புனித சூசையப்பர் தந்தையர் மன்ற முகநூல் பக்கம்

Cover for புனித சூசையப்பர் தந்தையர் மன்றம் - சுன்னாகம்
156
புனித சூசையப்பர் தந்தையர் மன்றம் - சுன்னாகம்

புனித சூசையப்பர் தந்தையர் மன்றம் - சுன்னாகம்

உழைப்பால் உயர்வடைவோம் - சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலய தந்தையர் மன்றம்

அனைவருக்கும் வணக்கம். தந்தையர் மன்றத்தினுடைய வருடாந்த ஆன்மீக சுற்றுலா தொடர்பாக கடந்த கூட்டத்திலே கலந்துரையாடப்பட்டது.அதன் அடிப்படையில் இம்மாதம் அவ்வாறான ஒரு சுற்றுலா ஒன்றினை ஏற்பாடு செய்யலாம் என சபையோரினால் ஆலோசனை முன் வைக்கப்பட்டது. அதற்கு அமைய இன்றைய தினம் திருப்பலி பின்னர் தந்தையர்கள் ஒன்று கூடி இது தொடர்பாக கலந்துரையாடினர். அதன் விவரம் வருமாறு......*எதிர்வரும் 12.07.2026 ஞாயிறு சுற்றுலா செல்வதென தீர்மானிக்கப்பட்டது*சுற்றுலாவிற்கான இடத்தெரிவு சாட்டி என எல்லோராலும் விரும்பப்பட்டது.*நமது பங்கு தந்தையுடன் கலந்தாலோசித்து சாட்டியிலேயே ஒரு திருப்பலி ஏற்பாடு செய்யவென ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன.*ஆறரை மணிக்கு சுற்றுலா பயணம் ஆரம்பிக்கப்பட வேண்டும் என கலந்துரையாடப்பட்டது. *ஒவ்வொரு தந்தையரிடமிருந்தும் ரூபா 2000 அறவிடப்படும் என கலந்தரையாடப்பட்டது. போக்குவரத்து செலவு மற்றும் உணவுக்கான செலவுகள் போன்றன உட்பட்ட உத்தேச செயலவீனத்தினை தயாரிக்கலாம் என ஆலோசனை வழங்கப்பட்டது.கருத்தரங்கு மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் போன்றவற்றிற்கு போதிய அளவு நேரம் ஒதுக்கி தந்தையர்கள் மகிழ்வாக நேரத்தினை கழிக்க வசதி படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.தயவுசெய்து மேற்குறித்த விடையத்தினை கவனித்து அனைவரும் இந்த ஆன்மீக சுற்றுலா நிகழ்விற்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். இதிலே வயது போனவர்கள் இயலாதவர்கள் என்று பாகுபாடு இல்லாமல் அனைவரும் இந்த சுற்றுலாவில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆகவே அனைத்து தந்தையர்களும் வருகின்ற ஞாயிறு தங்களுடைய நேரத்தினை ஒதுக்கி குறிப்பிட்டது போன்று 6:30 மணிக்கே சுற்றுலாவிற்கான பயணத்தினை ஆரம்பித்து மகிழ்வான நாள் ஒன்றாக அன்றைய தினத்தை கழிப்பதற்கு உங்கள் அனைவரையும் அன்போடு அழைத்து நிற்கின்றோம். ... See MoreSee Less
View on Facebook
இன்று ஞாயிறு காலை 11:00 மணியளவில் சுன்னாகம் புனித அந்தோனியார் சேமக்காலையில் குழாய்க்கிணறு திரு.S.ஜோசப் ஞானரத்தினம்(அன்ரன் பிரபுராஜ் - ஜேர்மனி)அவர்களின் அனுசரணையில் தோண்டப்பட்டது. ... See MoreSee Less
View on Facebook
இன்று மாலை (03/06) 7 மணியளவில் ஆலயத்தில் சிரமதானம் இடம்பெறும் அனைத்து தந்தையர்களும் கலந்துகொள்ளவும் ... See MoreSee Less
View on Facebook
நாளைய(24.05.2026) திருப்பலியின் பின்னர் தந்தையர் மன்றத்தின் பெருநாள் தொடர்பான விசேட கூட்டம் நடைபெறும். ... See MoreSee Less
View on Facebook
மரண அறிவித்தல்_________________சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலய திருஅவையை சார்ந்த திருமதி சிவஞானம் தவமணி நேற்று 12.08.2025 செவ்வாய்கிழமை மதியம் காலமானார்.இவரது நல்லடக்க ஆராதனை இன்று 13.08.2025 புதன்கிழமை பிற்பகல் 3:00 மணிக்கு சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலயத்தில் இடம்பெற்று சுன்னாகம் புனித அந்தோனியார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும் என குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். ... See MoreSee Less
View on Facebook
இன்றும் நாளையும் கீழ் வரும் முகநூல் பக்கத்திலும் யூரிப் ஊடகத்திலும் திருப்பலிகள் நேரடியாக ஒளிபரப்பப்படும். யாழ்ப்பாண மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மையம்FB: Marainathi Jaffna dioceseYoutube: Marai Alai Media ... See MoreSee Less
View on Facebook
நேற்று தனது 12வது குருத்துவ அபிஷேக தினத்தை எமது பங்குத்தந்தை தனது பெற்றோரோடும் சகோதரர்களேடும் எமது பங்கு மக்களோடும் கேக் வெட்டி அகமகிழ்ந்தார். ... See MoreSee Less
View on Facebook
