சுன்னாகம் தூய அந்தோனியார் ஆலயத்தில் உள்ள சிற்பம் மற்றும் செதுக்கல் வேலைப்பாடுகள்
புனித அந்தோனியார் ஆலய சிம்மாசனம்
சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலய வரலாற்று சான்றாதாரங்களில் மிகவும் முக்கியத்துவம் பெறும் சான்றாக அமைவது இவ் ஆலய புனிதர்களைத் தாங்கி நிற்கும் சிம்மாசனம் ஆகும்.
அக்காலத்தில் ஆலயத்திற்கு ஏனைய ஆலயங்களில் உள்ளது போன்று சிம்மாசனம் எமது ஆலயத்திற்கும் வேண்டும் என்ற எமது முன்னோரின் விருப்பம் பங்கு மக்களிடையே தோன்றியது. இதற்கு அமைய பெறப்பட்ட சிம்மாசனம் பிரம்மாண்டமாக அமைந்தாலும், விலை அதிகமாக இருந் தாலும் ஆலயப்பணிக்கென உண்டியலில் சேர்க்கப்பட்ட பணத்தினையும், அக்காலத்தில் எமது பங்கில் வசதி படைத்தவர்களில் ஒருவரான சின்னப்புவின் அன்பளிப்பு பணத்தினையும் பெற்று சிம்மாசனம் செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.அருட்தந்தை அன்ரன் பெஞ்சமின் அடிகளார் பங்குத்தந்தையாக இருந்த காலத்தில் சுன்னாகம் அந்தோனியார் ஆலயப் பங்கைச் சேர்ந்த அமரர் வைத்தி ஆசீர்வாதம் என்பவரின் மேற்பார்வையில் 1930 – 1936 காலப்பகுதியில் இவ் அழகிய சிம்மாசனம் நிர்மாணிக்கப்பட்டதாகவும், அதே காலத்திலேயே பாஷையூர் தூய அந்தோனியார் ஆலய சிம்மாசனமும் நிர்மாணிக்கப்பட்டதாகவும் இரண்டு சிம்மாசனங்களையும் ஒரே சிற்பாச்சாரியாரே செய்ததாகவும் அமரர் ஆசீர்வாதத்தின் மகளான திருமதி சிறிய புஷ்பம் சுகந்தரன் கூறுகின்றார்.
ஆலயத்தில் மிகவும் கம்பீரத் தோற்றத்துடனும், அழகுடனும் காணப்படும் சிம்மாசனம் முழுவதும் பர்மா தேசத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட தேக்கு மரத்தினால் ஆனது. கோதிக் முறையில் அமைந்த கிரேக்க உரோமக் கலையின் வடிவங்களை இச் சிம்மாசனத்தில் காணலாம்.
அடித்தளம், மத்திய தளம், மேல்தளம், ஆக உள்ள இச்சிம்மாசனம் 11 அடி 9 அங்குல நீளத் தினையும், 5 அடி 9அங்குலத்தையும் இருபத்திரண்டு அடி உயரத்தையும் உடையதாகும் (11′-9″×5′-9’×22′)
அடித்தளம்
சிம்மாசனத்தைத் தாங்கி நிற்கும் விதத்தில் அடித்தளத்தில் அலங்கார சொரூபங்கள் செதுக்கம் களுடன் கூடிய எட்டுத் தூண்கள் காணப்படுகின்றது. இத் தூண்களின் உச்சியிலும், அடியிலும் சிங்காசனத்தில் காணப்படுகின்ற தூண்கள் அனைத்திலும் கிரேக்க. உரோம காலத் தூண்களில் போல் செதுக்கப் பட்டுள்ளது. அகாந்தஸ், மொலீஸ் லீவ் (Acanthas Mollis Leaf) என்ற இலை வடிவங்களை ஒத்துக் காணப்படுகின்றது. மேலும் திருப்பண்டத்துடன் கூடிய நீள் சதுர வடிவமுள்ள பால் கல் ஒன்றும் வைக்கப்பட்ட பீடமும் அதன் கீழ் முன்பக்கமாக பெலிக்கான் பறவை வடிவம் ஒன்றும் அழகாக செதுக்கப்பட்டு காணப்படுவதுடன் இப்பகுதி முழுவதும் மூன்று இதழ்களுடன் கூடிய அலங்காறு வளைவுகள் காணப்படுகின்றன.
