சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலயத்தின் சிறப்பு

சுன்னாகம் என்பது வெள்ளி மலையைக் குறிக்கும். அயல் கிராமங்களுக்கு எல்லாம் சிகரமாகத் திகழ்கின்றது. செல்வமும் செழிப்பும் சீரும் சிறப்பும் மிக்க எங்கள் கிராமம் ஈழநாட்டில் உள்ள பெரிய பட்டினங்களில் ஒன்று. இங்கு இருக்கும் சந்தை நமது நாட்டிலுள்ள சந்தைகளில் மிகவும் பிரபலயமானது புகையிரத நிலையம், தபால்கந்தோர், பெரிய பஸ்நிலையம், பொலிஸ் நிலையம் என்பன எங்கள் ஊருக்கு அணிகலன்களாக விளங்குகின்றன. இங்கிருக்கும் மின்நிலையம் குடாநாட்டில் உள்ள இருளைப் போக்குகின்றது. இதனால் அல்லோ நம் நகரை மின்நகர் எனக் குறிப்பிடலாம். இத்தனை சிறப்புகள் கொண்ட சுன்னை நகரின் மத்தியில் திலகமாக விளங்குவது புனித அந்தோனியார் ஆலயமாகும். இது ஒரு தொன்மையான கோயில். (இங்கு 1600ஆம் ஆண்டிற்கு முன்னர் குடியேறிய கத்தோலிக்க மக்கள் மத்தியில் 1837இல் சுன்னாகம் கிராமத்தில் கத்தோலிக்க கோயில் ஒன்று இருந்தது என்பது சரித்திரம்) இது காணிக்கை மாதா கோயிலாக ஆரம்பிக்கப்பட்டது என்பது வழிவந்த கதை, இங்கு புனித அந்தோனியாரின் சுரூபமும் கூடும் காணப்பட்டது. புனித அந்தோனியாரின் சுரூபம் போர்த்துக்கேய கலாசாரப் பாணியாக இருந்தது. புனிதரின் திருச்சுரூபம் அது வைக்கப்பட்டிருந்த கூடும் புதுமை மிகுந்ததாய் இருந்தது என்பதற்குப் பல சான்றுகள் உள. மிக முக்கியமானதாக அமைந்தது ஒன்று. இக்கோயிலின் சீர்சிறப்பையும் செழிப்பையும் கண்ட பதித அஞ்ஞானிகள் அழுக்காறு கொண்டிருந்தனர். அவர்களால் ஏவப்பட்ட ஓர் ஊமையன் என்று சொல்லப்படும் ஒருவன் ஓலையால் வேயப்பட்டிருந்த கோயிலுக்கு தீ மூட்டி எரித்தான். கோயில் எரிந்து சாம்பலாயினும் அங்கிருந்த புனித அந்தோனியாரின் சுரூபமும் அது ஸ்தாபிக்கப்பட்டிருந்த கூடும் அதிர்ஷ்டவசமாக தப்பிவிட்டன. இது இன்று வரை உருவமும் ஒளியும் மங்காமல் அழகு சௌந்தர்யமாய் இருக்கின்றது. சந்தனக் கட்டையால் செதுக்கப்பட்ட திருச்சுரூபம் தீயின் கோரத்தில் தப்பியது மகா புதுமையே.

பல சான்றுகள் உள. மிக முக்கியமானதாக அமைந்தது ஒன்று. இக்கோயிலின் சீரசிறப்பையும் செழிப்பையும் கண்ட பதித அஞ்ஞானிகள் அழுக்காறு கொண்டிருந்தனர். அவர்களால் ஏவப்பட்ட ஓர் ஊமையன் என்று சொல்லப்படும் ஒருவன் ஓலையால் வேயப்பட்டிருந்த கோயிலுக்கு தீ மூட்டி எரித்தான். கோயில் எரிந்து சாம்பலாயினும் அங்கிருந்த புனித அந்தோனியாரின் சுரூபமும் அது ஸ்தாபிக்கப்பட்டிருந்த கூடும் அதிர்ஷ்டவசமாக தப்பிவிட்டன. இது இன்று வரை உருவமும் ஒளியும் மங்காமல் அழகு சௌந்தர்யமாய் இருக்கின்றது. சந்தனக் கட்டையால் செதுக்கப்பட்ட திருச்சுரூபம் தீயின் கோரத்தில் தப்பியது மகா புதுமையே.