எமது ஆலய கொடியோற்றம் 2025 இன்று வெகு விமரிசையாக தொடங்கியது. பங்குதந்தை நிக்சன் கொலின்ஸ் தலைமையில் மண்ணின் மைந்தன் கிறிஸ்டி, பூநகரி பங்குத்தந்தை என மூன்று அருட்தந்தையர்கள் இணைந்து கூட்டுதிருப்பலியாக "கடவுளுக்கு உரியவற்றை கடவுளுக்கு கொடுங்கள்" எனும் கருப்பொருளில் இடம்பெற்றது. ... See MoreSee Less
View on Facebook
நாளைய திருப்பலியின் பின்னர் திருநாள் தொடர்பான முக்கிய கூட்டம் இடம்பெறும் அனைத்து உறுப்பினர்களும் தவறாது கலந்துகொள்ள வேண்டுகிறோம் ... See MoreSee Less
View on Facebook
உதிரம் கொடுத்து மனிதம் காப்போம்இரத்ததான முகாமுக்குஇளையோர் மன்றம் அழைப்பு._______________________சுன்னாகம் புனித அந்தோனியார் இளையோர் மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இரத்ததான நிகழ்வு நாளை 25.05.2025 ஞாயிறு காலை 9:30 மணிமுதல் சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலய முன்றலில் நடைபெறவுள்ளது.உதிரம் கொடுத்து மனிதம் காப்போம் என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ் இரத்ததான நிகழ்வில் 18 வயது முதல் 50 வயது வரையான தகுதியுள்ள குருதிக்கொடையாளர்கள் அனைவரையும் இவ் இரத்ததான நிகழ்வில் கலந்துகொண்டு, ஏற்பட்டுள்ள குருதி தட்டுப்பாட்டை நிவர்த்திசெய்ய முன்வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை இரத்தவங்கியால் மேற்படி இரத்ததான முகாம் முன்னெடுக்கப்படவுள்ளது. தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் புற்றுநோய் சிகிச்சைகளின்போது அதிகமாக குருதி தேவைப்படுவதாக தெரியவருகிறது. ... See MoreSee Less
View on Facebook
எமது மன்ற முன்னைநாள் உறுப்பினரும் தற்போதய மன்ற செயலாளரின் தந்தையும் அருட்தந்தை கிறிஸ்ரியின் தந்தையுமான அமரர் குருசுமுத்து பாக்கியநாதன் அமரத்துவம் அடைந்துவிட்டார். இறுதியாத்திரை நிகழ்வுகள் பின்னர் அறிவிக்கப்படும். ... See MoreSee Less
View on Facebook
தொழிலாளர்களின் பாதுகாவலரான புனித சூசையப்பரே, எங்கள் குடும்பங்களையும், தொழில்துறைகளையும் நிறைவாக ஆசீர்வதித்தருளும். ... See MoreSee Less
View on Facebook
எதிர்வரும் 27.04.2025 ஞாயிறு காலை 4.30 மணிக்கு பிரமனந்தனாறு இறை இரக்க ஆலயத்திற்கு புறப்பட எமதுஆலய முன்பாக பஸ் வண்டி தயாராக இருக்கும்.திருவிழா முடிந்த பின்னர் மு.ப.11.30 மணிக்கு மீண்டும் சுன்னாகம் புறப்படும் . எனவே பங்குபற்ற விரும்புவோர் பஸ் கட்டணத்தை செலுத்தி பங்குபற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம்.நன்றி ... See MoreSee Less
View on Facebook
மறைந்த பாப்பரசரின் ஆன்ம இளைப்பாற்றி திருப்பலி நாளை சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு திருச்செபமாலையுடன் ஆரம்பமாகும். திருப்பலிக்கு வரும்போது பூக்கள் கொண்டுவருமாறு கேட்டுக்கொள்கின்றோம்.நன்றி பங்குத்தந்தை ... See MoreSee Less
View on Facebook
கல்லறைக்குள் அல்ல நம் இதயங்களுக்குள் தேடுவோம் உயிர்த்த ஆண்டவரை.....Happy Easter 🐣 ... See MoreSee Less
View on Facebook
இயேசு கிறீஸ்து குருத்துவத்தை ஏற்படுத்திய இந்நாளில், பணிக்குருத்துவத்தை தெரிந்துகொண்ட எமது பங்குத்தந்தை மற்றும் எமது மண்ணின் அருட்தந்தையர்களை வாழ்த்தி நிற்கிறோம். ... See MoreSee Less
View on Facebook
View on Facebook
இன்று தனது 26வது குருத்துவ அபிஷேக ஆண்டு நிறைவைக் கொண்டாடும் அருட்பணி ரொபின்சன் ஜோசப் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெருவிப்பதுடன் அவர் தமது ஆன்மீக வாழ்விலும் ஆசிரிய சேவையிலும் நிலைத்து வளமுடன் வாழ இறைவன் அவருக்கு துணையாய் இருந்திட இந்நாளில் அவருக்காய் செபிப்போம். ... See MoreSee Less
View on Facebook
இன்றைய குருத்தோலை ஞாயிறு திருப்பலி பங்குத்தந்தை நிக்சன் கொலின் தலைமையில் எமது ஆலயத்தில் மிக சிறப்பாக இடம்பெற்றது. ... See MoreSee Less
View on Facebook
நாளை திருப்பலியின் பின்னர் சூசையப்பர் தந்தையர் மன்றத்தின் மாதாந்த சிறப்பு கூட்டம் நடைபெறும். நிதி தொடர்பான கூட்டமாக அமைவதனால் அனைத்து உறுப்பினர்களும் தவறாது கலந்து கொள்ளவும். ... See MoreSee Less
View on Facebook
Scroll to Top