மத்திய தளம்
மத்திய தளத்தில் நற்கருணைப் பேழையும் அதன் மீது சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் திருச்சிலுவையும், இவற்றின் மீது கோண வடிவமுடைய கும்மட்டம் போன்ற பாவுகை அமைப்பு காணப்படுகின்றது. இவற்றின் இரு பக்கமும் சிறிய சுரூபக் கூடுகள் காணப்படுகின்றது. நற்கருணை பேழையின் கீழ் இரண்டு தட்டுக்களில் காணப்படும் சமாந்திரக் கோடுகளுக்கிடையில் அக்காந்தஸ் இலை இரு வேறு வடிவங்களில் நேர்த்தியான ஒழுங்கு வரிசையில் காணப்படுகின்றது. மேலும் இத் தளத்தின் இரு பக்க முடிவில் கொடி அலங்காரம் காணப்படுகின்றது. பேழையின் இருபக்கமும் குந்திரிக்க வகை சார்ந்த அலங்காரம் காணப்படுகின்றது
மேல் தளம்
மேல்தளத்தில் சுரூபங்கள் காணப்படுவதுடன் சுரூபங்களின் மேல் கோதிக் முறையில் அமைந்த பாவுகை அமைப்புக்கள் காணப்படுகின்றது. திருச் சொரூபங்களைத் தாங்கி நிற்கும் கூடுகளில் மூன்று இதழ்களை உடைய பூ அலங்கார வடிவங்கள், குந்திரிக்க அலங்காரம், போதி வடிவங்கள் விளிம்பு. ஓரங்களை அலங்கரிக்கும் இலை வடிவங்கள். பூவும், மொட்டும் போன்ற வடிவங்கள் சிம்மாசனத்தை அழகுபடுத்துவதின் உச்சியில் சிலுவை ஒன்று காணப்படுகின்றது.
மேலும் சிம்மாசனத்தின் உச்சியில் 4. 5. 6. கோண வடிவமுடைய பாவுகைகள் காணப்படு வதுடன் அதில் 3 இதழ்களை உடைய மலர் கொடி அலங்காரங்கள் காணப்படுகின்றன. பாவுகை மேல் உள்ள கூம்பு உச்சிகளில் மலரும் மொட்டும் போன்ற வடிவமுடைய செதுக்கல் வடிவம் காணப் படுகின்றது. சிம்மாசனத்தின் மேல விளிம்புகளில் துளைகளுடன் கூடிய 3 இதழ்களை உடைய அலங்கார வடிவம் என்பவற்றைக் காணலாம். மேலும் கூம்பு வடிவங்களின் நான்கு மூலைகளிலும்
கொடி அலங்காரம் காணப்படுகின்றன.
இந்த வகையில் அழகும். கம்பீரமும், பிரமிப்பும், புனிதமும் பாரம்பரிய கலை வேலைப்பாடுகளும் மிளிரும் இச்சிம்மாசனம் இங்கிலாந்தில் 1885ம் ஆண்டளவில் உருவான தூய பிரான்சிஸ் தேவால யத்தின் சிம்மாசனத்தை ஓரளவு ஒத்துள்ள தன்மையைக் இணையத்தளம் ஊடாக அவதானிக்க முடிகின்றது.
இலங்கை மேற்குலக காலனித்துவத்துக்கு உட்பட்டிருந்த காலத்தில் ஐரோப்பிய சிற்ப செதுக்கல் கலை பரவியது என்றும் இச்சிம்மாசனம் கிரேக்க, உரோம கலை வடிவமைப்பைப் பின்பற்றி வடிவமைக் கப்பட்டிருக்கின்றது என செதுக்கல் வேலைப்பாடுகளில் ஈடுபட்டவரும் கந்தையா தியாகராசா யாழ்ப்பாண தேசிய கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர், பப்சி மரியதாஸ் போன்றோர் கூறுகின்றனர்.
மேலும் 125ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பாஷையூர் தூய அந்தோனியார் ஆலயத் தினால் வெளியிடப்பட்ட யூபிலி மலரின் பாலையூர் தூய அந்தோனியார் ஆலய சிம்மாசனம் 1935 1940இக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றது என குறிப்பிடப்பட்டுள்ளது. இதிலிருந்து சுன்னாகம் தாய அந்தோனியார் ஆலய சிம்மாசனத்தை பின்பற்றி பாஷையூர் தூய அந்தோனியார் ஆலய சிம்மாசனமும் வடிவமைக்கப்பட்டிருக்கின்றதை அவதானிக்கலாம்.
அடுத்து எமது ஆலயத்தில் உள்ள கரூபக் கூடுகளினால் அந்தோனியார் கரூபக்கூடு (சிறியதும், தற்போது கூடு மாற்றப்பட்டு காணப்படுகின்றது) காணிக்கை மாதா கரூபக் கூடு, கல்லறை யேசுவின் கூடு, இருதய யேகளின் கூடு அந்தோனியார் சுற்றுப் பிரகாரக் கூடு என்பவற்றில் சிறந்த கலை செதுக்கல் வடிவங்கள் நிறைந்ததாகக் காணப் படுகின்றது. இக் கூடுகளில் உள்ள செதுக்கல் வடிவங்கள் சிம்மாசனத்தில் உள்ள செதுக்கல் வடிவங்களைப் பெரிதும் ஒத்துக் காணப்படுகின்றது.