பின்னர் 1842ஆம் ஆண்டளவில் இக்கோயில் சுண்ணாம்புக் கட்டடமாகக் கட்டப்பட்டது. இது றோமன் ஆர்ச் வடிவில் கட்டப்பட்டிருந்தது. பாரிய பெரும்சுவர்கள் சூழக் கட்டப்பட்டிருந்தன. இதன் சிங்காசனம் அடுத்தார் தெற்கேயும் பிரதான வாசல் வடக்கேயும் இருந்தது. இதற்கு வசதியாக கிழக்குப் பக்கத்தில் பங்குப்பணிமனை அமைந்திருந்தது. வடக்குத் தெற்காக இரு பெரும் விறாந்தையுடன் அமைக்கப்பட்ட பணிமனைக்கு கிழக்கு மேற்காக இரு சிறிய விறாந்தைகளும் இருந்தன. கிழக்குப் பக்கமாக சாப்பாட்டு அறை, களஞ்சிய அறை, சமையல் அறையும் அவற்றிற்கு அண்மையாக குளியல் அறையும், வடக்கு எல்லையில் மலசலகூடமும் அமைந்திருந்தன. மிக உயர்ந்த பணிமனை, காற்றோட்டம் மிகுந்த இரு அறைகளைக் கொண்டிருந்தது. தூரப்பங்குகளில் உள்ள குருக்கள் வந்து இளைப்பாறுவது வழமையாக இருந்தது.

நூறு வருடங்களின் பின்பு புகழ்பெற்ற பழைய கோயில் 1972ஆம் ஆண்டு இடிக்கப்பட்டு புனருத்தாரணம் செய்யப்பட்டது. இக்கோயில் முன்பு சுட்டப்பட்டிருந்த கற்களில் பெரும் பகுதி புதிய கோயிலுக்கு அத்திவாரமாகவும், பத்திரிப்பாகவும் கட்ட உபயோகப்பட்டன. அக்கோயில் கூரையாய் இருந்த மரங்களும் ஓடுகளும் புதிய கோயில் கோப்பிசம் அமைக்கவும். வேயப்படவும் பாவிக்கப் பட்டன. மேன்மை தங்கிய இராயப்பு யோசேப் ஆயர் (தற்போதைய மன்னார் ஆயரி) எமது கோயில் பங்குக் கட்டளைக்கு குருவாக இருந்த வேளை அவர்களால் அமைக்கப்பட்ட புதிய கோயில் பங்கு மக்களின் சிரமதானப் பணியாலும் உதவியாலும் கட்டப்பட்டது. தெற்குப் பக்கமாக வாசலைக் கொண்டி ருக்கும் கோயிலுக்கு வடக்கு முனையில் 1906ஆம் ஆண்டு வண அடிகளார் ஜென் (OMI) அடிக்கல் நாட்டி புதிய பெரிய சிங்காசனம் வைக்கக்கூடியதாக உயரிய பூசைப்பலி செலுத்துமிடம் கட்டப்பட்டது. முடிவுறாது இருந்த இந்தப் பலிப்பீட இடம் பின்னர் புதிய கோயில் கட்டப்படும் வேளையில் நிறை வுற்றது குறிப்பிடத்தக்கது.

