்கத்திற்குக் கொண்டு சென்றனர்
அழுகையால் சூழ்ந்த பெற்றோர்.![]()
அந்தோனியார் கண்டார்
தாங்க முடியாத துயரத்தை,
உரை நிறுத்தி
கருணை பேசினார்.![]()
மௌனமாகச் செபித்து,
பிரேதத்தின் அருகில் நின்று,
இரு கைகளும் விரித்து,
அவர் சொன்னார்![]()
“கிறிஸ்து நாதரின் நாமத்தால்,
இளைஞனே, எழுந்திரு!”![]()
அதிர்ச்சியாய் அந்த நொடி
மரணம் ஒதுங்கியது,
உயிர் திரும்பியது,
வாலிபன் எழுந்து நின்றான்.![]()
கூடிய மக்கள்
அமைதி இழந்தனர்,
ஆச்சரியத்தில் உறைந்தனர்,
பின்னர் ஆனந்தமடைந்தனர்.![]()
“இவ்வளவு வல்லமையுள்ள
அர்ச்சியசிஷ்டரைத் தந்த
உன்னத இறைவனுக்கு
புகழும் நன்றியும்!”
என்று பாடினர்.![]()
மரணம் கூட
கேட்கும் இடத்தில்,
கருணை பேசினால்
உயிர் மீளும்
கோடி அற்புதர் அந்தோனியார்
அன்பின் வழியாக.![]()
கருணை பேசும் இடத்தில்
மரணமும் பின்வாங்கும்.![]()
புனித அந்தோனியாரின்
இறை நம்பிக்கையும்
கிறிஸ்து நாதரின் நாமமும்
உயிரை மீட்ட அற்புதம்.![]()
இவ்வாறே இன்று நம்மிடமும்
நம்பிக்கை உயிர்ப்படையட்டும்.
... See MoreSee Less
2 weeks ago
பதுவையாம் புனித அந்தோனியாரின் அற்புதங்கள்
தினம் ஒரு அற்புதம்![]()
“இயேசு நசரேன் – யூதர்களின் அரசர்”![]()
பிரான்ஸ் தேசம், ஏர்ள்ஸ் நகரம்,
மடத்தின் மண்டபம் நிறைந்த நாள்;
சபையின் மாநாடு கூடிய வேளை
அந்தோனியார் உரை தொடங்கினார்.![]()
“இயேசு நசரேன்,
யூதர்களின் அரசர்”
என்று மையம் கொண்டு
வார்த்தைகள் ஒளியாகப் பொழிந்தன.![]()
சிலுவைப் பாதை,
கிறிஸ்துவின் பாடுகள்,
வேதனைக்குள் ஒளியும்
மீட்பின் மகிமையும்![]()
இதயம் உருக,
கண்கள் நனைய,
உள்ளங்கள் அனைத்தும்
இறைவனை நோக்கின.![]()
அந்நேரம்
மொனால்டோ எனும் துறவி,
மேல்நோக்கி கண் உயர்த்தினார்.![]()
வானத்தில்
கைகள் சிலுவையாய் விரிந்து,
ஒளி முகம் தாங்கி,
மிதந்து வந்தார் பிரான்சிஸ் அசிசியார்.![]()
சபையார்மீது
சிலுவை அடையாளம் வரைந்து,
ஆசீர்வதித்தார் அமைதியாய்
பின்னர் ஒளியாய் மறைந்தார்.![]()
அங்கிருந்த யாவரும்
புத்துணர்வு பெற்றனர்,
மனமகிழ்ச்சி
அவர்களை நிறைத்தது.![]()
பின்னாளில்
மொனால்டோ கூறிய சாட்சி,
பொனவென்சர் உறுதி செய்த உண்மை,
நிகழ்வை முத்திரையிட்டது.![]()
சிலுவையில் அறைந்த
ஆண்டவர்மீது கொண்ட
அதிக அன்பின் சின்னமே
புனித பிரான்சிஸ் அசிசியார்.![]()
இறுதிக் காலம் அண்மித்ததால்
இறுதி ஆசீர்வாதமாய்,
சபையாருக்கு அருளிய
வானக காட்சி அது.![]()
மேலும்
அந்தோனியாரின் உயர்ந்த உரைமேல்
பிரான்சிஸ் அசிசியார் கொண்ட
அங்கீகாரத்தின் ஒளிச்சின்னம்.![]()
சிலுவை பேசினால்
வானமும் பதில் தரும்
புனிதரின் அந்தோனியாரின் அன்பில்
இறைமாட்சி வெளிப்படும். என்பதே உறுதி.