175 ஆண்களுக்கு முன்பு இருந்த தூய காணிக்கை மாதா கோவில் தீயவர்களால் தீ மூட்டி எரிக்கப்பட்ட போது ஆலயம் முழுவதும் எரிந்து சாம்பலாகிவிட்டது. ஆனால் தூய அந்தோனியார் சுரூபமும் இச்சுரூபத்துடன் முன்பு இருந்த கூடும் (தற்போது உள்ள கூடு புதியது) எவ்வித சேதமும் இன்றி காணப்படுகின்றது. இத்தூய அந்தோனியாரை (சிறிய சுரூபமி) தாங்கி நின்ற கூட்டின் செதுக்கல் வடிவங்களை பின்பற்றியே சிம்மாசனமும், ஏனைய சுரூபக் கூடுகளினதும் செதுக்கல்களும் வடிவங் களும் பல்வேறு பரிமாணங்களில் ஆக்கப்பட்டுள்ளது என கருதுகின்றேன். ஸ
தற்கால சூழலில் யாழ் குடாநாட்டில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் காணப்படும் சிற்பங்கள். செதுக்கல்கள், பழமை வாய்ந்த பொருட்கள் அகற்றப்பட்டு அழிக்கப்பட்டு விற்கப்பட்டு தேவாலயங் களின் அரும் அடையாளங்களும் மூலாதாரங்களும் ஒழிக்கப்பட்டு வருகின்றமை கத்தோலிக்க சமய எதிர்கால சந்ததியினரின் விசுவாசத்தினையும், இருப்பினையும் கேள்விக் குறியாக்கி வருகின்றது.
இந்நிலையில் எமது தூய அந்தோனியார் ஆலயம் 175 ம் ஆண்டில் கால் பதித்து நிற்பதோடு, விசுவாசத்தின் ஆணிவேராக விளங்கிய எமது முன்னோர்கள் கட்டிக் காத்த கத்தோலிக்க சமய, வழிபாட்டு, கலை, கலாசாரம், பாரம்பரிய கலைப்பொருட்கள் எமது ஆலய வரலாற்றை சான்று பகருவனவாக உள்ளதோடு அதனை எமது தற்கால சந்ததியினர் பாதுகாத்து வருகின்றமை குறிப்பிடத் தக்கதாகும்.
1. கூட்டில் உள்ள அந்தோனியார்
இத்தூய அந்தோனியார் சுரூபம் மிகவும் பழமையான சுரூபம் ஆகும். இச்சுரூபம் போத்துக்கேயரால் தருவிக்கப்பட்டது என்றும் இச்சுருபம் சந்தன் மரத்தினை ஊடகமாகக் கொண்டு செதுக்கப்பட்டது என்றும் கூறப்பட்டு வருகின்றது என்றும் இச்சுரூபத்தின் காலப்பகுதி குறிப்பிட முடியவில்லை.
இத்திருச்சுரூபத்தில் இருந்து அற்புதம், சாந்தம், அன்பு, சுருணை. அமைதி, பரிவு, இரக்கம் போன்ற பல நல்ல குண இயல்புகள் வெளிப்படுவதை அவதானிக்கலாம்.
இத்தூய சுரூபம். சிறிய அலங்கார எண்கோண பீடத்துடன் சேர்த்து நின்ற நிலையில் ஒரு அடி மூன்று அங்குல் உயரம் உடையதாகக் காணப்படுகின்றது, தூய சுரூபத்தின் ஆடை பற்றி நோக்கும் போது வெண்ணிற முழு நீள முழுக்கை ஆடையின் மேல் பொன்மஞ்சள் நிறத்தை உடைய மேல் அங்கி ஒன்றும் அதன் விளிம்பில் சதுர வடிவமுடைய கரை அலங்காரமும் காணப்படுகின்றது. மேலும் இடுப்பில் கபில நிறத்தை உடைய கயிறு ஒன்றும், இடுப்பை சுட்டியவாறும், கழுத்து தோள்பட்டையைக்பில் நிறத்தை உடைய ஸ்காப் கழுத்தைச் சுற்றிக் காணப்படுகின்றது. அத்துடன் தூயவரின் இடது கரத்தில் உள்ள விவிலியத்தின் மீது குழந்தை யேசு அமர்ந்த நிலையில் காணப்படுகின்றார். புனிதரின் வலது கரத்தில் லில்லிமலரக் கொத்து இருந் திருக்கலாம் என கருதப்படுகின்றது. புனிதரின் தலையின் பின்னால் ஒளிவட்டம் காணப்படுவதும் குறிப்பிடத்தக்கதாகும். அத்துடன் சுரூபத்தில் உள்ள குழந்தை யேசுவோடு சேர்ந்து உலோகத்திலான குடை ஒன்றும் காணப்படுகின்றது.