இத்திருக்கோயிலில் பண்டுதொட்டு வருடத்தில் மாசி மாதம் 2ஆம் திகதி காணிக்கை மாதா திருநாளும் சுற்றுப்பிரகாரமும் நடந்து வந்தது. தொடர்ந்து பாஸ்கா விழாவாக பெரிய வியாழன், பெரிய வெள்ளி, பெரிய சனி. உயிர்த்த ஞாயிறு, திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டன. ஆவணி மாதம் 13ஆம் திகதி பரலோகமாதா திருநாளும், மார்கழி மாதம் 8ஆம் திகதி அமலமரியாள் திருநாளும் தொடர்ந்து நத்தார். புதுவருட விழாக்களும் பாரம்பரியமாகக் கொண்டாடப்பட்டன. எங்கள் ஊரில் பாஸ்கா விழா தொன்றுதொட்டு பயபக்தியுடன் கொண்டாடப்பட்டு வந்தன என்பதற்கு சான்று உள்ளன. கோயிலில் பேணிப்பாதுகாக்கப்பட்டு வரும் எச்சங்களில் காணும் பற்பல உருக்கள். கைகால் சிரசு உருக்கள், பழைய சிலுவைக்கல்லறைச் சுரூபம் அறைந்து இறக்கியதற்கு சான்றாக உள. 1958ஆம் ஆண்டிற்கு முன் 30 ஆண்டுகளாக செய்யப்படாத பாஸ் அவ்வருடம் செய்து காட்டப்பட்டது.இளைஞர்களின் ஒற்றுமையாலும் முயற்சியாலும் அது ஆனது. இதற்கு அடையாளமாக அன்று கட்டளைக் குருவாக இருந்த வண.பெனற்கொன்ஸ்ரைன் அடிகளார் திருப்பலி நிறைவேற்றிய புகைப்படங்களும் சிலுவை ஆராதனை செய்ததற்கான புகைப்படங்களும் உண்டு, நமது பங்கை சேர்ந்தவரால் வரையப்பட்ட உயிர்ப்புக்காட்சி படம் பலரது பார்வைக்கும் வணக்கத்திற்குமான கோயில் பழைய சுவரில் போடப்பட்டிருந்தது. மேலும் எங்கள் கோயில் சொத்துக்களான கொடிமரம். கல்லறைச் சுரூபம், பரலோக மாதா சுரூபம், காணிக்கைத் தாயார் சுரூபம் புகழ் மிக்கவை. புனித செபஸ்ரியார். புனிதறீற்றம்மாள், புனித திரேசம்மாள், புனித சவேரியார் சுரூபங்களும் உள்ளடங்கும் அவற்றோடு பிற்காலத்தில் சேர்க்கப்பட்ட லூர்து மாதாபுனித யூதாதேயு, சதாசகாயமாதா சுரூபங்களும் சேரும் முன்பிருந்து கொண்டாடப்பட்டு வந்த திரு இருதயநாதர் திருநாள், அதைத் தொடர்ந்து கொண்டாடப்பட்ட சற்ப்பிரசாதத் திருநாளும் பெரிய சுற்றுப்பிரகாரமும் அமையும். 1958ம் ஆண்டு முதல் இயந்திரத்தேரில் நற்கருணை கொண்டு செல்லப்பட்டது. காலஞ்சென்ற மோக் எமிலியானூஸ் ஆண்டகையின் உத்தரவின்படி இச்சுற்றுப்பிரகாரம் செய்யப்பட்டது.

இளைஞர் தொண்டு

1948ஆம் ஆண்டளவில் பங்குத்தந்தையாக இருந்த வண. ஆபிரகாம் சுவாமி திரு இருதயநாதர் சபையை ஸ்தாபித்து இளைஞர்களை ஆன்மீகத்திலும், சமூகசேவையிலும் ஈடுபடுத்தினார். 1945ஆம் ஆண்டளவில் பங்குத்தந்தையாய் இருந்த பீற்றர் அடிகள் இளைஞர் மீது காட்டிய ஆர்வத்தாலும் கவனத்தாலும் வளரும் இளைஞர்களுக்கென்று புனித அந்தோனியார் இளைஞர் மன்றத்தை உருவாக்கினார். இம்மன்றம் வளர்ச்சி அடைந்த காலத்தில் வருடாவருடம் ஆண்டு விழாக்கள் நடாத்தப்பட்டன. கலைநிகழ்ச்சிகள், நாடகங்கள். கூத்துக்கள் பல போட்டிகள் நடாத்தப்பட்டன.

