மே 18, ஞாயிறனன்று வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் உரோம் உள்ளூர் நேரம் காலை 10 மணியளவில் இந்திய இலங்கை நேரம் பிற்பகல் 1.30 மணியளவில் திருஅவையில் 267-ஆவது திருத்தந்தையாகப் பொறுப்பெற்கும் திருவழிபாட்டு சடங்கானது நடைபெற இருக்கின்றது.
இவ்வழிபாட்டின்போது பால்யம் எனப்படும் கழுத்துப்பட்டை, மீனவர் மோதிரம் புதிய திருத்தந்தைக்கு வழங்கப்பட இருக்கின்றது. திருத்தூதர் பேதுருவின் கல்லறைக்குச் சென்று செபித்து, அங்கிருந்து வத்திக்கான் வளாகத்தை கீழைவழிபாட்டு முறை தந்தையர்கள் மற்றும் கத்தோலிக்க திருஅவை கர்தினால்களுடன் இணைந்து பவனியாக வந்தடைகின்றார் திருத்தந்தை.