2. சிம்மாசனத்தில் உள்ள அந்தோனியார் சுரூபம்
பலிப்பீடத்தில் உள்ள சிம்மாசனம் முழுவதும் மரத்தினால் ஆனதாகும். அச் சிம்மாசனத்தில் காணப்படும் தூய அந்தோனியார் சுரூபம் பெரிய அளவிலான சுரூபம் ஆகும். இவ் அந்தோனியார் சுரூபம் முழுவதும் மரத்தினால் ஆனதுடன் சிறிய சதுர பீடத்தோடு ஐந்து அடி. ஒரு அங்குல உயரம் உடையதாகவும் நின்ற நிலையை உடையதாகவும் காணப்படுகின்றது. புனிதரின் இடது கையில் உள்ள குழந்தை யேசு வலது கால் மேல் இடது காலை வைத்தவாறு அமர்ந்துள்ள நிலையிலும் தனது இடது கையினை நெஞ்சின் மேல் வைத்தவாறும் வலது கரத்தினால் அப்பம் வழங்குமாக உள்ள காட்சி பக்தர்களுக்கு என்றுமே புனிதரால் அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றமை புலனாகின்றது. புனிதரும், குழந்தை யேசுவினதும் கண்கள் பக்தர்களை உற்றுப் பார்த்தவாறு காணப் பார்த்தவாறு காணப்படுகின்றது, மேலும் புனிதரதும், குழந்தை யேசுவினதும் திருமுகங்களில் இருந்து அன்பு, அரவணைப்பு, கருணை, பரிவு, இரக்கம், சாந்தம், அமைதி, அபயம் போன்ற குணப்பண்புகள் வெளிப்படுவதை அவதானிக்க முடிகின்றது.
ஆடை மடிப்புக்கள் உள்ளதாகவும், நீண்ட முழு நீள ஆடையாகவும் முழு நீளக்கைகளை உடைய ஆடையாகவும் காணப்படுகின்றது. புனிதரின் இடுப்பைச் சுற்றி கயிறு கட்டிய நிலையிலும் இடது பக்க நாரியில் ஆடையுடன் ஒட்டிய நிலையில் பரிசுத்த செபமாலை ஒன்றும் காணப்படுகின்றது.
இத்தூய சுரூபங்களின் முகம், கை, பாதம் என்பவற்றிற்கு இளஞ்சிவப்பு வர்ணச் சாயல் நிறமாக தீட்டப்பட்டு ஒளிபொருந்தியதாகக் காணப்படுகின்றது. மேலும் புனிதரின் ஆடை கபில வர்ணமாகவும். குழந்தை யேசுவின் ஆடை வெண்ணிறமாகவும் அதில் நான்கு இதழ் உடைய பூ அலங்காரம் பரவலாகக் காணப்படுகின்றது. தலைமுடி, இமை என்பவற்றிற்கு கபில வர்ணச் சாயலும் கண்கள் நீல நிறமுடையதாகவும் காணப்படுகின்றது. குழந்தை யேசுவின் கழுத்து, கை, கால் போன்றவற்றின் பட்டிகள் பொன்னிறத்தால் வர்ணம் தீட்டப்பட்டுள்ளது. எண்ணெய் வர்ண ஊடகத்தினால் வர்ணம் தீட்டப்பட்டுள்ளது.
3. சிம்மாசனத்தில் உள்ள தூய கன்னி மரியாளின் சுரூபம்
யேசுவின் தாயாரான தூய கன்னி மரியாளின் திருச்சுரூபம் இது ஆகும். மரியாள் தனது இருகரங்களைக் கூப்பியவாறு மக்களுக்காக இறைவனை மன்றாடியவாறு நின்ற நிலையில் காணப்படுகின்றார். முழுவதும் மரத்தினை ஊடகமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. தலையில் பித்தளை ஊடகத்தினாலான கிரீடம் அணிந்த நிலையில் தனது வலது நுனிப் பாதத்தினை பிறைச் சந்திரன் மீது வைத்தும், இடது காலினால் பாம்பினை மிதித்தவாறு காணப்படுகின்றார். இத்தூய சுரூபம் மூன்று அடிமூன்று அங்குல உயரமுடையது. முழு நீள ஆடை அணிந்துள்ளதுடன் தலையின் மேல் இருந்து பின்பக்கமாக போர்த்தியுள்ள மேல் அங்கி வலது பக்கமாக இருந்து இடது கையின் மேலாக சென்று தொங்கிய நிலையில் காணப்படுவதுடன் ஆடை மடிப்புக்கள் நிறைந்ததாக உள்ளது.
இத்தூய சுரூபத்தின் வர்ணம் எண்ணெய் வர்ண ஊடகத்தினாலானது. முழு நீள ஆடை வெண்ணிறமாகவும், மேல் அங்கி நீல வர்ணச் சாயலாகக் காணப்படுவதுடன் நட்சத்திர வடிவமுடைய அலங்காரம் பரவலாகக் காணப்படுகின்றது. சந்திரன் செம்மஞ்சள், வெண்ணிறமாகவும், பாம்பு கறுப்பு நிறத்தினாலும் வர்ணம் தீட்டப்பட்டுள்ளது. தலைமுடி கபில வர்ணத்தினாலும், முகம், கை, பாதம் என்பன இளஞ்சிவப்பு வர்ணச் சாயலையும் உடையதாகக் காணப்படுகின்றது. இத்தூய மரியாளின் முகத்தில் இருந்து அன்பு, பரிவு, இரக்கம், பாசம், கருணை, வேண்டுதல் போன்ற குண இயல்புகளைக் காணலாம்.
