தூய ஆவியார் பெருவிழா – சுன்னாகத்தில் ஆயத்த வழிபாடு

இளவாலை மறைக்கோட்ட அருட்பணியாளர்களின் நெறிப்படுத்தலில் நடைபெறும் தூய ஆவியார் பெருவிழா ஆயத்த வழிபாடும் திருப்பலியும் சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலயத்தில் எதிர்வரும் 22.05.2026 வெள்ளிக்கிழமை மாலை 6:00மணிக்கு திருச்செபமாலையுடன் ஆரம்பமாகவுள்ளது.

இதன் பிரகாரம் மாலை 6:00 மணிக்கு திருச்செபமாலையும் தொடர்ந்து 7:00 மணிக்கு திருப்பலியும் அதனைத்தொடர்ந்து 8:30 வரை தூய ஆவியார் வழிபாடும் இடம்பெறும் என தெரிவித்துள்ள சுன்னாகம் பங்குத்தந்தை எம். நிக்சன் கொலின் அடிகளார் இறையருள் பெற அனைவரையும் அழைத்துநிற்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top