1956ஆம் ஆண்டளவில் பங்குத்தந்தையாய் இருந்த வண.பாலந்தரம் சுவாமியாரால் மரியாயின் சேனை ஆரம்பிக்கப்பட்டது. பல அரிய சகோதர சேவைகளை மன்றத்தினர் முன்னின்று செய்தனர். காலஞ்சென்ற சலோமை வி.ஆனாசிப்பிள்ளை ஆகியோரால் சிறுவருக்கு மறைக்கல்வி வகுப்புக்கள் நடாத்தப்பட்டன. பிள்ளைகளை ஒழுங்காக திருப்பலியிலும், செபமாலையிலும், பங்குபற்றச் செய்தனர். மேலும் பாவசங்கீர்த்தனம், முதல்நன்மை. உறுதிப்பூசுதல் போன்ற தேவதிரவிய அனுமானங்கள் பெற ஆயத்த வகுப்புக்கள் நடத்தினர். இன்றுவரை ஆண்டு காலப்பகுதியில் பங்குத்தந்தையாக இருந்த வண.பெனற்கொன்ஸ்ரன்ரைன் அடிகளார் பூசைப்பரிசாரர்களையும் மாணவர்களையும் ஒன்று சேர்த்து புனித திரேசம்மாள் பூசைப் பரிசாரகர் சங்கம் கண்டார். அச்சங்கம் நாளிலும் பொழுதிலும் வளர்ச்சி கண்டுவந்தது. வழிபாடுகளும். ஆராதனைகளும் சிறப்புற்றன. அவரைத் தொடர்ந்து வந்த வண.சவிரிமுத்து அடிகளார் இளைஞரை ஒன்று கூட்டவும். ஒற்றுமைப்படுத்தவும் கலை வழியை ஆயுதமாகக் கண்டார். பல நாடகங்கள். பேச்சுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றங்களை நிகழ்த்தி இளைஞரிடையே பல திறமைகளை வெளிக்கொணர்ந்தார். சுன்னாகம் புனித அந்தோனியார் கோயில் குளமங்கால் புனித சவேரியார் கோயில், உரும்பிராய் சம்மிக்கேல்கோயில், மல்லாகம் மாதா கோயில், நீர்வேலி பரலோகமாதா கோயில். புன்னாலைக்கட்டுவன் இருதய ஆண்டவர் கோயில்களைச் சேர்ந்த பூசைப்பரிசாரர்களையும் இளைஞர்களையும் ஒன்று சேர்த்து போட்டி நாடகங்களை வைத்து இளைஞரின் ஆற்றலையும், சகோதரத்துவத்தையும் கண்டறிந்தார். இதனால் அவர் உற்சாகம் அடைந்து உரும்பிராய் சம்மிக்கேல் முன்றலில் வரலாறு காணாத கிறிஸ்துவின் பாடுகள் காட்சியை நடத்தினார். இதை நேரில் வந்து பார்த்த முன்னாள் யாழ்.ஆயர் காலஞ்சென்ற மேதகு எமிலியானுஸ்பிள்ளை OMI ஆண்டகையும் அவ்வேளை செயலாளர்களாக இருந்த தற்போதைய மட்டக்களப்பு ஆயர் மேதகு கிங்ஸ்லி சுவாம்பிள்ளையும், வண. A.செல்வராசா சுவாமியும் வண. சவிரி முத்துச்சுவாமியின் முயற்சியையும் வெற்றியையும் மிகுவாகப் புகழ்ந்து அவரால் உரும்பிராயில் ஆரம்பிக்கப்பட்ட திருமறைக்கலாமன்றத்திற்கும் ஆசீர் வழங்கினார்.

வைத்திய கலாநிதி ஜி.எட்வேட்

Scroll to Top