.4. தூய செபஸ்ரியார் திருச்சுரூபம்
தூய செபஸ்ரியாரின் திருச்சுரூபம் ஆகும். முழுவதும் மரத்தினை ஊடகமாக வைத்து ஆக்கப் பட்டுள்ளது. இத்தூயவரின் கைகளை பின்பக்கமாக இடது கை மீது வலது கையை வைத்து பின்னால் உள்ள மரத்தில் கட்டப்பட்டு நின்ற நிலையை உடையதான இச்சுரூபம் மூன்று அடி ஏழு அங்குல உயரமுடையதாகக் காணப்படுகின்றது. வலது காலினை நீட்டியவாறு இடது கால் முழங்காலை சற்று மடித்தவாறு உடலில் அம்பு பாய்ந்த காயங்களுடன் காணப்படுகின்றார். இடுப்பில் கட்டப்பட்டிருக்கும் ஆடை மடிப்புக்களோடு மிகுதிப் பகுதி பின்னால் நீண்டு தரையில் முட்டியவாறு காணப்படுகின்றது. முகம் இடது பக்கமாக சற்று முன்னால் மேல்நோக்கி இறைவனை வேண்டுவது போன்று வடிவமைக் கப்பட்டுள்ளது.
இப் புனிதரின் உடல் காயங்களால் ஏற்பட்ட வேதனை, இயேசுவுக்காக மரிக்கவும் தயாராகும் நிலை, அமைதி, இரந்து கேட்கும் தன்மை போன்ற உணர்வுகள் வெளிப்படுமாறு செதுக்கி வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்தூயவரின் காலடியில் போர் வீரர்கள் பாவிக்கும் தலைக்கவசம் காணப்படுகின்றது. இக்குறியீட்டின் மூலம் இத்தூயவர் போர் வீரராக இருந்தவர் என்பது புலனாகின்றது.
இவரது உடல் இளஞ்சிவப்பு வர்ணச் சாயலையும், தலைமுடி, மரம், கபில நிறமாகவும். ஆடை சிவப்பு நிறமாகவும், தலைக் கவசம் வெண்ணிறம் போன்ற வர்ணங்கள் தீட்டப்பட்டுள்ளது. எண்ணெய் வர்ண ஊடகத்தினால் நிறந்தீட்டப்பட்டுள்ளது.
5. தூய சூசையப்பர் சுரூபம்.
சிம்மாசனத்தில் உள்ள சுரூபங்களில் மற்றுமொரு சுரூபம் இயேசுக் கிறிஸ்துவின் தந்தையாகிய தூய சூசையப்பர் ஆவார். பாதுகாவலராக விளங்குகின்றார். இத்தூய சுரூபம் வெண்சுண்ணாம்பு ஊடகத்தினால் ஆனதோடு நின்ற நிலையை உடையதாகவும் மூன்று அடி ஆறு அங்குலம் உயரம் உடையதாகவும் காணப்படுகின்றது. தூய சூசையப்பர் வலது கரத்தினால் தமது குழந்தை இயேசுவை சுமந்த நிலையிலும் இடது கை நோக்கி உள்ளதோடு கையில் லில்லி மலர்ச் செண்டு இடது கை ஆடையுடன் ஒட்டிய நிலையில் காணப்படுகின்றது.
இத்தூயவரின் கரத்தில் இருக்கும் குழந்தை இயேசுவின் வலது கை அபயம் வழங்கியவாறு வலது கால் மேல் இடது கையினால் உலகை மடியில் வைத்து தாங்கியவாறும் காணப்படுகின்றது.
இச்சுரூபத்தின் மூலமாக அன்பு, கருணை, சாந்தம், அமைதி, இரக்கம், பரிவு போன்ற குண இயல்புகள் வெளிப்படுவதைக் காணலாம்.
மேலும் தூயவரினதும், யேசுவினதும் உடல் இளஞ்சிவப்பு வர்ணச் சாயல் கொண்டு வரணம் தீட்டப்பட்டுள்ளதுடன் உடலில் முழுநீள ஆடை சாம்பல் வர்ணமாகவும் வலது தோள்பட்டை தாங்கி உடலை சுற்றப்பட்டுள்ள மேல் அங்கி கபிலம். கபில வர்ணச் சாயலை உடையதாகவும்,மேல அங்கியில் நான்கு இதழுடைய பூ அலங்காரம் பரவலாகக் காணப்படுகின்றது. சூசையப்பரின் தலைமுடி, தாடி. மீசை, இமை என்பன கடும் கபில வர்ணமாகவும், குழந்தை யேசுவின் தலைமுடி, இமை மெல்லிய கபில நிறத்தினாலும் தீட்டப்பட்டுள்ளது.