... See MoreSee Less
2 weeks ago
பதுவையாம் புனித அந்தோனியாரின் அற்புதங்கள்
தினம் ஒரு அற்புதம்![]()
செடிகளுக்கு உயிர் தந்த அந்தோனியார்![]()
இயேசுவின் பாதம் பின்தொடர்ந்து,
ஏழ்மையின் அரணில் வாழ்ந்தார் அந்தோனியார்;
கல்லே தலையணை,
தரையே படுக்கை
தவமே வாழ்க்கை ஆனது.![]()
சலிப்பறியாத சேவை,
இடையறாத கடுந்தவம்;
உடல் குன்றினாலும்
உள்ளம் குன்றவில்லை.![]()
“என்னைப் பலப்படுத்துகிறவரைக் கொண்டு
என்னால் எல்லாம் செய்ய முடியும்”
என்ற நம்பிக்கை
அவரின் மூச்சாயிற்று.![]()
பதுவை நகரில்
மரியன்னை மடத்தின் நிழலில்
எழுத்தும், செபமும்,
மறையுரையும் தொடர்ந்தன.![]()
குறித்த நேரத்தில்
மக்கள் கூடினர்
அருள் சொற்கள் கேட்க
இதயங்கள் திறந்தன.![]()
ஆனால் அந்தக் கூட்டத்தின் காலடியில்
பாசத்துடன் வளர்த்த
பச்சைச் செடிகள்
பாழாய் விழுந்தன.![]()
பட்டுப்போன இலைகளைப் பார்த்து
துறவியர் பதறினர்;
அவர்களின் துயரம்
அந்தோனியாரின் நெஞ்சைத் தொட்டது.![]()
அருள் கையால்
செடிகளைத் தொட்டார்;
வறண்ட மண்ணில்
உயிர் விழுந்தது.![]()
அற்புதம்!
உலர்ந்த தண்டு துளிர்த்தது;
மரணத்திலிருந்து
வாழ்வு மீண்டது.![]()
செடிகள் மட்டுமல்ல
அந்த இடத்தில்
வாழ்வும் துளிர்த்தது;
தவ வாழ்வு விரும்புவோர்க்கென
தவமடம் எழுந்தது.![]()
இலைகளுக்குக் கூட
உயிர் கொடுத்தவர்
உள்ளங்களுக்கு
ஒளி தந்தார் அந்தோனியார்.
... See MoreSee Less
2 weeks ago
பதுவையாம் புனித அந்தோனியாரின் அற்புதங்கள்
தினம் ஒரு அற்புதம் ![]()
திருந்திய திருடர்கள்![]()
அந்தோனியார் மறையுரை ஒலிக்க,
வணிகச் சாலை மௌனமானது;
கடைகள் மூடப்பட்டன,
இதயங்கள் திறந்தன.![]()
வர்த்தகர், சிறு வியாபாரி
விற்பனையை விட்டு விலகி,
அருள் சொற்கள் கேட்க
அவர்கள் கூடினார்கள்.![]()
முன்பு இருளில் நடந்தவர்கள்,
களவின் பாதை தேர்ந்தவர்கள்,
அவருடைய ஒரு வார்த்தையிலே
ஒளியை கண்டவர்கள் ஆனார்கள்.![]()
ஒருநாள்
திறந்த வெளி அரங்கம்;
மக்கள் வெள்ளமாய் திரண்டனர்,
அவர்கள் நடுவே
திருடர் கும்பலும் கலந்து நின்றது.![]()
அந்தோனியார் உணர்ந்தார்,
அறிந்தார்,
அன்றைய உரை
உள்ளங்களை அறுக்கும் வாளாக வேண்டும் என்று.![]()
“களவு செய்யாதிருப்பாயாக
இது பத்துக் கட்டளைகளுள் ஒன்று”
என்று தொடங்கி,
பிறர் பொருள் பறிப்பின்
வலி, கண்ணீர்,
இழப்புகளை உரைத்தார்.![]()
“களவு
ஒரு கை நீட்டல் அல்ல;
பல நேரங்களில்
கொடூரத்துக்கும்
கொலைக்கும் வழிவகுக்கும்”
என்று எச்சரித்தார்.![]()
இறுதியில் அவர் குரல் மென்மையாயிற்று
“இயேசுவின் வலப்புறம்
சிலுவையில் அறையப்பட்ட
கள்வன் தீமாஸ்,
இயேசுவிடம் மன்றாடினான்;
மன்னிப்பைப் பெற்றான்.![]()
அவனைப் போல
உள்ளம் மாறி மன்றாடுவோர்
யாவரும்
நிச்சயம் மன்னிக்கப்படுவர்”
என்றார்.![]()
அந்த வார்த்தைகள்
திருடர்களின்
நெஞ்சை உடைத்தன;
களவின் சங்கிலி
அங்கே அறுந்தது.![]()
பலர் முன் வந்து,
கண்ணீருடன்
அந்தோனியாரின் பாதம் பணிந்து,
மன்னிப்பு கேட்டனர்
அன்றே, அவ்விடத்திலே.![]()
ஆண்டுகள் கழித்து
பிரான்சிஸ்கன் சபைத் துறவியிடம்
ஒரு திருடன் சாட்சி சொன்னான்:
“அன்றே நான் திருந்தினேன்” என்று.![]()
“ரோம்நகர் புனித யோவான்,
புனித பவுலின் கல்லறைகளை
பன்னிரண்டு முறை தரிசிக்க
அந்தோனியார் எனக்கு தண்டனை அளித்தார்.![]()
அதை நிறைவேற்றியபின்
இன்று நான்
மன அமைதியுடன் வாழ்கிறேன்”
என்று அவன் கூறினான்.![]()
அந்தோனியார்
தண்டிப்பவர் அல்ல;
திருத்துபவர்.![]()
களவையும்
அருளால் கரைத்த
கோடி அற்புதர் அந்தோனியார்
... See MoreSee Less