இத்தூய சூசையப்பரின் வலது பாதம் முன்னோக்கியும் இடது கால் சற்று மடிந்து பக்கப்பாட்டில் பாதம் வெளிப்படுமாறு பக்தர்களை மேல் நின்றவாறு கீழ் நோக்கி பார்த்தவாறு நடந்து வருவது போன்று உள்ளதுடன் ஆடை மடிப்பு உடையதாகக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
6.தூய யூதாததேயு சுருபம்
சிம்மாசனத்தில் காணப்படும் சுரூபங்களுள் தூய யூதாததேயு சுரூபமும் ஒன்றாகும். இச்சுரூபம் முழுவதும் மரத்தால் ஆனதுடன் இதன் உயரம் மூன்று அடி,ஒரு அங்குலமாகும். புனித யூதாததேயு ஓர் நற்செய்தியாளரும், பிணிகளைக் குணமாக்குபவரும், பேய்களை ஓட்டுபவரும் ஆவார். இத்தூயவர் தனது இடது கையை நெஞ்சில் வைத்தவாறும் வலது கையினால் நற்செய்தி கூறுவது போன்று காணப்படுவதுடன் இடது காலை சற்று முன்னேயும் வலது காலை சற்று பின்னாக வைத்தவாறும் நின்ற நிலையில் காணப்படுகின்றது. மேலும் இயேசுவின் திருமுக உருவம் பொறிக்கப்பட்ட இலச்சினை நெஞ்சுப் பகுதியில் ஆடையுடன் ஒட்டிய நிலையில் அணிந்து உள்ளது.
கழுத்தில் இருந்து பாதம் வரை முழுநீள ஆடையின் மேல் அங்கி ஒன்று வலது தோள்ப்பட்டையை குறுக்காக மூடியவாறு காணப்படுகின்றது. ஆடை மடிப்புடையதாக உள்ளது.
இளஞ்சிவப்பு வர்ணச் சாயல், இளம் கபில வர்ணச்சாயல் போன்ற வர்ணங்கள் மூலம் முகம். கை, பாதம் என்பன நிறந்தீட்டப்பட்டுள்ளன. தலைமுடி, தாடி, மீசை என்பன கபில வர்ணமும் தீட்டப் பட்டுள்ளது. நீள முழுக்கை, வெண்ணிற ஆடையுடன் அதன் மீது வலது தோற்பட்டையை மூடியவாறு மடிப்புக்களுடன் கூடிய பச்சை நிற மேல் அங்கி ஒன்றும் காணப்படுகின்றது. இலச்சனைக்கு செப்பு வர்ணம் தீட்டப்பட்டுள்ளதோடு, கண் நீலம், பச்சை நிறமாக எண்ணெய் வர்ண ஊடகத்தைக் கொண்டு வர்ணம் தீட்டப்பட்டுள்ளது. (கண் நீலப்பச்சை நிறமாகும்)
7.காணிக்கை மாதா சுரூபம் (கூடு)
எமது ஆலயத்தின் சுரூபக் கூட்டில் உள்ள மற்றுமொரு சிறந்த சிற்ப சுரூபமாக காணப்படுவது காணிக்கை மாதா சுரூபமாகும். முழுவதும் மரத்தினை ஊடகமாக வைத்து இச்சுரூபம் அன்பு, பரிவு, இரக்கம், கருணை, சாந்தம். அமைதி போன்ற குணப்பண்புகளை வெளிப்படுத்துகின்றதோடு நின்ற நிலையை உடையதாகும். இத்தூய மரியாள் உருவம் பாதம் வரை நீண்டு காணப்படுவ தோடு முழுக்கை ஆடையாகவும், மேல் அங்கி மரியாளைச் சுற்றி இடது கை அதனைத் தாங்கிய நிலையில் உள்ளது. மரியாள் தலைக்கிரீடம் அணிந்த நிலையில் இடது காலினை முன்னால் வைத்தும் வலது கால். முழங்காலினை சற்று மடித்து நின்ற நிலையில் காணப்படுகின்றது. வலது கரம் கீழ் நோக்கி நீண்டு சற்று மடிந்த நிலையில் இடது கையில் குழந்தை இயேசுவைத் தாங்கியவாறு காணப்படுகின்றது. குழந்தை இயேசு தாயின் கையில் அமர்ந்த நிலையில் தனது வலது கையினால் அபயம் அளிப்பது போன்றும் இடது கை உலகத்தைத் தாங்கியவாறும் காணப்படுகின்றது.
மரியாளின் ஆடை வெண்ணிறமாகவும், மேல் அங்கி நீல வர்ணம், வர்ணச் சாயலை உடைய தாகவும் உள்ளதோடு முகம், பாதம், கரங்கள், இளஞ்சிவப்பு வர்ணச் சாயலையும் உடையதாகும். மேலும் தலைமுடி, கபிலமாகவும் கிரீடம் செப்பு வர்ணமாகவும் காணப்படுவதுடன் குழந்தை இயேசுவின் ஆடைவெண்ணிறமாகவும், உலகம் நீல வர்ணத்திலும் காணப்படுகின்றது. எண்ணெய் வர்ண ஊடகத்தினால் வர்ணம் தீட்டப்பட்டுள்ளது
8.ஆலய கல்லறைக் கூட்டில் உள்ள இயேசுவின் திருச்சுரூபம்
இவ்வாலயத்தின் மற்றுமொரு பெரிய சுரூபம் கல்லறையில் காணப்படும் இயேசுவின் சுரூபம் ஆகும். இச்சுரூபம் உறங்கிக் கொண்டிருக்கும் நிலையில் ஆறு அடி எட்டு அங்குல உயரமுடையது. முழுவதும் மரத்தினால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இக்கல்லறைக் கூட்டில் முள்முடி, ஆணிகள். கயிற்று முடிச்சுக்கள், கப்பி, துணி போன்ற பொருட்கள் காணப்படுகின்றது.
சாந்தம், கருணை, இரக்கம், பரிவு, தியானம், வேதனை போன்ற பல நல்ல குணப்பண்புகள் வெளிப்படுவதோடு இளம்சிவப்பு வர்ணச் சாயல் நிறம் உடல் முழுவதும் தீட்டப்பட்டுள்ளதுடன் தலைமுடி தாடி கபில நிறமாகவும் உடலில் நரம்பு மண்டலம் வெளிப்படும் விதத்தில் இளம் பச்சை வர்ணச் சாயல் நிறங்கள் தீட்டப்பட்டு இயேசுவின் உடல் மகிமை வெளிப்படுத்தப்பட்டு காணப்படுகின்றது. மேலும் இச்சுரூபத்தில் உள்ள ஐந்து காயங்களும் சிவப்பு வர்ணத்தினால் தீட்டப்பட்டு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இத்திருச்சுரூபம் வருடம் தோறும் பெரிய வெள்ளிக்கிழமை அன்று சிலுவை மரத்தில் அறையப் படும் காட்சி (உடக்குபாஸ்)யும் பின்பு ஆசந்தி சுற்றியும், நூல் அளந்துமாக நிகழ்வு நிறைவு பெறுவது வழமையாகும்.
9. திருஇருதய இயேசுவின் திருச்சுரூபம்
இவ்வாலயத்தின் திருஇருதய இயேசுவின் சிற்பம் ஒன்றும் காணப்படுகின்றது. இயேசு தனது தூய்மையான இருதயத்தையும் அதில் உள்ள இரத்தத்துளியையும் காண்பிக்கும் இச்சுரூபம் மூன்றடி உயரமுடையதாகும். மேலும் இச்சுரூபம் சுண்ணாம்பு ஊடகத்தினால் ஆனதாகும்.
நின்ற நிலையுடைய இயேசு வலது காலை முன்னே ஊன்றியும் இடது கால் முழங்காலை சற்று முன்னே மடித்தும் பாதத்தைப் பக்கப்பாடாக வைத்தும் சற்று திரிசங்க நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். வெண்ணிற முழு ஆடையின் மேல் சிவப்பு நிற மேல் அங்கி அணிந்த நிலையில் காணப்படுகின்றார். இடது கரத்தினால் மேல் அங்கியைத் தூக்கி தனது திருஇருதயத்தைக் காண்பிக்கின்றார். மேலும் வலது கரத்தினை நெஞ்சில் வைத்தவாறு உள்ளவாறு ஆடை மடிப்புள்ளதாகக் காணப்படுகின்றது.
முகம், பாதம், கரங்கள். இருதயம் என்பன இளஞ்சிவப்பு வர்ணச் சாயலையும், தலைமுடி, தாடி. மீசை என்பன கபில வர்ணத்தினாலும் நிறந்தீட்டப்பட்டுக் காணப்படுகின்றது. மேலும் இச்சுரூபம் வார்த்தல் நுட்பமுறையில் அமைந்ததாகும்.
10.ஆலய முகப்பில் உள்ள தூய அந்தோனியார் சுரூபம்
இத்தூய சுரூபம் ஆலயத்தின் முகப்பில் காணப்படுகின்றது. முழுவதும் சீமெந்து ஊடகத்தினால் அப்புதல் நுட்பமுறை மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. நின்ற நிலையுடைய இச்சிற்பம் அங்குல உயரம் உடையதாகும். இடது கையில் திருவிவிலியமும் அதன் மீது குழந்தை இயேசு அமர்ந்த நிலையில் இடது கரத்தினால் புனிதரின் நாடியை அசைத்து ஏதோ கூறுவது போன்றும் வலது கரத்தினால் உலகினை அணைத்தவாறும் காணப்படுகின்றார்.
புனிதரின் முழு நீள ஆடை கபில நிறத்தினாலும் இடுப்பு கயிற்று முடிச்சு வெண்ணிறத்தினாலும் தீட்டப்பட்டுள்ளது. இருவரின் உடலும் இளஞ்சிவப்பு வர்ணத்தினால் தீட்டப்பட்டுள்ளதோடு சற்று திரிசங்க நிலையில் காணப்படுகின்றது. உலகம் நீல வர்ணத்தினாலும் தீட்டப்பட்டுள்ளது. மேலும் ஆலய வளவின் முன்பாக தென்கிழக்கு மூலையிலும் காணப்படுவது அந்தோனியார் சுரூபமாகும். இச்சுரூபம் சுண்ணாம்பு ஊடகத்தினால் ஆனதாகும். இச்சுரூபம் வழிகாட்டி அந்தோனியார் என்று கூறப்படுகின்றது.
11.நற்கருணைப் பேழை மீதுள்ள சிலுவையும் இயேசுவும்
சிம்மாசனத்திலுள்ள நற்கருணைப் பேழையின் மேல் சிலுவையில் தொங்கும் இயேசுவின் உருவம் காணப்படுகின்றது. இச்சிலுவை மரத்தில் பித்தளை உலோகத்தினால் ஆன இயேசுவின் உருவம் காணப்படுவதுடன் உடல் இளஞ்சிவப்பு வர்ணச் சாயல் கொண்டு வர்ணந் தீட்டப்பட்டுள்ளது. தலை முடி. தாடி,மீசை, இமை என்பன கபில வர்ணத்தினாலும் நிறந்தீட்டப்பட்டுள்ளது. முள்முடி பச்சை நிறத்தினாலும் ஆடை வெண்ணிறத்தினாலும் நிறந்தீட்டப் பட்டுள்ளது.
சிலுவை மரம் கறுப்பு நிறத்தினாலானதாகக் காணப்படுவதுடன் சிலுவை மரத்தின் அடியில் Acanthus leaves என்ற கிரேக்க இலை வடிவம் அலங்காரமாகச் செதுக்கப்பட்டுக் காணப்படுகின்றது. இச்சிலுவை மரத்தில் நான்கு இதழ் கொண்ட பின்னற மலர் அலங்காரம் ஐந்தும், குந்திரிக்கம் என்ற அலங்காரமும் செதுக்கப்பட்டுள்ளது.
அடுத்து இவ்வாலயத்தில் உள்ள சிம்மாசனத்தின் அடியில் பழமை வாய்ந்த இயேசுவின் திருவருவர்கரூபம் காணப்படுகின்றது. இர்கருபம் இது கல்லறை! சிலுவை இயேசுவின் சிலையாக இருக்கலாமெனக் கருதப்படுகின்றது.
இங்குள்ள கருபங்களோடு மேலும் லூர்து மாதா, உயிர்த்த இயேசு, தூய் டொமினிக்சாவியோ, சதா சகாயமாதா, குழந்தை இயேசு போன்ற பல சுரூபங்கள் காணப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.
சிம்மாசனத்திலுள்ள கரூபங்கள். கூடுகளிலுள்ள சுருபங்கள், ஏனைய சுரூபங்கள் அனைத்தும் மிகவும் பழமையான சுரூபங்களாக உள்ளதோடு உயிர் துடிப்புள்ள திருச்சுரூபங்களாகவும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். மேலும் இங்குள்ள சுரூபங்களுக்கு தீட்டப்பட்டுள்ள வர்ணங்கள் எண்ணெய் வர்ண ஊடகமாகும். அதே வேளை உயிர்த்துடிப்பு வெளிப்படும் வகையில் அனைத்து சுரூபங்களுக்கும் ஆசிரியரும். ஓவியரு மான திரு.ம.டொமினிக் ஜீவா அவர்களால் வர்ணம் தீட்டப்பட்டு அழகுபடுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்தத் தேவாலயத்தில் உள்ள மரத்தினாலான சுரூபங்கள் அனைத்தும் போத்துக்கேயர் காலத்தைச் சேர்ந்தது என்று வாய்மொழிப் பாரம்பரியமாகப் பேசப்பட்டு வருகின்ற போதும் அவற்றினை ஆய்வுக்குட்படுத்தி இவற்றின் நீண்ட கால உண்மைகளை வெளிக்கொணரும் பொருட்டே இவற்றினை எழுதியுள்ளேன்.
175ஆவது ஆண்டை முன்னிட்டு வீடு தரிசிப்பதற்காக புதிய அந்தோனியார் சுரூபம் கொள் வனவு செய்யப்பட்டு பங்குத்தந்தையால் ஆசீர்வதிக்கப்பட்டு பங்குமக்களின் வீடுகளுக்கு தரிசிப் பதற்காகவும், ஜெபிப்பதற்காகவும் எடுத்துச் செல்லப்பட்டு வருகின்றது. இவ் அந்தோனியார் சுரூபம் அழகும், நேர்த்தியும், புனிதமும், சாந்தமும் உடைய இயல்புகளுடன் காணப்படுகின்றது.
திரு.அ.சைமன்
(ஆசிரியர். யாழ். யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி)